மறைந்த நடிகர் சேதுராமன் ஹாஸ்பிட்டலை திறந்து வைத்த சந்தானம்! உருக்கமாக பேசிய மனைவி! மாறாத நட்பு
சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சேதுராமன் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அவருடைய மறைவுக்கு பிறகும் அவருடைய நண்பரான சந்தானம் சேதுராமனின் மனைவியின் புதிய மருத்துவமனையை திறந்து வைத்திருக்கிறார். அப்போது சேதுராமன் மனைவி உருக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகர் சேதுராமன் வாலிப ராஜா, சக்கைபோடு ராஜா போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு டாக்டராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நாள் 28 வயதான டாக்டர் சேதுராமன் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. அது உண்மையாக இருக்காது இது பொய்யாகி விடாதா என்று தான் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அவர் காலமானார்.

சேதுராமன் உமா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், சேதுராமன் இறந்தபோது அவருக்கு ஒன்றரை வயதிலேயே மகள் இருந்தார். அந்த குழந்தையோடு அவர் எடுத்த புகைப்படங்கள் சேதுராமன் மறைந்த சமயத்தில் அதிகமாக ஷேர் ஆனது. அது பார்ப்பவர்களையும் கலங்க வைக்கும் வேதமாக இருந்தது. சேதுராமன் மறைவுக்கு பிறகு அவருடைய மனைவி ஹாஸ்பிடலை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சேதுராமனின் மனைவி சேதுராமன் பெயரில் புதிய ஹாஸ்பிடல் ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். அதில் நடிகரும் சேதுராமனின் நெருங்கிய நண்பருமான சந்தானம்தான் சிறப்பு விருந்தினராக வந்து ஹாஸ்பிடலை திறந்து வைத்திருக்கிறார்.
அப்போது சேதுராமன் மனைவி பேசும்போது, சந்தானம் அண்ணா இங்கே வந்து ஹாஸ்பிடலை திறந்து வைத்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், அவர் என்னுடைய கணவரின் நண்பர் மட்டுமல்ல எங்க கூட பிறக்காத ஒரு சகோதரராகத்தான் இருந்து வருகிறார். ஐந்து வருஷமாக எங்கள் குடும்பத்தின் உறுதுணையாக இருக்கிறார். எந்த விஷயம் என்று சொன்னாலும் உடனே வந்து விடுவார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு என் கணவரின் பிறந்தநாளில் ஈசிஆரில் ஒரு ஹாஸ்பிடலை திறந்து வைத்தார். இப்போது இந்த புதிய கிளையையும் திறந்து வைக்க வந்திருக்கிறார் என்று பாராட்டி இருந்தார். அதுபோல சேதுராமன் மறைவு குறித்து உமா பேசும்போது, வெளி உலகத்திற்கு சேது உயிரோடு இல்லாத மாதிரி தெரியலாம். ஆனா அவர் உருவாக்கிய கிளினிக், வீடுன்னு எல்லாவற்றிலுமே உணர்வுபூர்வமாக நிறைந்து இருக்கிறார். அதனால் அவருடனான வாழ்க்கையை என்னால் ஈசியாக மறந்து விட முடியாது, கடந்து விடவும் முடியாது என்று உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications