தேவயானி காதல் நயன்தாரா காதல் மாதிரி இல்ல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை ஓபனாக பேசிய பார்த்திபன்
சென்னை: நடிகர் பார்த்திபன் தேவயானி உடன் நீ வருவாய் என திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தேவயானி அந்த திரைப்பட இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து இருந்தார். அதுபோல நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவோடு பார்த்திபன் நடித்திருந்த போது அவர் விக்னேஷ் சிவனை காதலித்திருந்தார். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் தேவயானி காதல் குறித்து பார்த்திபன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சினிமாவில் ஒன்றாக நடிக்கும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது புதியது அல்ல. ஆனால் ஒரு சில நடிகர்கள் தான் தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இப்போ வரைக்கும் மகிழ்ச்சியாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களைப் போல சில வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவயானி நீ வருவாய் என திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ராஜகுமாரனை காதலித்த நிலையில் அதற்கு அடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் நடிக்கும் போது அவரை திருமணம் செய்து கொண்டார்.
அதுபோல நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நடிக்கும் போது காதல் செய்து படம் முடிவடைந்ததும் திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டு படத்திலும் நடிகர் பார்த்திபன் நடித்திருக்கிறார். நீ வருவாய் என திரைப்படத்தில் தேவயானிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதுபோல நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். இந்த நிலையில் சாய் வித் சித்ரா என்ற youtube சேனலில் நடிகர் சித்ரா லட்சுமணன், பார்த்திபனிடம் தேவயானி மற்றும் நயன்தாரா காதல் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு வழக்கம் போல பார்த்திபன் தன்னுடைய நக்கல் கலந்த விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்த விஷயம் எங்களுக்கு எல்லாருக்குமே தெரியும். இவர்களுடைய காதலை முதலில் உலகத்திற்கு சொன்னது நான்தான். ஆனால் தேவயானி மற்றும் ராஜகுமாரன் காதலித்த விஷயம் யாருக்குமே தெரியாது. தேவயானி நல்ல நடிகை அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் சில நேரங்களில் இருக்கிறார்.
நீ வருவாய் என படத்தில் நடிக்கும் போது எந்த இடத்திலும் அவருக்கு ராஜகுமாரன் மீது காதல் இருப்பதை அவர் வெளிப்படுத்தவே இல்லை. அதுபோல ராஜகுமாரனும் தன்னுடைய காதலை வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை. அதனால் இந்த விஷயம் தெரியாது. இவர்களுடைய திருமணம் நடந்த பிறகு தான் எங்களுக்கு இவர்கள் காதல் விஷயம் தெரிய வந்தது என்று பார்த்திபன் பேசிஇருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தேவயானி இது பற்றி பேசுகையில் எனக்கு நீ வருவாய் என திரைப்படத்தின் கதை மற்றும் அந்த படத்தை ராஜகுமாரன் இயக்கிய விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உண்மையில் ஒரு இயக்குனர் அவர் இயக்கம் படங்களில் நிஜ கேரக்டர் வெளியே தெரியும். அதுபோலத்தான் எனக்கு ராஜகுமாரனை அந்த படத்தில் பிடித்து இருந்தது.
அப்போது அவரே அவருடைய காதலை என்னிடம் சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர் எப்படி முடியாமல் போகும்? கண்டிப்பாக முடியும் என்று சொன்னார். அது போலவே எங்களுக்கு திருமணமும் நடந்து விட்டது என்று அந்த பேட்டியில் தேவயானி பேசியிருக்கிறார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications