Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரகுவரனுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரகுவரனுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தான் வாழ்ந்த காலங்களில் காதலனாக, வில்லனாக, அண்ணனாக, அப்பாவாக என பல காலகட்டங்களில் ரகுவரன் பயணித்திருக்கிறார்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரகுவரனுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரகுவரன் தான் வாழ்ந்த காலங்களில் நல்ல காதலனாக, பின் வில்லனாக, பின் துணை நாயகனாக, பின் அண்ணனாக, அப்பாவாக என பல களங்களில் பயணித்து விட்டு தான் போயிருக்கிறார்.

television raguvaran

எனக்குத் தெரிந்து வேறு எந்த வில்லன் நடிகனும் இந்த தளங்களை தொடக் கூட முயற்சிக்கவில்லை. அடிப்படையில் கேரளா பாலக்காடு கொல்லங்கோட்டில் பிறந்த மலையாளியானதால் அவர் வீழும்போதெல்லாம் மலையாள இயக்குனர்கள் சிலர் அவரை உயர்த்த நினைத்திருக்கிறார்கள்.

நாசருடன் நாடகத்தில் நடிக்கும் போதே 'கக்க' என்கிற மலையாள படத்தில் தான் நடிக்கிறார். அதற்கு முன்பே சிறு சிறு ரோல்கள் செய்தாலும் தமிழில் 'ஏழாவது மனிதன்' அவரின் சினிமாவின் பார்வையை உயர்த்தும் திரைப்படமாக அமைகிறது. கக்க படத்தில் ரகுவரனோடு நிழல்கள் ரவியும் அறிமுகமாகிறார். ரோஹிணி நாயகி. பி.என்.சுந்தரம் என்கிற புகழ் வாய்ந்த கேமராமேன்தான் இயக்கம்.

ஏழாவது மனிதன் இயக்கம் கே.ஹரிஹரன். ஹரிஹரன் பாரதியாரைப்பற்றிய டாகுமெண்டரி எடுக்க பாளை சண்முகத்திடம் பேச கடைசியில் ஏழாவது மனிதன் படத்தில் முடிகிறது. ஹரிஹரன் அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டின் தொடர்பில் இருந்தவர். ரகுவரன் இன்ஸ்ட்டிடியூட் மாணவர். மற்ற மாணவர்களான அருண்மொழியும், கே.ராஜேஷ்வரும் இப்படத்திற்கு கதை எழுத அவர்கள் ரகுவரனை பரிந்துரைத்தது வேறொரு ரோலுக்கு.

ரகுவரனின் நடிப்பை பார்த்த ஹரிஹரன் நாயகன் ரோலை ரகுவரனுக்கே தந்தார். அப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் பெற்றது. சிறந்த படமாக மாநில விருதும் பெற்றது. ரகுவரன் திரையில் நுழையும் போதே அவரின் சினிமா பார்வை வேறு விதமாக தான் இருந்தது. அடுத்து ஸ்ரீதரின் பார்வையில் பட 'ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீதர் எடுத்த படங்களில் இவ்வளவு ஸாஃப்ட்டான படத்தை பார்க்க முடியாது. 'தென்றல் வந்து முத்தமிட்டதோ' பாடல் இன்றும் ஃபேவரைட் பின் சில சில வேடங்களில் நடித்தாலும் மூன்று வருடங்கள் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். அதற்குப்பின் மிஸ்டர் பாரத் வில்லன் வேஷம் அவரின் திரையுலக வாழ்க்கையில் பிஸி நடிகராக்கியது.

ஆனால் அவரின் 'நல்லதோர் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிந்த' கதையாகியது திரை வாய்ப்பு. பல படங்கள் வில்லனாக நடித்த இவரை நாயகனாக்க இரண்டாம் முறை தீர்மானித்தது மலையாள திரையுலகம். இம்முறை கேமிராமேன் சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன் முதன்முறையாக இயக்கத்தில் இறங்கினார்.

மெல்கிப்ஸனின் Leathel weapon படக்கதையை எடுத்து ரகுவரன் நடித்த வியூகம் என்ற அப்படம் வெற்றி பெற்றது.
உடனே ரகுவரன் அதேடைப் ஆக்ஷன் படத்தை தேர்ந்தெடுக்கவில்லை. எம்.முகுந்தன் எழுதி பெருவெற்றிப்பெற்ற கதையான 'தெய்வத்தின்ட விக்ருதிகள்' கதையை லெனின் ராஜேந்திரன் இயக்கினார்.

விடுதலை கிடைத்த ஃபிரெஞ்ச் பகுதியான மாஹியை விட்டு ஃப்ரான்சிற்கு போகாத அல்போன்ஸோ என்கிற மேஜிக்காரனாக, வறுமையில் தன் மகன், மகள், மனைவியை போற்ற முடியாத கையாலாகாத கிழவனாக ரகுவரன் நடித்தார். நாயகி ஸ்ரீவித்யா. மகளாக மாளவிகா நடித்தனர்.

இப்படம் 93ம் வருட தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது இப்படத்துக்கு போட்டியாக பெங்காலிப் படமான மிதுன் சக்ரவர்த்தி நடித்த 'டேகிதார் கதா' என்கிற படம் வந்தது. கடைசியில் இரண்டு வாக்குகளில் ரகுவரன் மிதுன் சக்ரவர்த்தியிடம் 93ம் வருட தேசிய விருதினை இழந்தார். சொந்தக் குரல் அல்லாததால் என சொல்லப்பட்டது.

அடுத்து அவர் நாயகனான 'கவசம்' படம் படுதோல்வி அடைந்தது. தமிழிலும் நாயகனான 'தூள் பறக்குது' தோல்வியடைய ரகுவரன் மீண்டும் திரும்பிப் பார்க்க அவரின் வில்லன் ராஜபாதை சும்மாவே இருந்தது...
மீண்டும் நாயகன், விருது நடிகன் போன்ற ஆசைகளை மூட்டை கட்டி விட்டு வில்லனாக இறங்கினார்.

அடுத்த 'மல்லி' என்கிற வில்லனாக நடித்த 'காதலன்' மெகா வெற்றி பெற்றது... vee
நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிந்து விட்டாய்..... சொல்லடி சிவசக்தி.... இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+