வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் நடித்த 14 ரியல் பாம்புகள்! இறந்த 4ஐ தேவர் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: வெள்ளிக்கிழமை விரதம் என்ற திரைப்படத்தில் 14 பாம்புகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் 4 பாம்புகள் இறந்துவிட்டன. உடனே தேவர் என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: பாம்பு... பார்த்த உடனே இதயம் படபடக்கும். அந்த படபடப்பு தான் இந்த சினிமாவின் மூலதனம். 'வெள்ளிக்கிழமை விரதம்' படம் எடுக்க தேவர் தீர்மானித்த போது அந்த படத்தை முதன் முதலாக இயக்க தன் மருமகன் தியாகராஜனை அழைத்தார். அது வரை தம்பி திருமுகம் தான் தேவரின் படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர்.

தியாகராஜன் இளையவரானதால் படமும் ரொம்ப இளமையாக வந்திருந்தது. ஒரு பாம்பு ஒரு பெண்ணுக்கு காவலனாக இருக்கும் அந்தக் கதையை நம்பும் விதமாக தேவர் இயக்கியிருந்தார். படத்தில் முக்கியமானவர்கள் சிவக்குமார், ஜெயசித்ரா மூன்றாவதா இந்த பாம்பு...
படத்தில் முக்கியமான காட்சி தன் பக்திக்குண்டான பாம்பு இறந்து விட்டதாக கருதிய ஜெயசித்ரா மயங்கி விடுவார். அவரை பாம்பு சந்திக்க வரும். பாம்பு இறங்கி வலப்புறமாக ஜெயசித்ராவின் கட்டில் இருக்கும் இடமாக வர வேண்டும். ஆனால் பாம்பாட்டி ஒவ்வொரு முறையும் இடப்புறமாகவே போகும்.
தேவர் டென்ஷனாகி கத்தத் தொடங்கி விட்டார். முருகா என்று கடவுளை வணங்கத் தொடங்கிவிட்டார். 17-வது ஷாட்டில் பாம்பு சரியாக வலது புறமாக இறங்கி ஜெயசித்ராவின் கட்டிலுக்கே சென்ற போது தேவர் "முருகா" என நெகிழ்ச்சியோடு கத்தியதாக சொல்வார்கள்.
படத்தில் அந்தக் காட்சியில் ஜெயசித்ராவின் மார்பில் பாம்பு படமெடுத்து ஜெயசித்ராவை பார்க்க வேண்டும். ஜெயசித்ரா வசனம் பேச வேண்டும். தேவர் பாம்பின் தலையை தட்டி அது படமெடுத்ததும் அப்படியே தூக்கி ஜெயசித்ராவின் மார்பில் வைத்து விட்டார். ஜெயசித்ராவும் பீதியடையாமல் வசனத்தை பேசி நடித்தார். படத்தில் தன் டென்ஷனை குறைக்க அவர் லேசாக சிரிப்பது நன்றாக தெரியும்.
வெள்ளிக்கிழமை விரதம் படத்திற்காக பதினாலு பாம்புகள் பயன்படுத்தபட்டன. அதில் நான்கு பாம்புகள் இறந்து போக தேவரும், தியாகராஜனும் ராமேஸ்வரம் போய் நாகசாந்தி பூஜை செய்திருக்கிறார்கள்.
படத்தில் சண்டைக் காட்சிகளே கிடையாது. ஒரே ஒரு சண்டைக் காட்சி நாயகன் பாம்பாருக்கு தான். அது கீரியுடன் போடும் சண்டையில் நம் நரம்பெல்லாம் கூச்செரியும். அப்படி ஒரு காட்சி.. அதோடு பாம்பும் பாம்பும் சண்டையிடும் காட்சியும் புதிது...
படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜெயசித்ராவின் போர்வையில் ஒளியும் பாம்பை திகிலுடன் பார்க்கும் அந்தக்காட்சி அமைப்பு செம த்ரில்லிங். ஒரு பாம்பை வைத்து வசூலை வாரிக் குவித்ததெல்லாம் செமயான விஷயம். ஆனால் பாம்புக்கு கொடுக்கப்பட்ட சித்ரவதைகளை வைத்து பார்க்கும் போது இன்றைக்கு இந்த படத்தை இப்போது தத்ரூபமாக எடுக்க முடியாது. காரணம் இதில் ஒரு காட்சியில் கூட அட்டை பாம்பை பயன்படுத்தவில்லை. எல்லாமே நிஜம். பாம்பே இந்தப் படத்தைப் பார்த்தால் ஆச்சர்யப்படும். நானா இது? இவ்வாறு தெரிவித்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications