கப்பலில் நெப்போலியன்.. தனுஷ் கல்யாணத்துக்கு அந்த நடிகையும் கிளம்பறாரு.. 100 விசா.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: பிரபல நடிகர் நெப்போலியன், தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய உள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய நண்பர் நெப்போலியனுக்காக ஆதரவு தெரிவித்து, இந்த திருமணத்துக்கான சூழலை விளக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களை தந்த நடிகர் நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்.. இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால், அதற்கான சிகிச்சையும் தந்து வருகிறார்.. இப்போது தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில், திருமணம் ஜப்பானில் நடக்க போகிறது.. ஆனால், மகனால் ஃபிளைட்டில் பயணம் செய்ய முடியாது என்பதால், கல்யாணத்துக்கு கப்பலில் செல்ல உள்ளார்.. எனினும், தனுஷூக்கு நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்தே இது தொடர்பான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் வட்டமடித்தன.
ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏன் சீரழிக்கறீங்க? பணம் இருந்தால், யாரையும் விலைக்கு வாங்குவீங்களா? என்றெல்லாம் இணையத்தில் கேள்விகள் வெடித்தன. ஆனால், கடந்த வாரம் நெப்போலியன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "ஒரு பக்க சொல் ஒரு யானை பலம், எல்லோரையும் வாழ்த்துங்கள். மனதை நோகடிக்காதீர்கள், வாழ் விடுங்கள் என நெப்போலியன் கேட்டுக்கொண்டிருந்தார்.
நெப்போலியன்: இந்நிலையில் நெப்போலியனின் நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான சபீதா ஜோசப், Kind 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "நெப்போலியன் சார், தன் மகனுக்காகவே அமெரிக்கா போனார்.. இங்கே கிண்டல், கேலிகள் ஏற்படும் என்பதால், அங்கேயே பிசினஸ் செய்யவும் ஆரம்பித்தார்.
தன்னுடைய மூத்த மகன், செல்ல மகனுக்கு 25 வயதாகும்போது கல்யாணம் செய்யணும்னு நெப்போலியன் நினைக்கிறார்.. கோடீஸ்வர குடும்பங்களை நெப்போலியன் விரும்பவில்லை.. 1000 பேர் வேலை செய்ற கம்பெனிக்கு எம்.டியாக இருக்கிறார் இவரது மகன்.. ஒரு கம்பெனி ஓனரைதான் அந்த பெண் திருமணம் செய்ய போகிறார்.. மகனை பார்த்துக் கொள்ள வேலைக்காரியை நியமித்தால், குறிப்பிட்ட நேரம்தான் வேலை செய்வார்.. அலட்சியம் அதிகமாக இருக்கும்.
நர்ஸ் மனைவி: ஆனால், இப்போது மனைவியாகவே அந்த பெண் வீட்டிற்குள் வருகிறார். நர்சுக்கு படித்துள்ளார்.. தன்னுடைய சமூகம் சார்ந்த பெண்ணாகவும் இருக்கிறார். அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றுத்தான் இந்த திருமணம் நடக்கிறது..
திருமணம் செய்து நடுரோட்டில் விடலயே? எப்படியிருந்தாலும், அந்த கம்பெனியை இந்த பெண்ணும்தான் சேர்ந்து பார்த்துக்க போறாங்க.. மகனின் சொத்துக்கள் இந்த பெண்ணுக்கும் சேரும்.. வேலைக்காரி என்றால் சொத்தை தரமாட்டாங்க.. இந்த தம்பதிக்குள் தாம்பத்யம் வருமா? இல்லையா? என்பதை இவர்கள் 2 பேரும்தான் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.. மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், அந்த பெண் சொத்துக்காக ஆசைப்பட்டு, இந்த திருமணத்தை செய்யவில்லை.
தம்பதிக்குள் புரிதல்: அந்நியோன்யம், புரிதல், போன்றவை இருவருக்குள்ளும் ஏற்படும் என்று நம்புகிறேன்.. மனைவியே தாயாகவும் மாறிவிடுவார்.. ஏற்கனவே இந்த பெண் நர்ஸ் என்பதால், தாய்மை உணர்வுடன்தான், கணவரை கவனித்து கொள்வார்கள்.. நாளடைவில் உடல்நிலையிலும் நல்ல மாற்றங்கள் வரலாம்.
நெப்போலியனுக்கு சொந்த கப்பலும் உண்டு.. கடல் மார்க்கமாக இங்கே வந்தால் 4 மாதம் ஆகிவிடும்... ஏற்கனவே 2 வருஷமாக பெண் தேடிட்டு இருந்தார்.. இப்போது ஜப்பானில் டோக்கியோவில், ஒரு தமிழரின் கல்யாண மண்டபத்தில் இந்த திருமணம் நடக்கிறது. இதற்கான வேலைகளை செய்ய, கப்பலில் ஆட்கள் அங்கே இறங்கி கொண்டிருக்கிறார்கள். அதேபோல இங்கிருந்து கல்யாணத்தில் பங்கேற்பதற்காக, ஃபிளைட்டில் 100 பேருக்காகவே அலைந்து திரிந்து விசா வாங்கியிருக்கிறார்.
நடிகைகள்: குஷ்பு, மீனா, கலா மாஸ்டர் போன்றோர் ஜப்பான் செல்கிறார்கள்.. டான்ஸ் புரோக்கிராம் நடத்துவார்கள் என்றே தெரிகிறது.. ரஜினி, கமலுக்கும் பத்திரிகைகள் வந்துள்ளன. பாண்டியராஜன் குடும்பத்துடன் கலந்து கொள்ள போகிறார். சிவக்குமார் மகன் கார்த்திக்கும் கிளம்பி செல்கிறார்.. சில விஐபிகள், சில தொழிலதிபர்களும், சில அரசியல்வாதிகளும், தனிப்பட்ட முறையில் தாங்களே செலவு செய்துகொண்டு திருமணத்தில் பங்கேற்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்த மாசம் 1ம்தேதி மணமகள் இங்கிருந்து கிளம்பறாங்க.. 2ம்தேதி நெப்பேலியன் குடும்பம், அவரது தம்பி குடும்பத்தார்களும், 5ம் தேதி நெப்போலியனின் மேனேஜர்கள், பிஆர்ஓக்கள், மேக்கப்மேன் என எல்லாரும் கிளம்புகிறார்கள்' என்றும் கூறியிருக்கிறார்.
முன்னதாக, இந்த திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காந்தராஜ் போன்றோர் நிறைய பேட்டிகளை தந்திருந்தார்கள். அவைகள் அனைத்துமே சர்ச்சைக்குரியதாக அமைந்திருந்தன. "அக்ஷயா, மனைவி என்ற ஸ்தானத்தில் நெப்போலியன் மகனுக்கு இருக்க முடியாது, ஒரு நர்ஸாகத்தான் இருப்பார் என்றார்கள்.
பெரிய சாதனை: இந்த நோய் உள்ளவர், 12 அல்ல 18 வயதிலேயே இறந்துவிடுவார்கள். தனுஷ் 25 வயது வரை வாழ்ந்ததே பெரிய சாதனை என்றெல்லாம காந்தராஜ் பேசியிருந்தார.
இந்த திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சட்டப்படி செல்லாது என்ற காரணத்தால் தான் திருமணத்தை ஜப்பானில் நடத்துகிறார்கள்.. தனுஷின் முழு சொத்தும் அவருக்கு பிறகு அக்ஷயாவிற்கு என்றால் தான் என்றெல்லாம் பேசி திருமணத்திற்கு ஓகே சொல்ல வைத்து இருப்பார்கள் என்றெல்லாம் தமிழா தமிழா பாண்டியன் பேசியிருந்தார. இப்போது, சபீதா ஜோசப், நெப்போலியனுக்கு ஆதரவாக பேசியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications