எதிர்நீச்சல் ஈஸ்வரிக்கு என்னாச்சு?.. ஒரு காலில் மட்டும் ஏதோ இருக்கே? கனிகாவின் அதிர்ச்சி போஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் வரும் நடிகை கனிகாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை கனிகா திடீரென வாக்கருடன் நடக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ என பதறுகிறார்கள்.
பெரும்பாலும் பெண்கள்தான் மெகா சீரியல்களை பார்த்து அழுது கொண்டிருப்பார்கள். ஆனால் ஆண்கள் அதையெல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்கள் கிரிக்கெட், காமெடி நிகழ்ச்சி, படங்கள், பாடல்களை மட்டுமே ரசிப்பார்கள் என சொல்லப்படுவதுண்டு.
ஆனால் இன்றைய தினம் ஆண்களும் பெண்களுக்கு இணையாக சீரியல்களை பார்க்கிறார்கள். அதிலும் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை விரும்பி பார்க்கிறார்கள் என்கிறார்கள். இதற்கு நம் வீடுகளில் இருக்கும் ஆண்களே சாட்சி.

வில்லத்தனம்
என்னதான் வில்லத்தனம், பொய், பித்தலாட்டம், ரெண்டு பொண்டாட்டி கதை, கள்ளக்காதல், லாஜிக் இல்லை என விமர்சனங்கள் எழுந்தாலும் அதில் உள்ள விறுவிறுப்பு ரசிகர்களை அந்த சீரியலை பார்க்க சரியாக அது ஒளிபரப்பாகும் நேரத்தில் ரிமோட் தானாக அந்த சேனலுக்கு மாற்றிவிடுகிறது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், இந்தி சேனல் சீரியல்கள் என வந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி பார்ப்பது எதிர்நீச்சல்.

பெண் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும். ஒரு ஆண் எப்படி பெண்களை அடக்கி ஆள கூடாது என்பதற்கு உதாரணம் அந்த சீரியல். கோலங்கள் இயக்கிய திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருகிறார். அந்த கோலங்களில் மிடில் கிளாஸை சேர்ந்த வேலைக்கு செல்லும் பெண்கள் திருமணமாகிவிட்டால் அவர்கள் புகுந்த வீட்டில் படும்பாடு, பணம் காய்க்கும் மிஷினாக கருதும் மாமியார், உறவு கொள்ள மட்டுமே பயன்படுத்தும் கணவர், பொறந்த வீட்டிற்கு சல்லி பைசா கொடுக்கக் கூடாது என கருதும் மாமியாரும் கணவரும் இவர்களை எல்லாம் சமாளித்து வாழ்க்கையில் அந்த பெண் எப்படி வெற்றிக் கொள்கிறாள் என்பதை காட்டியது. அது போல் எதிர்நீச்சல் சீரியலிலும் பெண்ணடிமையை தகர்க்க 5 பெண்கள் போராடுவது போலும் அவர்களை 4 ஆண்கள் எதிர்ப்பது போன்றும் கதை நகர்கிறது.

300 எபிசோடுகள்
இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி செல்கிறது. பெண்ணடிமைத்தனத்தால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மனதிற்குள்ளேயே புழுங்கி திடீரென தன்னை கேவலப்படுத்தும் மகனின் கன்னத்தில் ஓங்கி அறையும் ஈஸ்வரி, இதனால் ஷாக்காகும் குணசேகரன்.. என காட்சிகள் அற்புதமாக நகர்கின்றன. இந்த சீரியலில் முதல் மருமகளாக ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வருகிறார் பைவ்ஸ்டார் நடிகை கனிகா.

கன்னடம்
இவர் தமிழ், கன்னடம், மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை கனிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு மாமனிதன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரீ கொடுத்துள்ளார். இந்த சீரியலில் பிஸியாக நடித்து வரும் கனிகாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: புதிய பூட்ஸை அணிந்து வாழ பழகிக் கொள்கிறேன். ஒரு வாரம் முடிந்துவிட்டது, இன்னும் 5 வாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications