டி. ராஜேந்தர் பற்றி வடிவேலு சொன்ன வார்த்தை.. இப்படி வேற நடந்து இருக்கா? பழசை மறக்கலையே!
சென்னை: நடிகர் வடிவேலு ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு டி.ராஜேந்தர் செய்த உதவி குறித்து பேசிய ஒரு நிகழ்வை நடிகர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர்களின் வரிசையில் வடிவேலுவும் இருந்து வருவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வடிவேலுவின் காமெடி மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு பெற்று இருந்தாலும் அவரோடு நடித்த நடிகர்கள் பலர் அவர் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டு கூறி வருவதாலேயே வடிவேலு குறித்த செய்திகள் அடிக்கடி இணையத்தில் அடிபட்டுக் கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது.

வடிவேலுவுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எங்களை வடிவேலு சரியாக நடிக்க விடமாட்டார். அவரைத் தாண்டி நாங்கள் நடித்து விட்டால் அந்த நேரத்தில் எங்களை பாராட்டுவார் ஆனால் பிறகு அந்த காட்சி அந்த திரைப்படத்தில் இல்லாமல் செய்து விடுவார். என்றெல்லாம் பலரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதோடு ஒரு படத்தில் நாங்கள் அவரோடு நடிக்கும்போது நன்றாக நடித்து விட்டால் அடுத்த படத்திற்கு அவர் எங்களை நடிக்க விடாமல் செய்து விடுவார்.
என்றாலும் கூட அவரோடு பல திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் கூட தொடர்ச்சியாக சமீபத்தில் பேட்டிகளில் பேசிக் கண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் வடிவேலு தங்களுக்கு உதவி செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட நடிகர் ராஜ்கிரணை மேடையில் பார்த்ததும் தன்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதற்காக ராஜ்கிரணை கட்டிப்பிடித்து தன்னுடைய நன்றியை தெரிவித்து இருந்தார். இது அதிகமாக பேசப்பட்டது.
இந்த நிலையில் வடிவேலு குறித்து நடிகர் சித்ரா லக்ஷ்மன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. பொதுவாக நடிகர் வடிவேலு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் தான் அறிமுகமானார் என்று தகவல்கள் இருக்கிறது. ஆனால் வடிவேலுவை முதன்முதலில் திரையில் காட்டியவர் டி ராஜேந்தர் தானாம். என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார்.
இது பற்றி வடிவேலு ஒரு பத்திரிக்கையில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார் அதில் அவர் பேசுகையில், வடிவேலு சினிமாவிற்கு வரவேண்டும் என்று என்றுமே முயற்சித்தது கிடையாதாம். இப்போது சினிமாவில் என்னென்ன சேட்டைகள் எல்லாம் செய்திருக்கிறாரோ அதை சினிமாவிற்கு வருவதற்கு முன்பே செய்திருக்கிறேன் இந்த சினிமா என்ற சொர்க்க பூமிக்குள் அடி எடுத்து வைப்பேன் என்று நான் கொஞ்சம் கூட நினைத்தது கிடையாது.
என்னுடைய முகத்தை சினிமாவில் காட்டியது என்னுடைய அண்ணன் டி ராஜேந்திரன் தான். அதற்குப் பிறகு எனக்கு நல் வாய்ப்பை இயக்குனர் ராஜ்கிரண் உருவாக்கி கொடுத்தார். அவர் மட்டும் இல்லை என்றால் சினிமாவில் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்க முடியாது. சினிமாவை பொருத்தவரை இது ஒரு கிரகம். இங்கு சேட்டிலைட் விடுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது.
சினிமாவில் இன்று நான் இருக்கிற என் நிலைமையை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உண்மையா என்று நானே அடிக்கடி என்னையே கிள்ளி பார்த்துக்கொள்வேன் என்று அந்த பேட்டியில் வடிவேலு கூறி இருக்கிறார் என்று நடிகர் சித்ரா லட்சுமணன் வீடியோ ஒன்றில் பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோவை பகிரும் ரசிகர்கள் வடிவேலு மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தனக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்தி இருக்கிறாரே என்று பாராட்டியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications