நான் 2000 முறை தற்கொலை செஞ்சிருக்கணும்..எல்லாம் போச்சு! ஏன் இப்படி பண்ணுறாங்க? சரத்குமாரின் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தான் பெற்ற கஷ்டங்களை பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தற்போது அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் தனக்கு வந்த பிரச்சனைக்கெல்லாம் நான் 2000 முறை தற்கொலை செஞ்சிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் தான் தற்கொலையை பற்றி நினைத்து கூட பார்த்தது கிடையாது என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

இதற்கெல்லாமா தற்கொலை

இதற்கெல்லாமா தற்கொலை

வெள்ளித்திரை சின்னத்திரை என்று கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் அனைவருக்கும் பிரபலமானவர்தான். அரசியலிலும் சரி நடிப்பிலும் சரி தனக்கென்று அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் திடீரென்று நேற்று இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் சிலர் ஐந்து மார்க்கு கம்மியாக வாங்குனா தற்கொலை, காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கஷ்டமான நேரம்

கஷ்டமான நேரம்

ஆனால் இந்த உலகத்தில் எதற்காக வந்தோம் என்பதை முதலில் உணர வேண்டும். அப்படி பார்த்தால் 2000 முறைக்கு மேல நானும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். நான் எடுத்த படம் நஷ்டமாகி தெருவுக்கு வந்துட்டேன். எல்லாத்தையும் வித்துட்டேன். மவுண்ட் ரோட்டில் இருந்து வீட்டுக்கு வர என்னிடம் பணம் கிடையாது. 5 ரூபாயை கையில் வைத்துவிட்டு ஆட்டோவில் ஏறினால் அதிகமாக வந்துவிடுமோ என்று மீட்டரை பார்த்துக் கொண்டே வருவேன்.

உதவிய நண்பன்

உதவிய நண்பன்

அப்போது என்னுடைய நண்பர் சுந்தரேசன் தான் எனக்கு பல உதவிகளையும் செய்தார். எப்போதும் என்னோடுதான் அவன் இருந்து வருகிறான். இரவு 12 மணிக்கு வந்து வீட்டுக் கதவை தட்டினான். என்னடா இந்த நேரம் என்று கேட்டேன். உன் பாட்டு கேட்டேன் ரேடியாவில், உன்னிடம் பணம் இல்லையே? அதனால 150 ரூபாய் எடுத்து வந்தேன் என்று கூறினார். நான் அந்த அளவுக்கு மோசமான சூழலை சந்தித்தேன்.

உடலில் ஏற்பட்ட பிரச்சனை

உடலில் ஏற்பட்ட பிரச்சனை

ஆனால் அனைத்து சூழலிலும் நான் வாழ தான் நினைச்சேன். எல்லாவற்றையும் சரி செய்யும் சூழல் கட்டாயம் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசி இருக்கிறார். மேலும் எப்படா இவனை காலி பண்ணலாம் என இந்த உடல் காத்துக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு நோயை கொடுக்க காத்துக் கொண்டிருக்கும். நான் 65 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தேன். ஆறு மாதம் முடங்கிப் போனேன்..

மீண்டு வந்த தருணம்

மீண்டு வந்த தருணம்

முதுகு எலும்பு எடுத்து அறுவை சிகிச்சை செய்தார்கள். இரண்டு அடிக்கு கூட குதிக்க கூடாது என்றார்கள். கார் ஓட்டக்கூடாது, பைக் ஓட்டக்கூடாது என்றார்கள். எப்படி முடியும் என் தொழிலே நடிப்பு தானே..!? இதையெல்லாம் செய்யாமல் என்னால் முடியாது என்று டாக்டரிடம் கூறினேன். அந்த நேரத்தில் பத்திரிக்கையில் சரத்குமாரின் "கலைப்பயணம்" முடிந்தது என்று போட்டிருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து என்னுடைய முயற்சியால் நான் மீண்டும் திரும்ப வந்து தான் சூரியன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தேன் என்று பல தகவல்களை கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+