Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்த்தியை விடுங்க.. ஜெயம் ரவி கிட்ட இதை கவனிச்சீங்களா? செம பாஸிட்டிவ்.. ரவி மோகன் ரசிகர்களும் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வரும்நிலையில், பெயர் மாற்றத்துக்கு பிறகு, ஜெயம் ரவியிடம் சிறிது மாறுதல் தென்படுவதாக தகவல்கள் சோஷியல் மீடியாவில், வட்டமடிக்க துவங்கி இருக்கின்றன.

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததுமே, திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது.. இதற்கு பிறகு, ஆர்த்தியின் அறிக்கையும், பதிலடிகளும் இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கின. சமரச பேச்சுவார்த்தைக்கு காத்திருப்பதாகவும் மறைமுகமான செய்திகளும் கசிந்தன. பிறகு இருவருக்குமான காரசாரமான குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

actor jayam ravi ravi mohan


அறிக்கை:
இறுதியில், ஜெயம் ரவிக்கு ஆதரவாகவே சோஷியல் மீடியாவில் ஆதரவுகள் பெருகின.. ஆர்த்தியின் அறிக்கைக்கு எந்தவிதமான விளக்கத்தையும் ஜெயம் ரவி சொல்லவேயில்லை.. எனவே ஆர்த்தியை விவாகரத்து செய்வதில் ஜெயம் ரவி உறுதியாகவே இருந்து வருவதாக தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், தன்னுடைய பெயர் மாற்றத்தை அறிவித்தார்.. இனி யாரும் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன் என மிக நீண்ட அறிக்கை விட்டு கூறியிருந்தார்.. அதேபோல, ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும், ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்த பெயர் மாற்றத்திற்கான காரணத்தை ஜெயம் ரவி கூறவில்லை.. எனினும், இந்த பெயர் மாற்றத்திற்கு பிறகு, ஜெயம் ரவியின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தென்படுவதாக கூறுகிறார்கள்.

தன்னுடைய படங்கள் குறித்த ப்ரோமோஷனில் பேசும்போதெல்லாம் அவரது பேச்சில் பாசிடிவ் தன்மை காணப்படுவதாகவும், மோடிவேஷனாகவே அவரது பேச்சு அமைந்து வருவதாகவும் கூறுகிறார்கள். போதை காலம் திரும்புதடி என்ற அவரது பாடலுக்கு நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் நடனம் புதுவித்தியாசத்தை ரசிகர்களிடம் காட்டியது. நிறைய பேட்டிகள், புரமோஷன்களில் கலந்து கொண்டு வரும் ஜெயம் ரவியிடம் பாசிடிவ் மாற்றங்கள் தென்படுவது, அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்.

ஆர்த்தி பதில்: இந்நிலையில், ஜெயம் ரவி விவாகரத்து குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, AG Modern Media சேனலில் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அதில், "ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தார்.. இதற்கு ஆர்த்தி பதில் தந்தார்.. தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றம் 3வது நீதிமன்றத்தில், இந்த வழக்கை நீதிபதி தேன்மொழி விசாரித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இருவரும் சமரச பேச்சு மையத்துக்கு சென்று தீர்வு காண வேண்டும் என்று தேன்மொழி உத்தரவிட்டிருந்தார்.. அந்த அடிப்படையில் 2 பேரும், சமரச தீர்வு மையத்துக்கு சென்றார்கள்.. ஆனால், ஜெயம் ரவி, தன்னுடைய விவாகரத்தில் உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில், ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரின் வழக்கும், நீதிபதி தேன்மொழியின் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஒத்திவைப்பு:
இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்காக அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். அப்போது, ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் சமரச மையத்துக்கு சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி தேன்மொழி கேட்டுக் கொண்டார். சமரச பேச்சு வார்த்தையை நிறைவு செய்த பிறகு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று கூறி, வரும் பிப்15ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார் நீதிபதி தேன்மொழி" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+