என் ஆபீஸில் இனி தினமும் சாப்பாடு கொடுக்கிறேன்.. ஆனால்! விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் உருக்கம்
சென்னை: விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் இன்று புகழ் விஜயகாந்த் போல நானும் இனி இதையே செய்கிறேன் என்று அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே விஜயகாந்த் குறித்த செய்தி தான் வலம் வருகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரிடம் ஆசி வாங்க வந்த புகழ் விஜயகாந்த் போல நானும் என்னுடைய ஆஃபீஸில் இனி தினமும் பசியில் வருபவர்களுக்கு சாப்பாடு வழங்கப் போகிறேன் என்று பேட்டி அளித்திருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த புகழ் இப்போது பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மறைந்த விஜயகாந்த் போலவே தானும் பசியில் இருப்பவர்களுக்கு சாப்பாடு அளிக்கப் போகிறேன் என்று சொன்னதற்கு பலதரப்பட்டவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை யாரும் எதிர்பாக்காத வகையில் விஜயகாந்த் உடைய மறைவு செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருந்தது. தற்போது ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் பலர் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் விஜயகாந்த் உடைய மறைவிற்கு வர முடியாத பல பிரபலங்கள் தொடர்ச்சியாக அவருடைய நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு விஜயகாந்த் பற்றி பல நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் புகழ் தன்னுடைய அஞ்சலியை செலுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே விஜயகாந்த் மறைவிலும் அவருக்கு நேரில் சென்று புகழ் அஞ்சலி செலுத்தி இருந்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது புகழ் கேப்டன் உடைய இறப்பிற்கு நான் வருந்துகிறேன். கேப்டன் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் வந்திருப்பதற்கு காரணம் அவருக்காக என்ன செய்யலாம் என்று நான் யோசித்தேன்.
அதனால் தான் நான் என்னுடைய ஆபிஸில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போட முடிவு செய்து இருக்கிறேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.. இதை நான் 50 பேரிடம் இருந்து தொடங்குகிறேன். அதற்காக கேப்டன் இடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். யாருக்காவது பசி சாப்பாடு வேண்டுமென்று நினைத்தால் கே கே நகரில் உள்ள என்னுடைய ஆஃபீசுக்கு வந்து விடுங்கள் என்று பேசி இருக்கிறார்.
தற்போது புகழின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிகவும் அடிமட்டத்தில் இருந்த புகழ் விஜய் டிவியில் ஒரு வாய்ப்புக்காக பல போராட்டங்களை அனுபவித்து அதற்கு பிறகு தான் அவருக்கு பெண் வேடமிட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் புகழ் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தினால் தற்போது பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications