அனுராதா மகள் அபிநயா ஓபனா சொல்லிட்டாங்க! சும்மா புகையுதா? மெச்சூரிட்டி இல்லாத தினேஷ் மாஸ்டர்: பிரபலம்
சென்னை: டான்ஸ் யூனியனில் இருந்து குற்றச்சாட்டுகள் ஏன் வருகிறது? இல்லாமலேயே புகார் சொல்கிறார்களா? சிசிடிவி இல்லாத இடமாக இழுத்து சென்று கௌரி சங்கரை தாக்குகிறார் என்றால், தினேஷ் ஒரு பக்குவமற்ற தலைவர் என்பதையே காட்டுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "லியோ பட
நடனத்துக்காக, 35 முதல் 40 லட்சம் தொகையை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பல இளைஞர்கள், இளம்பெண்களின் வயிற்றிலும் அடிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து கேள்வி கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இதனால் நடன இயக்குனர்கள் சங்கமே களேபரமாக காணப்படுகிறது.

40 லட்சம் பணம்
இதுல யாரையும் உயர்த்தி தாழ்த்தி பேச வேண்டிய அவசியமில்லை.. சண்டை பயிற்சி, நடனம் இந்த 2 துறைகள்தான் சினிமாவிலேயே அதிகமாக உழைக்கக்கூடியது.. இதில் சண்டை பயிற்சி ரிஸ்க் எடுத்து, உயிரை பணயம் வைத்து செய்யக்கூடிய வேலையாகும்..
இந்த இரு துறைகளின் தொழிலாளர்களும், சேர வேண்டிய பணத்தை தந்துவிடுவதே நியாயமானதாகும்.. இதில் யாராவது ஒருவருக்கு பணம் குறைவாக தந்தாலும், அவர்களால் தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்க முடியாது.. எல்லாருமே சங்கமாக இருக்கும்போது, தனி நபராக தன்னுடைய பணத்தை தரும்படி கேட்க முடியாது. தான் வேலை செய்ததற்கான பணத்தை கேட்டு தகராறு செய்தால், உடனே அடுத்த படத்தில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடும்.
இது எப்பேர்ப்பட்ட சுரண்டல்?
அனுராதா உட்பட பல சீனியர்கள் அந்த யூனியனில் உள்ளனர்.. அனைவருமே திரண்டு கேள்வி கேட்டாலும், தலைமையிடமிருந்து சரியான பதில் இல்லை.. தயாரிப்பாளர் சங்கத்தை கை காட்டுகிறார்.. அவங்களுக்கெல்லாம் சம்பளம் தந்தாங்களா? இல்லையா?ன்னு பார்ககுறதுதான் என் வேலையா? என்று தினேஷ் கேட்கிறார்..
அப்படியானால் அந்த தலைமை பொறுப்பில் எதுக்காக இருக்கணும்? நேரடியாக இப்படியொரு மோசடி குற்றச்சாட்டு வந்தபிறகும், அதுதான் என் வேலையா? என்று கேட்கலாமா?
"இங்கே தொட்டான், அங்கே தொட்டான்னு மீடியாவுல போய் சொல்லு" என்று பெண்களிடம் தினேஷ் பேசியிருப்பது கண்டிக்கத்தகுந்த வார்த்தை.. பெண்கள் என்றால் அவ்ளோ எளக்காரமா? உங்களுடைய சங்கத்தை சேர்ந்த பெண்களையே இப்படி சொன்னால், சினிமாவில் மற்ற துறையை சார்ந்தவர்கள் என்ன சொல்வார்கள்? சம்பளத்தில் கையாடல் செய்தால் எதுவுமே கேட்கக்கூடாதா? அடிதடி செய்வதா?
எப்படி அடிக்கலாம்?
தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எமோஷனல் ஆகவே கூடாது.. எப்படி ஒருவரை அடிக்கலாம்? ஒருவரை திட்டவே உரிமை இல்லை.. பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே. செல்வமணியின் பேச்சில் எப்போதுமே ஒரு பக்குவம் இருக்கும்.. எமோஷனல் ஆகாமல், பெரிய பெரிய விஷயங்களை பேசுவதை நாம் பார்க்கிறோம்.
ஆனால், டான்ஸ் யூனியனில், குற்றச்சாட்டுகள் ஏன் வருகிறது? இல்லாமலேயே புகார் சொல்கிறார்களா? சிசிடிவி இல்லாத இடமாக இழுத்து சென்று கௌரி சங்கரை தாக்குகிறார் என்றால், தினேஷ் ஒரு பக்குவமற்ற தலைவர் என்பதையே காட்டுகிறது.
கை நனைத்து விட்டேன்
அதேபோல பாலியல் தொல்லைகள் என்று வரும்போது, நடன இயக்குனர்கள் மீது மட்டுமல்ல, அனைத்து துறைகளிலுமே இருக்கத்தான் செய்கிறது.. ஆனால், பாலியல் புகார் என்று கொண்டுவரும்போது, அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், "அவர் வீட்டில் கை நனைத்து விட்டேன்" என்பது தலைவரின் கையாலாகத்தனம்..
துபாய் சென்று நடனமாடிய பெண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
அனுராதா மகள் அபிநயா புகார் சொல்கிறார்.. அவர் கேட்பது சரியான கேள்வியே.. விதிமுறைகளைகூட சரியாக கடைப்பிடிக்கவில்லை என்கிறார்.. தினேஷின் பாரபட்சம்தான் இதற்கு காரணம்.. விட்டுக்கொடுத்து செல்கிறார்கள் என்றால், அங்கே ஏதாவது காம்ப்ரமைஸ் நடந்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications