நான் கடைசியாக அழுதது வரலட்சுமிக்காக தான்.. அந்த வீடியோவை பார்த்து.. ஓப்பனாக பேசிய விஷால்
சென்னை: நடிகர் விஷால் மதகஜராஜா திரைப்பட வெற்றி விழாவில் வரலட்சுமி குறித்து பேசி இருக்கிறார். நான் எந்த விஷயத்திற்காகவும் அழ மாட்டேன் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்வேன் ஆனால் கடைசியாக அழுதது வரலட்சுமிக்காக தான் என்று விஷால் பேசி இருக்கிறார்.
சில வாரங்களாகவே நடிகர் விஷால் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக காணப்படுகிறது. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா தற்போது ரிலீசாவதற்கு முன்பு ப்ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போது விஷால் அதில் கலந்துகொண்டபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதுவரைக்கும் கம்பீரமாக பார்த்த விஷால் முகம் எல்லாம் வீங்கி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டு, மைக்கை கூட கையால் பிடிக்க முடியாது அளவிற்கு கைகள் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தது. இதை பார்த்ததும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இவர் இப்படி மாறிவிட்டார் என்பதுதான் பலருடைய கேள்வி. அதுவரைக்கும் அவரை ட்ரோல் செய்தவர்கள் கூட விஷாலுடைய உடல் நிலையை பார்த்து பதறிப் போனார்கள். அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று கூறி வந்தார்கள்.
அதே நேரத்தில் யூடியூபர்கள் சிலர் விஷால் குறித்து அவதூறு பரப்பி வந்ததையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் மதகஜராஜா திரைப்பட ரிலீஸின் போது விஷால் பழைய நிலைக்கு கெத்தாக திரும்பி இருந்தார். அதோடு தனக்கு வைரஸ் காய்ச்சல் தான் பாதிக்கப்பட்டு இருந்தது, அந்த நேரத்தில் காய்ச்சல் அதிகமாக இருந்தாலும் நான் சுந்தர் சி கூப்பிட்டதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

ஆனால் என்னை எத்தனை மக்கள் ரசிப்பார்கள் என்று எனக்கு தெரியாது எனக்கு அந்த நிகழ்ச்சி தான் மக்களுக்கு என் மீது இருக்கும் அன்பை தெரியப்படுத்தியது என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் தற்போது மதகஜராஜா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது இந்த திரைப்படத்திற்கான வெற்றி விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட விஷால் தனக்காக பிரேயர் பண்ணினவர்களுக்கும், தான் மீண்டும் நலம் பெற வேண்டும் என்று போன் செய்து பேசியவர்களுக்கும் மெசேஜ் செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். அதோடு வரலட்சுமி குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் இதுவெல்லாம் ஒரு விஷயமா என்று எனக்கு நானே சொல்லிகொள்வேன்.

எனக்கு கண்ணாடி முன்பு பேசும் பழக்கம் இருப்பதால் எனக்கு நான் தான் எப்போதும் ஆறுதல் சொல்லிக் கொள்வேன். ஆனால் கடைசியாக நான் அழுதது வரலட்சுமிக்காகத்தான் வரலட்சுமி நடித்த அனுமான் படத்தில் தேங்காய் வைத்து பைட்டு சீன் வரும். அந்த சீனைப் பார்த்ததும் நான் அழுதுவிட்டேன். காரணம் வரலட்சுமி நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்காங்க.
அவங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல என்று தான் நான் சொல்வேன். என்னை விட இந்த சமுதாயத்தில் அதிகமானோர் அழகாகவும் திறமையாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்கு செல்லமே படத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் நல்ல வாய்ப்பு அதிகமா கிடைத்திருக்கிறது. ஆனால் அதுபோல வாய்ப்பு கிடைக்காமல் வரலட்சுமி பீல் பண்ணி இருக்கிறார். அதை நினைத்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது என்று அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசியிருக்கிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications