நாடோடிகள் நடிகை அபிநயாவின் கணவரை தெரியுமா? கார்த்திக் இத்தனை பெரிய தொழிலதிபரா?
சென்னை: நாடோடிகள் நடிகை அபிநயாவின் வருங்கால கணவர் யார் தெரியுமா? அவரும் தொழிலதிபர்தானாமே! நடிகர் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த அபிநயா, தனது வருங்கால கணவர் குறித்து புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் எனும் படத்தில் நடித்தவர் அபிநயா. இவரால் வாய் பேச முடியாது. இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனாலும் இவருக்கு நடிப்புத் திறமை ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன், 7ஆம் அறிவு, ஈசன், மார்க் ஆண்டனி, தனியொருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிநயா. இவர் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். இவர் லாரன்ஸ் ராகவேந்திரா மாஸ்டரின் நடன பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
இவருக்கு நடிகர் விஷாலுடன் காதல் இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்தி ஏற்பட்டது. ஆனால் அபிநயா இதை மறுத்து, தானும் விஷாலும் நல்ல நண்பர்கள் என்று சைகை மொழியில் தெரிவித்தார்.
மேலும் தான் தனது நெருங்கிய நண்பரை காதலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அது போல் திருமண வதந்தி குறித்து நடிகர் விஷால் கூறுகையில், அந்த பொண்ணு எனது சகோதரி மாதிரி. எனது நல்ல தோழி. நான் பேசுறது அவங்களுக்கு நன்றாக புரியும். அது போல் அவர் பேசும் மொழி எனக்கும் புரியும். இதனால் நான் அவருடன் நன்றாக பழகினேன். மற்றபடி அதைத்தாண்டி ஒன்றுமே இல்லை என்றார்.
இருவருக்கும் மார்ச் 9 நிச்சயதார்த்தம் நடந்தது. மோதிரம் அணிந்த கைகளால் கோவில் மணியை அடிப்பது போன்று பின்பக்க புகைப்படத்தை மட்டும் அபிநயா தனது இன்ஸ்டா பக்கத்தில் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கல்யாணம் செய்து கொள்ள போகும் நபரின் முகத்தை காட்டியுள்ளார் அபிநயா. அவரது பெயர் கார்த்திக். 'The easiest Yessss" என குறிப்பிட்டிருக்கிறார். கார்த்திக் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர். அவருக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் என பல தொழில்கள் இருக்கின்றன.
அபிநயா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிக மொழிகளில் நடித்த பெருமைக்குரியவர். இவருக்கு சிறு வயது முதலே வாய் பேச முடியாது.
சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் போது அந்த வழியாக ஐஸ்வர்யா ராயின் போஸ்டர் இருப்பதை பார்த்து தனது தந்தையிடம் தினமும் காட்டுவாராம். ஆனால் அவருக்கு தனது மகள் என்ன சொல்கிறார் என புரியவில்லையாம். ஒரு முறை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை காட்டினாராம். அப்போது "உனக்கு அவரை போல் நடிகையாகணுமா" என கேட்டாராம்.
அதற்கு அபிநயா , ஆம் என சொன்னதும், தனது மகளை நடிகையாக்க கேரளாவில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சென்றாராம். ஆனால் அங்கு எல்லோருமே அவர் வாய் பேச முடியாதவர் என்பதால் நிராகரித்தனர். ஒரு முறை ஒரு கேரள தயாரிப்பாளரிடம் அபிநயாவின் தந்தை தனது மகளின் போட்டோஷூட் புகைப்படத்தை கொடுத்துவிட்டு வந்தாராம்.
அவரும் வேண்டா வெறுப்பாகத்தான் வாங்கி வைத்தாராம். அப்போதுதான் நாடோடிகள் படத்திற்கு ஒரு புதுமுக நடிகையை சமுத்திரகனி தேடினாராம். இதற்காக அந்த கேரளா தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற போது அவர்தான் அபிநயாவின் புகைப்படத்தை சமுத்திரகனியிடம் கொடுத்தாராம். அவருக்கும் அபிநயாவை பிடித்து போக அவரை அழைத்து நடிக்க சொன்ன போது அவரது திறமை வெளிப்பட்டதாம். இப்படித்தான் அபிநயா நடிக்க வந்தார். ஆனால் வசனத்திற்கேற்ப வாய் அசைப்பதற்கு நிச்சயம் திறமை வேண்டும். அது அபியிடம் நிறைய இருக்கிறது.












Click it and Unblock the Notifications