முதலிரவில் பெண்ணை பலி தரும் திருமண முறை! மண்ணாங்கட்டி கௌரவம்.. ரிதன்யாவுக்காக வந்த நடிகை கேப்ரியல்லா
சென்னை: ரிதன்யா விவகாரத்தின் பரபரப்பு அடங்கவில்லை. தங்கள் பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? என பெண்ணின் குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. இதுகுறித்து விசாரணையை போலீசாரும் முன்னெடுத்து வருகிறார்கள்.. ரிதன்யாவுக்கு நீதி கேட்டு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் நடிகை கேப்ரியல்லாவும் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கவின்குமாரை திருமணம் செய்தவர் 27 வயது ரிதன்யா.. திருமணமாகி 78 நாட்களில் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்... தன் தற்கொலைக்கு கணவர், மாமனார், மாமியார் காரணம் என்று தன்னுடைய அப்பாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அனைத்து பிரச்சனைக்கும் காரணமான சித்ராதேவியையும் கைது செய்ய வேண்டும் என்று ரிதன்யா குடும்பத்தினர் வலியுறுத்துகிறார்கள்.
இதுதான் நீதியா
தமிழ்நாட்டில் இவ்வளவு அவதிப்பட்டு உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு, இதுதான் நீதியா? என்று ரிதன்யாவின் சகோதரர் அழுது கொண்டே கேட்கிறார். மற்றொருபக்கம்,
ரிதன்யாவின் போட்டோவை பார்த்து, அவரது அம்மா கண்ணீர் வடிக்கிறார்.
"நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்.. உன் அப்பா என்னடி பண்ணுவாரு.. கண்ட கண்ட வீடியோவை பார்த்துட்டு, பொண்டாட்டி மேல டெஸ்ட் செய்தால் பொம்பளை தாங்குவாளா? அவ பொம்பளையா? பொம்மையா? இது எதையுமே சொல்லாம என் மகள் போயிட்டாள்" என்றெல்லாம் கண்ணீர் விட்டு சொல்கிறார்.
இந்நிலையில், திரைத்துறையினரும் உயிரிழந்த ரிதன்யாவுக்காக குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.. அந்தவகையில், வசந்தபாலனும், தன்னுடைய முகநூலில் இதுகுறித்து போஸ்ட் போட்டிருந்தார்.
வரதட்சணை கொடுமை
அதில், "ரிதன்யா வழக்கை வரதட்சணைக் கொடுமை,தற்கொலை என்ற பார்வையில் சுருக்கி விடுதல் குறுகியப் பார்வை. ரிதன்யாவிற்கு உயர் கல்வி வரை கற்று தந்த கல்விக்கூடங்களும்,கல்வி முறையும் திருமணமாகி 78 நாட்கள் கூட வாழ்க்கையை வாழ முடியாத, எதிர்கொள்ள முடியாத தரத்தில் தான் கல்வி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கூடங்கள் என்பதே உலகின் மினியேச்சர் தானே.
பூமி வெடிப்பு உண்டானது முதல் ,மனிதன் உருவானது வரையான பரிணாம வளர்ச்சி பற்றி,மனிதக்குழுகள் தோற்றம் முதல் குடும்ப அமைப்புகள் உருவானது வரை என வரலாறு,சமூகம்,மொழி,இலக்கியம்,அறிவியல் என பலவேறு துறை சம்மந்தப்பட்ட பாடங்களைக் கற்று தந்து, வாழ்வைப் பற்றிய பயத்தைப் போக்கி வானில் தன்னந்தனியாக பறக்க கற்றுத் தருவதே கல்விக்கூடங்களின் முதலாய முக்கியப் பணி.
யதார்த்தம் என்ன
ஆனால் யதார்த்தம் என்ன? தேர்வுக்கு மட்டுமே/ மதிப்பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் என்ற பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றனர்.
பெண் பற்றிய புரிதலைச் சொல்லி தராத கல்வி,தேர்வுத் தோல்வியே தாங்க மனபலம் சொல்லித் தராத கல்வி,தேர்வை விட வாழ்க்கை அழகானது என்று சொல்லித் தராத கல்வி மற்றும் சமூகம் என இதன் தொடர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
கல்வி கற்ற மேம்பட்ட சமூகத்தின் ஆணிவேரில் நோய் கண்டுள்ளது. பணம் ஈட்ட நமக்கு கல்வியறிவு உள்ளது.அதற்கு நமக்கு பயிற்சியிருக்கிறது. கோடிகள் செலவழித்து திருமணம் நடத்த நமக்கு பலம் இருக்கிறது. ஆனால் பெண்ணை/மகளைப் புரிந்து கொள்ள நமக்கு படிப்பில்லை,அனுபவமில்லை...பக்குவமில்லை.. பொறுத்துப்போ என்று தொடர்ந்து குரல் கொடுக்கிற குடும்பமைப்புகளின் பலவீனங்களை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
முதலிரவில்
முதலிரவில் பெண்ணைப் பலிக்கொடுக்கிற திருமணயமைப்பை நாம் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு திருமண வயதான ஆணும் பெண்ணும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆண்கள் பெண்ணுடலைப் புரிந்து கொண்டவர்களா? பெண்ணின் மீது மரியாதை கொண்டவர்களா? என்பதற்கு பதில் இல்லை இல்லை இல்லையென்பது பெண் மீதான தொடர் பாலியல் குற்றங்களைக் காண்கையில் உறுதியாகிறது.
பெண்ணை இன்னும் போகப்பொருளாக தின்பண்டமாக மாற்றி வைத்திருக்கிற கல்வி,கலை,திரைப்படம்,சமூகம் என அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். பொது சமூகத்தில் பெரும் விவாதம் நடந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணுதல் சாத்தியம்.
இடஒதுக்கீடு
பெண்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எல்லா தனியார், அரசு துறைகளிலும், அரசியல் கட்சிகளிலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.சட்டமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் பெண்களின் பார்வை,பெண்ணின் குரல்,பெண்ணின் துயரம் எட்டுதிக்கிலும் உரத்து ஒலிக்கும்.
இது ஒருவரையொருவர் கைகோர்த்து செய்யவேண்டிய கூட்டு நடவடிக்கை. மொத்த சமூக,கல்வி ,அரசியல் மாற்றமே இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க இயலும்.
வெறுமனே விரைவு உணவு போல விரைவு நீதியாக இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை மட்டும் தண்டித்து விட்டு கடந்து போனால் மீண்டும் மீண்டும் பெண்கள் பாலியல் சூறையாடலுக்கு உள்ளாக நேரிடும்.நாளைக்கு நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் போது மட்டும் அழுது கதறி ஒரு பயனும் விளையப்போவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கேப்ரில்லா காட்டம்
அதேபோல, சீரியல் நடிகை கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பெண் குழந்தையை பெற்ற அம்மாவாக சொல்கிறேன். ரிதன்யா மரண செய்தி காலம் மாறிக்கொண்டு வருகிறது என்று நம்பிய எல்லோருக்கும் ஒரு கொடுமையான ஏமாற்றம்.,, நிரந்தரம் இல்லாத பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு ஒரு பெண் வெறுத்து இறக்கிறார் என்றால் அதற்கு தூண்டுதலான அந்த மனிதர்களின் அழிவுக்கு இந்த விதி பொறுப்பு.
எந்த பதிவு போட்டாலும் அந்த துடித்து இறந்த பாப்பா மீண்டும் வரமாட்டார். உயிருக்கு சில மனிதர்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். நமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும்போது, 'அப்புறம் பொண்ணுக்கு என்ன செய்வீர்கள்' என்று கேட்டால்; அடுத்த நிமிடமே வாசலை கை காட்டிவிடுங்கள். கௌரவம், மண்ணாங்கட்டியையெல்லாம் கரைய வைக்க நாம் இனிமேல் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது" என்றார்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications