பாடகியுடன் வந்த ஜெயம் ரவி.. 2வது கல்யாணமா? பணம் காய்க்கும் மருமகன் ஒருநாள் திமிறியெழுந்து: பிரபலம்
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரவியும் அவரது தோழி கெனிஷா பிரான்சிஸூம் ஜோடியாக வரும் காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. விவாகரத்திற்கும் கெனிஷாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பேசியிருந்த நிலையில், இவர்கள் இருவரும் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு "இந்த திருமணத்துக்கு ஜெயம் ரவியும், கெனிஷாவும் வந்துள்ளார்கள்.. இதுதான் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.. இருவரும் தைரியமாக வர ஆரம்பித்துவிட்டார்களா? என்று இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள்.

தனிப்பட்ட விஷயம்
இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட விஷயமாகும்.. அதற்குள் புகுந்து யாரும் கருத்து சொல்ல முடியாது. ஆனால் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்றுதான் தெரியவில்லை.. அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார், ஜெயம் ரவியை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம்.. ஜெயம்ரவி என்ன சாப்பிடணும், எப்போது தூங்கணும் என்பது வரை முழு கன்ட்ரோலில் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். மனைவி ஆர்த்தியும், ஜெயம் ரவி எங்கே போனாலும், ஸ்பை வைத்து பார்த்ததாக கூறுகிறார்கள்.
அக்கவுண்ட் கூட இல்லை
ஜெயம் ரவிக்கு செலவுக்கு பணம் தரவில்லை என்பதும், தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவிக்கு பேங்க் அக்கவுண்ட் கூட இல்லை என்பதும் பரிதாபமான விஷயமே.. ஏன் இவ்வளவு அடக்குமுறையில் அங்கு தவித்தார் என்றுதான் தெரியவில்லை.. எப்போதுமே ஒருவரை அடக்கினால், திமிறிட்டு எழுவார்கள்.. குட்ட குட்ட ஒருநாள் நிமிர்ந்து விடுவார்கள்.
சுஜாதா விஜயகுமார் நிறைய டிவி சீரியல்களை தயாரித்தவர்.. அந்த சீரியல்களில் பணிபுரிந்தவர்கள், நடித்தவர்கள் பெரும்பாலும் சொல்வது, சம்பளம் கேட்டால், யாரையுமே அவர் மதிக்க மாட்டாராம்.. நேருக்கு நேராக கூட பார்க்க மாட்டாராம். ஆரம்பத்தில் சீரியல்களுக்கு சன்டிவி சப்போர்ட் செய்து வந்த நிலையில் தற்போது பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது.
செலவுக்கு பணம்
ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியை தந்திருந்தது.. அந்தபடம் ஜெயம் ரவியின் வாழ்க்கையையே மாற்றியிருக்க வேண்டும்.. வேறொரு உச்சிக்கு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து தோல்வி படங்களை தந்து கொண்டிருந்தார். இதற்கு காரணம், படத்தின் கதையை கேட்பது அவரது மாமியார்தானாம். தான் சொல்லும் பேனரில்தான் ஜெயம் ரவி நடிக்க வேண்டும் என்பாராம்.
ஒருகட்டத்தில் மருமகனை வைத்து, தானே படம் தயாரித்து, அதில் காசு பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வந்துள்ளது. ஏற்கனவே ஜெயம்ரவியை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் சரியாக ஓடவில்லை.. அதற்கு சரியாக ஜெயம் ரவிக்கு சம்பளமும் தரரப்படவில்லை.
பணம் காய்க்கும் மரம்
மொத்தத்தில் பணம் காய்க்கும் மரமாகவே பார்த்தாரே தவிர, மருமகனாக பார்க்கவில்லை என்கிறார்கள்.. ஆனால், அவரது மனைவி ஆர்த்தி மீது தவறும் இல்லை.. ஜெயம் ரவியிடமும் அன்பாகவே இருந்துள்ளார்.. தன்னுடைய அம்மா பேச்சை கேட்டு நடந்து கொண்டிருக்கிறாரே தவிர, தன்னிச்சையாக எதுவுமே ஜெயம் ரவிக்கு எதிராக செய்யவில்லை.
எனினும் இன்று கெனிஷாவுடன் திருமணத்துக்கு வந்துள்ளார் ஜெயம் ரவி.. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.. ஒன்றாக ஐசரி மகள் திருமணத்துக்கு வந்தார்கள் என்பதற்காக இதனை தவறாகவும் பேசமுடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications