ரூ.1000 கோடி வரதட்சணை.. விஷாலை அந்த 2 இடத்திலுமே தன்ஷிகா கண்டுக்கலையே.. இங்கேதான் கல்யாணம் நடக்குதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலுக்கு திருமணம் முடிவாகிவிட்டது. ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஷாலுக்கும் தர்ஷிகாவுக்கும் இடையே காதல் உருவாகி திருமணம் வரை முடிவாகிவிட்டதாம். ஆகஸ்ட் 29ல் விஷாலின் பிறந்தநாளில் இவர்களின் திருமணம் முடிவாகியிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

2nd Floor என்ற யூடியூப் சேனலிலுக்கு பேட்டி தந்துள்ளார் சேகுவேரா.. 1000 கோடி வரதட்சணையுடன் விஷாலை திருமணம் செய்யும் தன்ஷிகா என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்த பேட்டியில், "ஏற்கனவே பல நாட்களாகவே விஷாலுக்கு திருமண பேச்சு நடந்து வருகிறது.. சில முயற்சிகள் பெற்றோர் எடுத்தனர்.. ஆனாலும் அது ஒர்க் அவுட் ஆகவில்லை..

Television Vishal Sai Dhanshika

எல்லாரும் எப்போது கல்யாணம் என்று விஷாலை கேட்க ஆரம்பித்துவிடவும், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததுமே திருமணம் என்று அறிவித்துவிட்டார்.. இப்போது அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் மாதம் திறப்பு விழா நடக்கிறது. இதற்கு மேலும் திருமணத்தை தள்ளிப்போடவும் முடியாது.

அக்டோபர் மாதம்

எனவே ஆகஸட் மாதம் திறந்ததுமே, அக்டோபர் மாதம் தனக்கு காதல் திருமணம் என்பதையும் அறிவித்துவிட்டார். ஆனால் யார் அந்த நடிகை என்பதை சொல்லவேயில்லை..

தன்ஷிகாவுக்கு பெரிய ஸ்டார் வேல்யூ இருப்பது போல் தெரியவில்லை.. ஆனால், அவர் நிறைய படங்களில் நடிப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள்.. இப்போது திருமணம் முடிந்தும் நடிப்பார்களா என்று தெரியவில்லை. தன்ஷிகா விஷாலை காதலிக்கிறார் என்ற விஷயமே பலருக்கும் தெரியாமல்தான் இருந்தது..

தன்ஷிகாவுடன் நட்பு

ஒருவிழாவில், டி.ராஜேந்தர் தன்ஷிகாவை திட்டி சலசலப்பு ஏற்பட்டது.. அப்போது விஷால்தான், தன்ஷிகாவுக்கு சப்போர்ட்டாக இருந்து வந்துள்ளார்.. அபபோதிருந்தே இவர்களுக்குள் தொடர்பு இருந்து வந்திருக்கலாம். நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்ததால் பல பஞ்சாயத்துகள் வரும்.. அப்படிதான் தன்ஷிகா விவகாரத்திலும் நடந்திருக்கலாம்.

மதகதராஜா பட விழாவின்போது விஷாலுக்கு கை நடுக்கம் இருந்தது. அதேபோல, கூவாகம் விழாவிலும், மயக்கம் போட்டு மேடையிலேயே கீழே விழுந்துவிட்டார். இந்த இரு நிகழ்வுகளுமே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன..

ஆனால், அப்போதெல்லாம தன்ஷிகா என்ற நடிகையிடம் எந்த ரியாக்‌ஷனுமே காணப்படவில்லை. நாம் விரும்பக்கூடியவர், திருமணம் செய்யக்கூடியவர் என்றால், ஏதாவது ஒரு ரியாக்‌ஷன் வந்திருக்கணுமே? அந்த அளவுக்கு இவர்களின் உறவை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.. எப்படியோ விஷாலுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான். இதுக்கு மேலும் திருமணத்தை தள்ளிப்போட முடியாது.

ஜெயம் ரவி - சிம்பு

ஜெயம் ரவி என்றால், நடிகைகள், ரசிகைகள் எல்லாருக்குமே பிடிக்கும்.. எந்த கிசுகிசுவும் அவர் மீது வந்ததில்லை.. இப்போது கெனிஷா என்றதும்தான், அனைவருக்கும் ஜெயம் ரவி மீது கோபம் வருகிறது. அந்த அளவுக்கு ஜெயம் ரவியை நம்பினார்கள்.. ஆனால், இப்படி விஷாலை யாரும் சொல்ல மாட்டார்கள்.. சிம்புவை எடுத்து கொண்டால், சிம்புவைதான் பல பெண்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். இதுவரை எப்படியோ, இனி திருமணத்துக்கு பிறகு விஷால் மகிழ்ச்சியாக வாழணும்.

விஷாலுக்கு எங்கு திருமணம்

விரைவில் திறக்கப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் பல வசதிகள் உள்ளதாக தெரிகிறது.. கல்யாண மண்டபமும், அந்த கட்டிடத்திலேயே இருப்பதாக சொல்கிறார்கள்.. எனவே, நடிகர் சங்க கட்டிடத்தில்கூட திருமணம் நடக்கலாம்..

இது காதல் திருமணம் என்பதால், சாதி, மதம் இங்கு முக்கியமில்லை.. விஷால் மீது மொழி சார்ந்து அதாவது தெலுங்கன் என்று விமர்சனங்கள் வரக் காரணமே, சிலர் விஷாலை வேண்டுமென்றே சிக்க வைக்கிறார்கள்.. சமீபத்தில் மே 18 நிகழ்ச்சியிலும் அப்படித்தான் நடந்தது.. ஒரு நடிகரை நடிகனாக மட்டுமே பார்க்காமல் மொழி சார்ந்து பார்க்கக்கூடாது. இதை விஷாலும் புரிந்து, கவனமுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+