விஜய் எனக்காக இதை செய்யணும்! உயிருக்கு போராடினாலும் “வைராக்கியமாக” பேசிய பத்ரி பட நடிகர்
சென்னை: சினிமாவில் நாம் பார்த்து வியந்த பல நடிகர்கள் தற்போது உடல்நிலை சரியில்லாமல் பார்ப்பதற்கே பரிதாபமாக இருப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அதிலும் பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு கராத்தே சொல்லிக் கொடுத்த நடிகர் தற்போது பேசிய வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் நடிகர் விஜயிடம் கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.
பிரபல கராத்தே நிபுணரும் திரைப்பட நடிகருமான சிகான் உசேனியின் பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் கராத்தே பயிற்சி அளிப்பவராகவும், திரைப்படங்களில் நடிகராகவும் பலருக்கும் பிரபலமானவர். அதுபோல சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

கராத்தே நிபுணர்
அதுபோல கராத்தே சிகான் உசேனி இளம் தற்காப்பு கலை சண்டை பயிற்சி பெற விரும்புபவர்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்திருக்கிறார். இந்த பள்ளியில் பல பிரபலங்களும் படித்திருக்கிறார்கள். அதுபோல இவர் முதல் முதலாக பாலச்சந்தரின் புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார்.
பத்ரி படத்தில் நடிப்பு
அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் வேலைக்காரன், உன்னை சொல்லி குற்றமில்லை, வேடன், பத்ரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் விஜயுடன் பத்ரி திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்தில் விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.
ரத்த புற்று நோய் பாதிப்பு
அதுபோல நடிகர் விஜய் மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு இவர்தான் கராத்தே பயிற்சியும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் சிகான் உசேனி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தனக்கு ரத்த புற்று நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்.
அனைவரின் நம்பிக்கை
ஆனாலும் என்னை சுற்றி இருப்பவர்களும் என்னுடைய மாணவர்களும் எனக்கு இந்த நோய் வந்திருப்பதற்கு வருத்தப்படவில்லை. அவர்கள் நான் எல்லா தடைகளையும் தாண்டி வருவேன் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு குழந்தைகள் இல்லை, தாயும் இல்லை என்னுடைய மாணவர்கள்தான் என்னை இதுவரைக்கும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.
வைராக்கிய வார்த்தை
அதுபோல நான் மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்னவென்றால் சாவை பார்த்து யாரும் பயப்படக்கூடாது. சாவுக்கு நேரா சண்டை போடணும். சாவை சவால் விட வேண்டும். ஒருவேளை இறந்து விட்டால் அதை கொண்டாட வேண்டும் இதையெல்லாம் பார்த்து அசரக்கூடிய ஆட்கள் நானும் என்னுடைய மாணவர்களும் கிடையவே கிடையாது.
இதுதான் ஆசை
என்னை பொருத்தவரை சாவு என்பது முடிவே கிடையாது. இறப்பு என்பது டெசிஷன் தான். என்னுடைய ஒரே ஒரு கனவு என்னவென்றால் தமிழ்நாட்டை சேர்ந்த என்னுடைய மாணவர் அல்லது மாணவி ஒலிம்பிக் மெடல் வாங்க வேண்டும். அதற்காக நான் கட்டி வைத்த கலை மாளிகையை உடனடியாக விற்று அந்த பணத்தை எல்லாவற்றையும் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்று வரும் என்னுடைய மாணவிகள் ஒலிம்பிக் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

விஜய்க்கு வைத்த கோரிக்கை
என்னுடைய ஒரே ஆசை என்னுடைய இந்த இடம் சரித்திர கோயில். அதுபோல பவன் கல்யாண் மற்றும் விஜய் எல்லாரும் என்னுடைய மாணவர்கள் தான். விஜய்யும் என்னிடம் பத்ரி படத்திற்காக கராத்தே கற்றுக்கொண்டார். அந்த படத்தில் விஜயின் கை மேல் கார் ஏறியது எல்லாம் உண்மைதான். அவருக்கு நான் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன், அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வத்தை வீரர் வீராங்கனையை உருவாக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் சிகான் உசேனி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications