ராஜேஷை திணறடித்த சரவண பவன் ஓட்டல் சாம்பார்.. அண்ணாச்சி கிட்டயே ஓடிட்டாரு! பரிசு தந்த லீடர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா தவிர்த்து ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸினஸ் போன்ற தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் ராஜேஷ்... இவர், ஜோதிடம் பற்றி பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பன்முக திறமை கொண்ட இவர் தனது 49 ஆண்டுகால கலைப்பயணத்தில் ஏறக்குறைய 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ராஜேஷ் பற்றி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.. அதில், "ரியல் எஸ்டேட் செய்யும்போது, சினிமா சம்பந்தப்பட்ட ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு தவணை முறையில் இடம் வழங்கினார்..

Television Actor Rajesh Saravana bhavan Hotel Sambar

சரவண பவன் ஹோட்டல்

சரவண பவன் ஹோட்டல் மீது பெரிய ஈர்ப்பு ராஜேஷூக்கு இருந்தது. எனவே, அதுபோலவே தானும் ஹோட்டல் திறக்க நினைத்தார்.. ஸ்ரீபெரும்புதூர் போகும் வழியில் ஹோட்டல் ஒன்றை திறந்தார் ராஜேஷ்.. எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.. அது ஒரு சைவ ஹோட்டல்..

சரவண பவன் ஓட்டலில் சாம்பார் மிகவும் ஸ்பெஷல் என்பதால், அதுபோலவே தன்னுடைய ஓட்டலிலும் சாம்பார் வைக்க ஆசைப்பட்டார் ராஜேஷ்.. இதற்காக சரவணபவன் அண்ணாச்சியிடம் சாம்பார் ரகசியத்தை தெரிந்து கொண்டு, தன் ஓட்டலிலும் சாம்பார் பரிமாறினார். ஆனால், அந்த ஓட்டலை மூடிவிட்டார்..

பூர்வீக வீடுகள்

பிறகு பழைய நடிகர்களின் பூர்வீகங்களை ஆய்வு செய்வதில் அக்கறை காட்டினார்.. எம்ஜிஆர் வாழ்ந்த பூர்வீக வீடு, சிவாஜியின் பூர்வீக விடு இவைகளை எல்லாம் நேரிலேயே சென்று ஆய்வு செய்து, போட்டோ எடுத்து வந்தார்.. பழம்பெரும் நடிகைகளை நேரில் சென்று சந்தித்து பேசுவார். அவர்களின் சினிமா அனுபவங்களை எல்லாம் கேட்டுக் கொள்வார்.. ஆனால் எந்த பத்திரிகை, புத்தகங்களிலும் அவைகளை பதிவு செய்யவில்லை.

அதேபோல ஒவ்வொரு நடிகர்களை நேரில் சந்தித்து பேசும்போது நினைவுப்பரிசு ஒன்று அவர்களிடம் வாங்கிவிடுவார்.. அந்தவகையில் சிவாஜியிடம் வாட்ச் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.. கடைசியில் ஆசைப்பட்டபடியே வாங்கிவிட்டார்..
அதேபோல எம்ஜிஆரிடம், அவர் வீட்டில் பயன்படுத்திய கட்டில் கேட்டிருந்தார்.. கலைஞரிடம் பேனாவை கேட்டு வாங்கினார்..

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணாவிடம் சட்டையை வாங்கியிருந்தார்.. இதையெல்லாம் எங்களிடம் காட்டியிருக்கிறார்.. குமுதம் பத்திரிகையிலும் அவைகளை வெளியிட்டிருந்தோம்.

மனைவி இறந்தபிறகு, சோர்வும் வருத்தமும் வந்துவிட்டது.. கமலை வைத்து படம் எடுக்க ராஜேஷ் விருப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.. அப்படியெல்லாம் எந்த எண்ணமும் ராஜேஷூக்கு கிடையாது.. தன்னுடைய மகனை வைத்து படம் துவங்கினார்.. அப்படத்தின் முதல் ஷெட்யூல் நடந்தது.. அதற்குபிறகு அந்த படம் நின்றுவிட்டது.. பாதி படத்துக்கு மேல அது நின்றுவிடவும், சொந்த படம் என்பதால், அந்த பாதிப்பும் அவருக்குள் இருந்தது..

வெண்ணிற ஆடை மூர்த்தி

எப்போதுமே மணிக்கணக்கில் ராஜேஷ் பேசுவார்.. வெண்ணிற ஆடை மூர்த்தியும், ராஜேஷூம் ஏதோ ஷூட்டிங்கில் ஒன்றாக நடித்தார்களாம். 2 பேரும் இரவு பேச ஆரம்பித்தவர்கள், மறுநாள் காலை வரையிலும் பேசிக் கொண்டேயிருந்தார்களாம்..

ஜோசியம், உலக சினிமா, இலக்கியம், கம்யூனிஸம் என அனைத்து விஷயங்களையும் பேசுவார்.. எம்ஜிஆர் பற்றி பேச சொன்னால் மணிக்கணக்கில் பேசுவார்.. எம்ஜிஆர் பற்றி பேச வைப்பதற்காகவே, பலமுறை ராஜேஷை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. ஆனால் சிவாஜி கணேசனை பற்றி பேச சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+