வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் மகள் யாரு தெரியுமா? இந்த பிரபலம் தானா? வெளியான புகைப்படங்கள்
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் வில்லன் நடிகராக மிரட்டி வந்த நடிகர் பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு நடிகர் பொன்னம்பலத்தின் மகள் இருப்பதை குறித்து அதிகமான ரசிகர்கள் அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுபோல பொன்னம்பலம் குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அது குறித்தும் பார்க்கலாம்.
கபாலி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த நடிகர் பொன்னம்பலம் ஆரம்ப காலகட்டத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பலமொழிகளிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் கெத்தாக இருந்தால் தான் அந்த திரைப்படம் வெற்றி பெரும் என்பதற்கு எடுத்துட்டாக பல திரைப்படங்கள் இருக்கிறது.
அந்த வகையில் பலரும் ஆச்சரியப்படும் வலையில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை காட்டி இவருடைய கேரக்டரே இதுதானா? என்று சந்தேகப்படும் அளவிற்கு நடிகர் பொன்னம்பலம் மிரட்டி இருப்பார். அதுவும் "நாட்டாமை" திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அல்டிமேட் என்று தான் சொல்ல வேண்டும். சரத்குமாருக்கு எதிராக இவர் பேசும் வசனங்கள் மிரட்டலாக இருந்தாலும் அதே நேரத்தில் காமெடியாக இருக்கும். அதுவும் இவர் நடிகை மனோரம்மாவை "தாய்க்கிழவி" என்று கூறும் வசனம் அந்த நேரத்தில் கெத்தாக பார்க்கப்பட்டது.

அதை தான் தற்போது கூட நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "திருச்சிற்றம்பலம்" திரைப்படத்தில் தாய்க்கிழவி என்று பாடல் உருவாகுவதற்கு கூட அடித்தளமாக அமைந்திருக்கிறது. இந்த அளவிற்கு வில்லனாக மிரட்டும் பொன்னம்பலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இவருடைய நிஜ கேரக்டரை வெளி உலகத்திற்கு காட்டியிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருக்கவில்லை பாதியிலே வெளியேறி இருந்தார்.
அந்த நேரத்தில் அதிகமான அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பொன்னம்பலத்திற்கு சில நடிகர்களின் உதவியால் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பொன்னம்பலம் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். வில்லனாக உச்சகட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் பொன்னம்பலத்திற்கு பொண்ணு பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அவரை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதிக்கவில்லையாம். ஒரு பொண்ணு வீட்டிற்கு போனதும் இவரைப் பார்த்ததும் அந்த பொண்ணு ஓடிப்போய் தூக்கு மாட்ட போய்விட்டாராம். பிறகு அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்திருக்கிறார்கள்.

அதோடு அந்த வீட்டில் போய் இருந்ததும் அவர் அமர்ந்திருந்த சேர் உடைந்து விட்டதாம். பார்ப்பதற்கு அந்த நேரத்தில் கரடு முரடாக பொன்னம்பலம் இருப்பதால் பல பெண்கள் இவரை பார்த்ததும் இவர் எனக்கு வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்து விட்டார்களாம். அது போல தான் அவர் திருமணம் செய்திருக்கும் மனைவி தேவியும் கூட முதலில் சொல்லி இருந்தாராம். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் பொன்னம்பலத்தை பற்றி முழுவதும் தெரிந்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக கூறி இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு கார்த்திக் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பொன்னம்பலத்தின் மகளுடைய புகைப்படத்தை பார்த்த அதிகமான இணையவாசிகள் இவரா? பொன்னம்பலத்தின் மகள் என்று மிரண்டு போய் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications