ஷேசுக்கா இந்த நிலைமை? என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா? கதறி அழும் அவர் பகுதி மக்கள்
சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேசு மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய பகுதி மக்கள் கண்ணீரோடு பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் அந்தப் பகுதி மக்கள் சேசு நல்லபடியாக மீண்டும் திரும்பி வரணும். அவர்தான் எங்களுக்காக பல உதவிகளை செய்து வந்தார். இந்த பகுதி மக்கள் நல்லா ஒரு ரோட்டில் போவதற்கு காரணம் கூட அவர்தான். பல பேருடைய திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். எங்கள் வீட்டில் ஒருவராக பல உதவிகளை செய்தார் என்று கண்ணீரோடு பேசியிருக்கிறார்கள்.

அந்த வகையில் சின்ன திறையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சிலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சேசுவும் ஒருவர். இவர் வெள்ளித் துறையில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சேசு நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து பல திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.
அதிலும் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, நாய் சேகர் ரிட்டன்ஸ், பூமர அங்கிள், பரம்பரை என்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படியாக இவருடைய நடிப்பு வாழ்க்கை ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் இவருடைய சமூக சேவையை அவர் வாழ்ந்த பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.
தான் வேலை செய்யும் சம்பளத்தில் கிடைக்கும் அதிகமான பணத்தை அந்த பகுதி மக்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து கொடுத்து விடுவாராம். கொரோனா காலகட்டத்தில் பலருக்கு அரிசி வாங்கி கொடுத்திருக்கிறாராம். அது போல அந்த பகுதி ஏழ்மையான பகுதி என்பதால் அங்கு வயதானவர்களுக்கு பாய், போர்வை, தலையனை போன்றவற்றையும் வாங்கி கொடுத்திருக்கிறாராம்.
அது மட்டும் அல்லாமல் ஆறு பெண்களுக்கு திருமணத்திற்கு தேவையான நகைகள், சீர்வரிசை எல்லாம் செய்து கொடுத்து திருமணத்தையும் நடத்தி வைத்திருக்கிறாராம். அதுபோல இன்னும் இந்த வருடத்தில் அதிகமான பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தாராம். அதோடு அந்த ஊரில் ரோடு போடுவதற்கு கூட சேசு தான் காரணம் என்று அந்தப் பகுதி மக்கள் கண்கலங்க கூறியிருக்கிறார்கள்.

எங்கள் வீட்டில் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் உடனே வந்து நிற்கும் நபர் அவர்தான். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. அவர் சீக்கிரமாக மருத்துவமனையிலிருந்து நல்லபடியாக குணமாகி வரவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கண்கலங்க கூறியிருக்கிறார்கள். சேசுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சேசுவின் மகன் தந்தையின் உடல் நிலை தேறி வருகிறது. கொடுக்கு மருந்துகள் நன்றாக வேலை செய்கிறது... அப்பா இயல்பு நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும் சிகிச்சைக்கு தேவையான பணம் இன்னும் அதிகமாக தேவைப்படுவதால் முடிந்தவர்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சேசு வாழும் பகுதி மக்கள் உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications