ஆட்டம் காணுது அஸ்திவாரம்.. முக்கடல் பொங்க போகுது.. மெயின் பிக்சர் இனிமேல்தான் வரும்: அனுமோகன் பொளேர்
சென்னை: வரும் டிசம்பர் 31ம் தேதி, மிகப்பெரிய இயற்கை சீற்றம் வரப்போகிறது.. சித்தர்கள் அன்று சொன்னது, ஒவ்வொன்றும் அப்படியே பலித்து கொண்டிருக்கிறது என்று பிரபல டைரக்டரும், நடிகருமான அனுமோகன் கூறியிருக்கிறார்.
பிரபல டைரக்டரும், நடிகருமான அனுமோகன் கோவையை சேர்ந்தவர். இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீப காலமாகவே இவர் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை தந்து வருகிறார்.. அந்த பேட்டிகளில், " 2024 டிசம்பர் 31-க்குள் பெரிய இயற்கை அழிவு வரும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. 2004-ல் சுனாமி வரும் என சொன்னோம். யாரும் நம்பவில்லை. இந்த முறை இலங்கை சுனாமியால் அழியும். சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும்" என்றெல்லாம் கூறி, பரபரப்பை கிளப்பியிருந்தார்.
திருவண்ணாமலை: இப்போது, கடந்த வாரம் பெய்த புயல் மழை காரணமாக, திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த நிலச்சரிவுக்கு காரணம், சிவனின் கோபமே என்று ஆன்மீகவாதிகள் கருத்து சொல்லி வருகிறார்கள்.
அந்தவகையில், Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு, அனுமோகன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், இந்த வருடம் பேரழிவு நிச்சயம் வரும் என்று, தன்னுடைய அதே கருத்தை மீண்டும் உறுதியாக பதிவு செய்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
கனவில் சித்தர்கள்: "இந்த வருடம் அழிவு வரும் என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன்.. ஆனால், நானே இதையெல்லாம் கற்பனையில் பேசுவதாக சொல்கிறார்கள்.. இவை யாவும் சித்தர்கள் அன்றே சொன்னது.. சித்தர்கள் எழுதிவைத்ததை, நான் 45 வருடத்துக்கு முன்பு படித்தேன்.. இதற்கு பிறகு சித்தர்கள் என்னுடைய கனவில் தோன்றி, "டைம் நெருங்குது, இதெல்லாம் போயி வெளியே 4 பேருக்கு சொல்லு" என்று என்னிடம் சொல்ல சொன்னார்கள்.
அதனால்தான் மீடியாவில் சொல்லி வருகிறேன்.. மரங்களை வெட்டவே கூடாது என்று அந்த காலத்திலேயே எல்லாரும் போராட்டம் செய்திருந்தால், இப்படியெல்லாம் இன்று அழிவு நடந்திருக்காதே? எப்போதுமே மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்வதில்லை
இயற்கை சீற்றம்: உதாரணத்துக்கு 30 மாடியில் வீடு கட்டியிருந்தால், அதை சுற்றிலும் மெட்ரோ ரயில் போடுவது, பாதாள சாக்கடை தோண்டுவது போன்ற பணிகளை செய்கிறார்கள். இதெல்லாம் பெரிய தவறு.. இப்படி செய்தால், அந்த மண்ணின் பலம் குறைந்துவிடும். அஸ்திவாரமே விழுந்துவிடும்.. இறுதியில் இதுபோன்ற மழை வரும்போது பாதிப்பு நடக்கிறது. எனவே, தவறு செய்வது மனிதன்தான்.. இதற்காக மனிதனுக்கு இயற்கை தரும் தண்டனையே இவைகள் எல்லாம். காடு, மலை, மண்ணை அழிக்கக்கூடாது.
மனிதநேயம் மங்கி, மனிதன் சுயநலவாதிகளாக மாறும்போது, மனிதனுக்கு நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பஞ்சபூதங்கள் ஒன்றுசேர்ந்து அறிவுரை வழங்குமாம்.. இதைத்தான் சித்தர்கள் அந்த காலத்திலேயே சொல்லியிருக்காங்க.. கடல் பொங்கும்.. பூமி பிளக்கும், வானத்தில் எரிநட்சத்திரம் விழும்.. சூறைக்காற்று 500, 1000 கிமீ. தூரத்திலிருந்து அடிக்கும். இவையாவும் இந்த ஆண்டிலேயே நிச்சயம் நடக்கும்.. அந்த காலத்தில் சித்தர்கள் சொன்ன வாக்குகள், ஒவ்வொன்றாக பலித்து கொண்டுதான் இருக்கிறது.
முக்கடல் பொங்கும்: நிலச்சரிவு என்பது இந்த வருடமே நடக்கும். தென்னிந்தியாவில் முக்கடல் பொங்கும்.. அதாவது அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம் மூன்று கடலுமே ஒன்றாக பொங்கும்.. கடலுக்கு கீழே எரிமலை வெடிக்குமாம். அது சுனாமியாக வரும்.. அப்போது ராவண பூமி கடலில் மூழ்கும் என்று சித்தர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
மண்ணுக்கு கீழே உள்ள சரிவை பற்றி இதுவரை விஞ்ஞானத்தில் யாருமே கண்டுபிடிக்கவில்லை.. விஞ்ஞானம் என்பது வளரவே இல்லை.. வீழ்ச்சியில்தான் நாம் இருக்கோம். இப்போது பஞ்சபூதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுத்திருக்கு.. அதனுடைய டைட்டில் கார்டுகள்தான் இப்போது நடக்கும் மண்சரிவுகள்.. இதனுடைய மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகுது. அந்த கிளைமேக்ஸ் நினைச்சு பாருங்க
நிச்சயம் நடக்கும்: நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி, எல்லாமே நடக்கும். மனிதன் இதை சந்தித்தே ஆகணும். அதனால் எப்போதும் அரசாங்கத்தை குறை சொல்லியோ, அடுத்தவரை குறை சொல்லியோ பிரயோஜனமில்லை.. இயற்கைக்குண்டான மரியாதையை மனிதன் தந்தே ஆகவேண்டும்" என்றெல்லாம் அனுமோகன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதே போல சித்தர் ஒருவரும் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து கூறும்போது,"திருவண்ணாமலையில், இன்று வரையில் நிலச்சரிவு என்பது ஏற்பட்டதில்லை.. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்து நிற்கும் திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த அழிவு, சிவனின் கோபத்தையே உணர்த்துகிறது. அண்ணாமலையின் நெந்றிக்கண்ணை திறந்த பிறகாவது நாம் அனைவரும் விழிக்க வேண்டும். இல்லாவிட்டால், இதற்கு பிறகு மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications