இன்ஸ்ட்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர், நேரில் சென்று வெளுத்து வாங்கிய நடிகை.. சோசியல் மீடியாவே அதிருது
சென்னை: சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைத்து நடைபெறும் ஆபாசமான மெசேஜ்கள், அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை அஸ்வினி மணிவண்ணன் எடுத்த நடவடிக்கை தற்போது பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் நடிகை அஸ்வினி மணிவண்ணன், தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரின் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு, அந்த நபர் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி, பல பெண்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று அந்த ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை நேரில் கண்டுபிடித்து, அவர் வேலை பார்க்கும் கடைக்கே தனது கணவருடன் சென்று அவரை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார், அந்த நபரை அடித்ததை லைவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அஸ்வினி மணிவண்ணன் விளம்பர படங்கள், குறும்படங்கள் மட்டுமின்றி சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தன் கருத்துகள், புகைப்படங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.
தற்போதைய விவகாரத்தில், அஸ்வினி எடுத்த நடவடிக்கையை பலர் பாராட்டி வருகின்றனர். "ஆபாசமாக பேசுபவர்களுக்கு இதுபோன்ற தைரியமான எதிர்வினை தேவை", "ஒரு பெண் அமைதியாக இருந்தால் தான் பலர் தைரியமாக அத்துமீறுகிறார்கள்" என ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில், ஒரு சிலர் "நீ நடிகை தானே, இதுபோன்ற மெசேஜ்களை புறக்கணித்திருக்கலாம்", "தெருவில் போட்டு அடிப்பது சரியா?" என கேள்வி எழுப்பி, அந்த நபருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தான் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் பலர், "நடிகையாக இருந்தாலும் சரி, சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த பெண்ணிடமும் ஆபாசமாக பேச யாருக்கும் உரிமை இல்லை", "இந்த மாதிரி நபர்கள் தான் சமூக ஊடகங்களில் பெண்களை மனதளவில் பாதித்து, அவர்களின் குடும்ப வாழ்க்கையையே சிதைக்கிறார்கள்", "பயந்து அமைதியாக இருந்தால் குற்றவாளிகள் தைரியம் பெறுவார்கள்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம், பெண்களின் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற நடத்தை ஆகியவை குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. சட்ட வழிகளை பின்பற்றுவது அவசியம் என்பதோடு, பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு சமூக ரீதியான கண்டனமும் அவசியம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
நடிகை அஸ்வினி மணிவண்ணன் எடுத்த இந்த நடவடிக்கை சரியா, தவறா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாகிறது. பெண்களை ஆபாசமாக பேசுவது, அவர்களை பொருளாக நினைப்பது எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
நடிகையாக இருந்தாலும் சரி, சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் சமமாக கிடைக்க வேண்டிய உரிமை. இந்த விவகாரம், சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த ஒரு எச்சரிக்கை மணி ஆக மாற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications