பார்த்திபன் கம்முனு இருந்திருக்கணும்.. தனுஷ் இமேஜ் காலி? டைவர்ஸில் இதுதான் சிக்கல்.. பிரபலம் அட்டாக்
சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்றும், பிள்ளைகளுக்காக இருவரும் இணைய வேண்டும், தங்கள் வாழ்க்கையை பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று ஆஜராகினார்கள்.. விவாகரத்து பெறுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக 2 பேருமே தெரிவித்ததையடுத்து, வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

முன்னதாக, "இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா" என்று, நீதிபதி கேட்டார். அதற்கு 2 பேருமே "எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்கள்.. இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, அறிவித்தார்.
தனுஷ் இமேஜ்: இந்நிலையில், இந்த தம்பதி விவகாரம் குறித்து, Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், நயன்தாரா வெளியிட்டிருந்த அறிக்கையால்தான், தனுஷ் இமேஜூக்கு பாதிப்பு ஏற்பட்டதா? தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சேகுவேரா, நயன்தாரா பற்றி மட்டுமல்லாமல், ஏஆர் ரஹ்மான் தம்பதியினர் விவாகரத்துக்கு கருத்து சொன்ன நடிகர் பார்த்திபன் குறித்தும் அந்த பேட்டியில் விமர்சித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
பர்சனல் வாழ்க்கை: "தனுஷ் - ஐஸ்வர்யா மட்டுமல்ல, ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் என்றாலும், தம்பதிகள் இருவருமே தொழிலையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றாக சேர்த்து பார்க்கிறார்கள்.. அதுதான் இங்கே சிக்கலே.. இப்படி புரபொஷனலையும், பர்சனல் வாழ்க்கையையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்வதால்தான், விவாகரத்து வரை வந்து நிற்கிறார்கள். இதில் அவரவர் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்.
இன்ஸ்ட்டாவில் ஐஸ்வர்யா பதிவிடும் போஸ்ட்டுகளுக்கு தனுஷ் லைக் செய்கிறார்.. ஆனால், இதை வைத்து, ஒன்றுசேர்ந்து விடுவார்கள் என்று கணித்து விட முடியாது. இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும்.. எப்போதெல்லாம் சினிமாவில் தனுஷ் மார்க்கெட் டவுன் ஆகிறதோ, அப்போதெல்லாம் விவாகரத்து பேச்சு அதிகமாக கேட்கும்..
ராயன் படம்: ராயன் படம் நன்றாக போனது.. அப்போது, தம்பதி இருவரும் சேரப்போகிறார்கள், ரஜினி உடல்நலம் சரியில்லாதபோது, தனுஷ் சென்று பார்த்தார், என்றெல்லாம் தகவல் வந்தது. ஆனாலும் இவர்கள் பிரிவதில் உறுதியாக இருக்கிறார்கள்.
நயன்தாரா வெளியிட்டிருந்த அறிக்கையால், ஒருவிதமான நெகட்டிவ் பார்வை, ஓரளவு தனுஷ் மீது சினிமா வட்டாரத்தில் விழுந்தது உண்மைதான்.. இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்..
இப்போது ஒரு நிகழ்ச்சியில் தனுஷ், நயன்தாரா பங்கேற்றுள்ளார்கள், அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு பொதுநிகழ்ச்சிக்கு இருவரும் வருகிறார்கள் என்றால், அழைப்பிதழ் தந்தவர் 2 பேருக்கும் வேண்டப்பட்டவராக இருக்கலாம்.. ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து கொள்கிறார்கள். இவர்கள் என்ன காதலர்களா? கணவன் மனைவியா?
நயன்தாரா பிரபலமான பெண்.. அவ்வளவுதான்.. அதுக்காக விவகாரத்தை வைத்து, தனுஷ் மார்க்கெட் சரிந்துவிட்டதாக சொல்ல முடியாது நயன்தாதாராவுக்கு மார்க்கெட் மதிப்பு 10 கோடி இருக்கும்.. பட்ஜெட் என்று எடுத்து கொண்டால் 50 கோடி இருக்கலாம் ஆனால், தனுஷ் 150, 200 கோடி பட்ஜெட் இருக்கும். அதனால் பிசினஸில் இருவரையும் கம்பேர் செய்ய முடியாது.. தனிப்பட்ட முறையில் பார்த்தால், இருவருமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
தனுஷ் மார்க்கெட்: ஆனால், இன்னும் 20 வருஷத்துக்கு தனுஷ் மார்க்கெட் இருக்கும்.. நயன்தாராவுக்கு? இதுதான் காலம்.. சினிமா வகுத்து வைத்திருக்கும் விதி இதுதான்.. தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என அனைத்து பரிமாணங்களிலும் தனுஷ் வெற்றி அடைந்துள்ளார்..
நயன்தாரா அறிக்கையில், சர்ச்சைதான் பேசப்பட்டதே தவிர, அந்த டாக்குமென்ட்ரி பற்றி யாருமே பேசல.. நயன்தாரா என்பவர் சாதனை பெண் கிடையாது.. மிகப்பெரிய நடிகையும் கிடையாது.. அமரன் படத்தில் சாய்பல்லவி கேரக்டரை நயன்தாராவால் நடிக்கவே முடியாது. பெரும்பாலான படங்களில் வெறும் கவர்ச்சியை காட்டி நடித்த பெண்தான் நயன்தாரா.. எனவே, இவரது அறிக்கையால் தனுஷூக்கு லேசான சரிவு கிடைத்ததே தவிர, அவரது மார்க்கெட்டை எதுவுமே செய்ய முடியாது.
பெரியவர்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் பெரியவர்கள் சரியில்லை என்றுதான் சொல்வேன்.. பக்குவப்பட்ட பெரியவர்களாக இருந்தால் இறங்கி போய் இருவரிடமும் பேசியிருக்கலாம். இதில் தவறில்லை.. 2 பேரையும் சுயமாக முடிவெடுக்கவும் விடறது இல்லை.
இப்போதுகூட காலம் கடந்துவிடவில்லை.. தீர்ப்புக்கு முன்னாடிகூட ஒரு மனு போட்டு, இருவருமே சேர்ந்து விவாதித்து நல்ல முடிவெடுக்கலாம். தனுஷ் - ஐஸ்வர்யா, ஜெயம் ரவி - ஆர்த்தி, ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு இந்த தம்பதிகள் அனைவருக்குமே சொல்வது ஒன்றுதான், இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யணும்.. பிள்ளைகளுக்காக தங்கள் முடிவுகளை பரிசீலனை செய்யணும்" என்றார்.
ஏஆர் ரஹ்மான் முன்னதாக சேகுவேரா கூறும்போது, "ஏஆர் ரஹ்மான் விவகாரத்தில் பார்த்திபன் கருத்து சொல்வது ஏன் என்று தெரியவில்லை. பார்த்திபனை காயப்படுத்த வேண்டும் என்பது நம்முடைய நோக்கம் இல்லை.. ஆனால், அவர் அமைதியாக இருந்திருக்கலாம். ஊடகங்கள் பேசுகிறதென்றால், அது அதன் கடமையை செய்கிறது. ஆனால், ஊடகத்திற்கும் ஒரு வரம்பு இருக்கு..
மற்றபடி, யார் விவாகரத்து செய்தாலும், சினிமா வட்டாரத்தில் கருத்து சொல்வது, ட்வீட் போடுவது இதெல்லாம் எதுக்கு? உண்மையிலேயே அந்த தம்பதி மீது அக்கறை இருக்குமானால், நேரா வண்டியை எடுத்துட்டு போய் பேசி, சமாதானம் செய்ய வேண்டியதுதானே?
ஆம்பள சுசித்ரா: ஏஆர் ரஹ்மானை நேரில் சந்திக்க கூடிய வாய்ப்பிருந்தால் பார்த்திபன் அதை செய்ய வேண்டியதுதானே? பார்த்திபனுக்கு முதலில் கருத்து சொல்லக்கூடிய தகுதி இருக்கணும்.. அல்லது மனைவியுடன் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடியவராகவாவது இருக்கணும்.. இப்படி கருத்து சொல்லிட்டு இருந்தால், உங்களுக்கும், சுசித்ராவுக்கும் என்ன வித்தியாசம்? இப்படியேயிருந்தால், "ஆம்பளை சுசித்ரா" ன்னு பார்த்திபனை சொல்லிடுவாங்க" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications