Kanaka: கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் இதுதான்! நேரில் போய் பார்த்தேன் அப்போ..! நடிகர் ராமராஜன் ஓபன்
சென்னை: 80ஸ் மற்றும் 90ஸ்களில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. குறிப்பாக, கிராமிய பாத்திரங்களிலும், துடிப்பான நகரத்து பெண் பாத்திரங்களிலும் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த அவர், ஒரு கட்டத்தில் சினிமா துறையை விட்டு விலகி சென்றுவிட்டார். பல ஆண்டுகள் கழித்து, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தற்போதைய நிலை குறித்து வெளியானத் தகவல்கள், ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
நடிகை கனகா: திரை பயணம்
நடிகை கனகா, பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் தான். தாய் மூலமாகவே இவருக்கு திரையுலக அறிமுகம் கிடைத்தது. இவருடைய முதல் திரைப்படமான 'கரகாட்டக்காரன்' 1989 மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவர் நடிகர் ராமராஜனுடன் இணைந்து நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வெற்றிகளில் ஒன்றாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

பிரபலம்
'கரகாட்டக்காரன்' படத்தின் வெற்றி, இவரை ஒரே இரவில் முன்னணி நடிகையாக மாற்றியது. குறிப்பாக, நடிகர் ராமராஜனுடன் இவர் இணைந்து நடித்த படங்கள் பட்டிதொட்டி எங்கும் பெரிய வரவேற்பை பெற்றன. இவர் தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
சினிமாவை விட்டு விலகியதன் பின்னணி
புகழின் உச்சியில் இருந்த நடிகை கனகா, ஒரு கட்டத்தில் திடீரெனத் திரையுலகை விட்டு விலகிச் சென்றது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாதப் புதிராக இருந்தது. இந்த சூழலில், கனகாவுடன் 'கரகாட்டக்காரன்' படத்தில் இணைந்து நடித்த இயக்குநர் மற்றும் நடிகர் ராமராஜன், ஒரு பேட்டியில் கனகாவின் தற்போதைய நிலை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தாயின் இழப்பு
கனகாவின் வாழ்க்கையில், அவர் சந்தித்த முதல் பெரிய துயரம், தாய்யின் இழப்பு தான். கனகாவுக்கு அவரது தாயான நடிகை தேவிகா தான் எல்லாமே. "அவங்களுக்கு அவங்க அம்மாதான் உயிர்" என்று ராமராஜன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கனகாவின் அம்மா காலமானதற்கு பிறகு, கனகா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். ராமராஜன், கனகா சந்திக்கணும்னு சொன்னாங்க அதனால அவங்க சொன்ன இடத்துக்கு போய், "நான் போய் கனகாகிட்ட, கனகா எங்கன்னு கேட்டேன். அந்த அளவுக்கு ஆளே பெருத்து போய், முடியெல்லாம் வெளுத்துப் போய் ஆளே அடையாளம் தெரியாத அளவு இருந்தாங்க" என்று தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை தேவிகாவின் மரணத்திற்கு பின், அவர்மீது அதீத பாசம் வைத்திருந்த கனகா, மன அழுத்தத்திற்கு உள்ளாகி, சினிமாவிலிருந்து விலகி, தற்போது பழைய நிலையில் இல்லாமல் இருப்பதை ராமராஜன் உருக்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவில் இத்தனை உச்சத்தை கண்ட ஒரு நடிகை, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு துயரங்களை சந்தித்திருப்பது, அவருடைய ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications