மகளுக்கு நேற்று கல்யாணம்.. ஆனால் 8 மாத கஷ்டம்.. நடிகர் விஜயகுமார் மகள் அனிதா வெளியிட்ட திடீர் பதிவு
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமாக நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த நிலையில் தியாவின் அம்மாவான நடிகை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியாவின் திருமண புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இந்த திருமணத்திற்காக பலருடைய உழைப்பு இருக்கும் நிலையில் அதற்கு நன்றி கூறி இருக்கிறார். இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா நடிகர் சரத்குமார் நடித்த கூலி திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த நிலையில் திருமணம் முடிந்து திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவிற்கு நேற்று முன்தினம் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தியாவின் திருமணத்திற்கு பல வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதில் நடிகர் ரஜினி, பிரபு, பிரசன்னா, கே எஸ் ரவிக்குமார் உட்பட அதிகமான நடிகர்களும், பாடகர்களும் நடிகைகளும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தியிருந்தனர். அதோடு விஜயகுமாரின் குடும்ப உறவுகளும் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களுடைய மகிழ்ச்சிகளை கொட்டிக் கொண்டிருந்தனர்.

கடந்த ஒரு வாரமாகவே விஜயகுமார் வீட்டில் பங்க்ஷன் களைகட்டி கொண்டிருந்தது. திருமண பந்தக்கால் நடுதல், சுமங்கலி பூஜை, மெஹந்தி பங்க்ஷன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பங்க்ஷனை கொண்டாடி குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். நடிகர் விஜயகுமாருக்கு அனிதா, கவிதா, வனிதா, அருண் குமார், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்று மகன் மகள்கள் இருக்கின்றனர்.
எல்லோருமே சினிமா துறையை சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அனிதா மட்டும் ஒரே ஒரு திரைப்படத்தோடு சினிமா வாழ்க்கையை முடித்து விட்டார். பிறகு ஒரு டாக்டரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நிலையில் அனிதாவின் மூத்த மகள் தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. ஆனால் இந்த திருமண பங்க்ஷனில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்திருக்கும் வனிதாவை கூப்பிடவில்லை.

இதற்கு ஜாடை மாடையாக பதில் சொல்கிற மாதிரி வனிதாவும் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவும் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு சிங்கம் ஒன்று தனியாக நடந்து வருவது போல வைத்து சிங்கம் எப்போதும் தனியாகத்தான் இருக்கும் என்று கேப்ஷனும் கொடுத்திருந்தார். இதனால் வனிதா தன்னுடைய குடும்பத்தினர் தன்னை திருமணத்திற்கு கூப்பிடவில்லை என்பதற்காக இப்படி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படியாக இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அனிதா தன்னுடைய மகள் திருமணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு அது குறித்து ஒரு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய இளவரசிக்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை காண வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகி உள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக ஒவ்வொரு விஷயத்திலும் திட்டமிட்டு ஒவ்வொரு வேலைகளையும் மிகவும் குறைபாடற்ற முறையில் நிறைவேற்றுவதற்காக ஒட்டுமொத்த நிகழ்வு குழுவில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் என்னால் நன்றி சொல்ல முடியாது என்று தன்னுடைய மகள் திருமணத்திற்காக வேலை செய்த அனைவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியையும் டேக் செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதிலும் மேடையை அலங்கரித்த நபர் முதல் தியாவிற்கு அலங்காரம் செய்தவர்கள் வரை அனைவருடைய பெயரையும் அனிதா டேக் செய்து இருக்கிறார். அதோடு இன்னும் பல மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னுடன் நின்று இந்த அழகான நிகழ்வை இந்த மாதங்களில் என்னுடன் சேர்த்துக் கொண்டதற்காக என் இதயத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், என்னுடைய மகள் புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைக்க எல்லோருடைய ஆசிகளும் தேவை என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பல நடிகர் நடிகைகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications