2 சூப்பர் ஹீரோக்கள்.. சூர்யாவை படுத்திய பாடு? பொறாமையால் கார்னர் செய்யப்படும் நடிகர் சூர்யா: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து விதமான திறமைகள் இருந்தும்கூட, சூர்யா மீது விமர்சனங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தனிமனித தாக்குதல்களையும் சூர்யா மீது தொடுப்பது அருவெருப்பானது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். அத்துடன் 2 முக்கிய நடிகர்கள் சூர்யா மீது காழ்ப்புணர்ச்சியை காட்டினார்கள் என்றும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தொடர்ந்து கார்னர் செய்யப்படுகிறார் சூர்யா. அறிமுகப்படமான நேருக்கு நேர் படத்திலேயே சூர்யாவை, அந்த படத்தில் நடித்த, பிரபல நடிகர் அவமானப்படுத்தினார். அந்த பிரபல நடிகருக்கு மட்டும் அப்போது கேரவனிலிருந்து எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டது.

Television Surya 2 Super actors 2

ஆனால், சூர்யா புதுமுகம் என்றாலும், சிவக்குமாரின் மகன் என்பதாலும், மணிரத்னம் பேனர் என்பதாலும், கேரவன் வசதியை சூர்யாவுக்கும் செய்து தந்திருக்கலாம். இதனால், ரோட்டிலேயே உடையை மாற்றியிருக்கிறார் சூர்யா..

சிவக்குமாரிடம் அழுத சூர்யா

வீட்டுக்கு சென்று, இந்த அனுபவத்தை தன்னுடைய அப்பாவிடமும் சொல்லி சூர்யா அழுதுள்ளார்.. உடனே சிவக்குமார், "இந்த சலுகை கிடைக்கவேண்டுமானால், சினிமாவில் உன்னுடைய அடையாளத்தை நிரூபிக்கணும்" என்று அறிவுறுத்தினார். அதற்கு பிறகே தனக்கென அடையாளத்தை நிரூபிக்க தொடங்கினார் சூர்யா.
அதேபோல, யாராவது வளரும் நடிகர்கள் என்றால், உடனே தன்னுடைய படத்தில் அந்த நடிகரை புக் செய்துவிடுவார் எஸ்ஏ சந்திரசேகர்.. அப்படித்தான் பெரியண்ணா படம் எடுத்தார்.. விஜயகாந்துடன் சூர்யாவை நடிக்க வைத்து அந்த படத்தையே ஓடவிடாமல் காலி செய்துவிட்டார்.. ஆனால், தன்னுடைய மகனை விஜயகாந்த்துடன் நடிக்க வைத்து, அந்த படத்தை பெரிய வெற்றிப்படமாக்கினார். இதெல்லாம் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது.. சூர்யா பெரிய அளவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே செய்யப்பட்டது.


ராஜாவின் பார்வையிலே

விஜய் பெரிய நடிகராக, வளரும் காலகட்டத்தில், இன்னொரு நடிகரான அஜித்துக்கும் இப்படியான துன்புறுத்தல், அசசுறுத்தல்கள் அப்போது இருந்தன. ராஜாவின் பார்வையில என்ற படத்தில், "டபுள் ஹீரோ" என்று பேசி அஜித்தை புக் செய்தார்கள். ஆனால், அதில், அஜித்தை 15 நிமிடம் மட்டுமே பயன்படுத்தினர். அதாவது, விஜய் மட்டுமே ஹீரோ என்பதுபோல படத்தை எடுத்து முடித்துவிட்டனர்.

எனினும், கமல், ரஜினிக்கு பிறகு, 2 பெரிய ஹீரோக்கள் மட்டுமே திரையுலகில் கோலோச்சி நின்றார்கள்.. இந்த 2 பெரிய ஹீரோக்களின் காலகட்டத்தில்தான் சூர்யாவும் நடிக்க வந்தார். ஆனால், அந்த 2 நடிகர்களுக்கு நிகராக 3வது நபராக சூர்யா வந்துவிடக்கூடாது என்ற பயம் அந்த 2 ஹீரோக்களுக்கும் இருந்து கொண்டே இருந்தது.

நடிக்க தெரியாத நடிகர்கள்

இத்தனைக்கும் அந்த 2 பெரிய நடிகர்களுக்கு நடிக்கவும் தெரியாது. பஞ்ச் டயலாக் பேசுவார்கள், ஆக்‌ஷன் பிளாக் செய்வார்கள். அதிலும் ஒருத்தருக்கு மட்டுமே டான்ஸ் ஆட தெரியும். இன்னொருத்தருக்கு அதுகூட தெரியாது. ஆனால், சூர்யா, நடிக்க தெரிந்தவர், ஆக்‌ஷன், டான்ஸ் உட்பட எல்லாமே செய்தார். நடிக்க தெரிந்த நடிகர் மட்டுமல்ல, அழகான நடிகரும் கூட.. அதனால்தான், அந்த 2 பேருக்கும் காழ்ப்புணர்ச்சி அதிகமானது.

அனைத்து விதமான திறமைகள் இருந்தும்கூட, சூர்யா மீது விமர்சனங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தனிமனித தாக்குதல்களையும் சூர்யா மீது தொடுப்பது அருவெருப்பானது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+