கனகாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா? நடிகை தேவிகாவின் சொத்துக்கள்.. ஆட்டைய போட முயலும் நபர்: பிரபலம் நச்
சென்னை: "ஆண்கள் என்றாலே பிடிக்கவில்லை, எல்லாரும் அப்பா மாதிரியே அயோக்கியமானவர்களே இருக்கிறார்கள்" என்று கனகா அசிங்கமாக திட்டுவார்.. இதனால் மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகிவிட்டார்" என்று பேட்டி ஒன்றில் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
Aagayam Cinemas யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த சபீதா ஜோசப் நடிகை கனகா பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.. அதில், "நடிகை கனகாவின் அம்மா தேவிகாவின் உண்மையான பெயர் பிரமிளா.. கிறிஸ்டியன்... முதலாளி என்ற எஸ்எஸ்ஆருடன் படத்தில் அறிமுகமானார்.. பிறகு, சிவாஜி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்..

அம்மாவின் திட்டுக்கள்
அனைவருமே நன்றாக பேச பழகுவார் தேவிகா.. இதனால், ஒருமுறை அவரது அம்மா, தேவிகாவை கண்டித்தார்.. "சிவாஜி உட்பட எல்லார் கிட்டயும் ஏன் சிரிச்சி பேசி அரட்டை அடிக்கிறே? ஷூட்டிங் முடிந்து நேராக வீட்டுக்கு வரணும்" என்று திட்டிக் கொண்டே இருந்தார். இதனால், அம்மாவின் திட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே கல்யாணம் செய்ய முடிவு செய்தார் தேவிகா.
அப்போது பீம்சிங்கின் கடைசி அசிஸ்டென்ட்டை அழைத்து, அவரையே திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.. முதலில் அவர் தேவிகாவை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. ஆனாலும், அவரை கன்வீன்ஸ் செய்து, அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டார் தேவிகா. பிறகு, கணவரை வைத்து ஒரு படமும் தயாரித்தார்.. ஆனால், அந்த படம் தோல்வியடைந்துவிட்டது.. இதனால், தம்பதிக்குள் மனஸ்தாபம், பிரச்சனை வெடித்தது..
ஒரேவீட்டில் எலியும் பூனையுமாக
ஒரே வீட்டில் எலியும், பூனையுமாக மாறிவிட்டார்கள்.. அதுமட்டுமல்லாமல், பலரது நட்பில் தேவிகா இருந்ததால், அதுவும் கணவனுக்கு பிடிக்காமல் தகராறு செய்துள்ளார்.. இதனால், குழந்தை பிறந்த பிறகு தம்பதிக்குள் அதிகமான சண்டை வந்துள்ளது.. தகராறு செய்யும்போது, அசிங்கமான வார்த்தைகளை சொல்லி, தேவிகாவை திட்டுவாராம்.. சமீபத்தில் மகளுடன் சண்டை போடும்போதுகூட, மோசமான வார்த்தைகளில்தான் திட்டினார்..
தேவிகாவுக்கு எக்கச்சக்கமாக சொத்து இருந்தது.. அதனால், கணவனுக்கும் அதிலிருந்து பிரித்து தந்துவிட்டார்.. பாதி சொத்தை அவர் எடுத்துக் கொண்டார்.. மீதமுள்ள சொத்தையும் அபகரிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்..
கனகா, சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தது, தன்னுடைய பெற்றோரின் சண்டைகளையும், அசிங்கமான பேச்சுக்களையும்தான்.. இதனால் தேவிகாவும் அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. இப்படி வளர்ந்து வந்த கனகாவுக்கு, சினிமா வாய்ப்பு வந்தது..
கல்யாணம் ஆகிடுச்சா:
கரகாட்டக்காரன் படம் வந்தபிறகு, நிறைய வாய்ப்புகள் கனகாவுக்கு வந்தது.. ஆரம்பத்தில் ராமராஜனும் சின்ன நப்பாசையில் இருந்தார்.. ஆனால், கனகாவுக்கு இருக்கும் பிரச்சனையை பார்த்து ஒதுங்கிவிட்டார்..
தேவிகா மரணத்துக்கு பிறகு, மறுபடியும் அப்பாவுடன் சொத்து பிரச்சனை கனகாவுக்கு வந்தது.. இதனால், கனகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று கொளுத்தி போடப்பட்டது. ஆனால், கனகாவுக்கு யாருடனும் திருமணம் ஆகவில்லை..
"ஆண்கள் என்றாலே பிடிக்கவில்லை, எல்லாரும் அப்பா மாதிரியே அயோக்கியமானவர்களே இருக்கிறார்கள்" என்று கனகா அசிங்கமாக திட்டுவார்.. இதனால் மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகிவிட்டார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications