பிக் பாஸ் விட்டு கமல் போக காரணம்! இனி இவர் தான் தொகுப்பாளர்!? ஆரி சொன்ன விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் தான் விரைவில் வரப்போகும் 8வது சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இது குறித்து இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறிய ஆரி அர்ஜுனன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக போகிறது என்ற அறிவிப்பு வெளியான போது அது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. பிரபலங்களால் எப்படி ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதோடு இந்த நிகழ்ச்சியை உலகநாயகனாக மக்களால் கொண்டாடப்படும் கமல் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

எப்படி ஒரு தெருவில் பக்கத்து வீட்டில் சண்டை போடும்போது அங்கு என்னதான் நடக்கிறது என்று நம்மை மீறி ஒரு ஆர்வத்தோடு எட்டிப் பார்க்க தோன்றுகிறதோ அது போல நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு வீட்டிற்குள் நமக்கு தெரிந்த பிரபலங்கள் என்னதான் செய்கிறார்கள்? எப்படி சண்டை போடுகிறார்கள்? எப்படி ஜாலியாக இருக்கிறார்கள்? என்று பார்ப்பதற்காகவே முதல் சீசனில் தொடங்கி ஏழு சீசன் வரைக்கும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஆனால் முதல் இரண்டு சீசன்கள் இருந்த வரவேற்பு அதற்கு பிறகு வந்த சீசன்களில் அதிகமாக இல்லை. காரணம் அந்த நேரங்களில் அதிகமான இணைய பயன்பாடு கிடையாததால் அந்த இரண்டு சீசன்களிலும் டிவியில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது உள்ள நிகழ்ச்சிகள் அப்படி இல்லை. டிவியில் ஒளிபரப்பாகுவதற்கு முன்பே அன்று நடப்பது எல்லாம் 24 மணி நேர லைவில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி விடுகிறது. இதனால் அதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் பார்த்து விடுகிறார்கள்.
அதில் ஹைலைட்டான விஷயங்களை பற்றி இணையத்தில் விவாதமும் செய்து விடுகிறார்கள். இதனாலே இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் தான் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் கமல்ஹாசனுக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வரத் தொடங்கி விட்டது. கமலஹாசன் ஆரம்பத்தில் இருந்தது போல இப்போது இல்லை, அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் கூட அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதுபோல கடந்த சீசனில் கமல்ஹாசனுக்கு 100 கோடி சம்பளம் என்றும் அதனால் தான் அவர் சினிமாக்களில் அந்த நேரத்தில் அதிகமாக நடிக்கவில்லை என்று கூட கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சம்பளம் அதைவிட அதிகமாக கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்தாலும் கமல்ஹாசன் தான் திரைப்படத்தில் பிஸியாக நடிக்கிறேன் அதனால் வரப்போகும் சீசனில் தான் கலந்து கொள்ளவில்லை. இதில் இருந்து ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இது பெரிய அளவில் பலரையும் பேச வைத்தது. இந்த நிலையில் கமலுக்கு பதிலாக யார் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதில் நடிகர் சிம்பு, சூர்யா, சரத்குமார், அர்ஜுன், அரவிந்த்சாமி போன்ற பலருடைய பெயர் இதில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறிய ஆரி அர்ஜுனன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறேன் என்று கூறியிருப்பதை கேட்டதும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் எனக்கு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது. காரணம் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது கூட கமல்ஹாசனுக்காக தான். நான் குழந்தையாக தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவருடைய பக்கத்தில் நிற்கலாம் என்ற ஒரு காரணத்திற்காகவே நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
அந்த நிகழ்ச்சியில் எனக்கு டைட்டில் தரும் போது என் கைகளை பிடித்தபடி கமல்ஹாசன் நின்றிருந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது. அதுபோல கமல்ஹாசனால் தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெருமையும் வாய்ந்தது. அவருக்கு பதில் இனி எந்த தொகுப்பாளர் வந்தாலும் கமல் இடத்தை பிடிக்க முடியாது. அதிலும் மக்கள் மத்தியில் யார் அடுத்த தொகுப்பாளர் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே சிம்பு பெயர் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அவர் வந்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன். காரணம் சிம்பு ஏற்கனவே கமலுக்கு பதிலாக ஒரு சில எபிசோடுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுபோல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்கி இருந்தார். அதனால் அவருக்கு இந்த நிகழ்ச்சியை ஹேண்டில் பண்ணும் திறமை இருக்கிறது.
அவரே வந்தால் சிறப்பாக இருக்கும் இளைஞர்கள் மத்தியிலும் சிம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பிளஸ் ஆக அமையும் என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று அந்த பேட்டியில் ஆரி அர்ஜுனன் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications