ரெண்டு எழுத்து நடிகை.. நடிகருடன் பழனியில் திருமண ஏற்பாடு? ராமாவரம் தோட்ட சீக்ரெட்டை உடைத்த பிரபலம்
சென்னை: எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில், மர்மமுமில்லை, ஒன்னுமில்லை என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஜினி மீதான எம்ஜிஆருக்கு கோபம், கலைஞர் உடனான நெருக்கமான நட்பு போன்றவற்றை பற்றியும் விரிவாக காந்தராஜ் கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், ராமாவரம் தோட்டம் மிகப்பெரியது. உள்ளே ஸ்விம்மிங் ஃபுல் உள்ளது, லைப்ரரி வைத்திருக்கிறார்கள்.. உள்ளே பெரிய வீடு இருக்கிறது.. சுற்றிலும் மரங்கள் இருக்கிறது.. ஆனால், சுலபமாக உள்ளே யாரும் போக முடியாது.. நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது.. அனுமதி இல்லாமல் யாரையும் உள்ளே விட மாட்டார்கள்..

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கூடமாக இன்று இருக்கிறது. அங்கே போக வேண்டிய அவசியமும் யாருக்கும் இல்லையே. எம்ஜிஆர் தன்னுடைய தொழில்முறை தொடர்புகள் அனைத்தையும் ஆற்காடு ரோட்டில் உள்ள ஆபீசிலேயே வைத்துக் கொண்டார்.
நான் ராமாவரம் தோட்டத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். வெளியிலேயே ஹால் போல இருக்கும். பெட்ரூம் முன்னாடியே ஒரு ரூம் இருக்கும், அங்கே நான் பலமுறை உட்கார்ந்து பேசியிருக்கிறேன். ராமாவாரம் தோட்டத்தில் ஒரு மர்மமும் இல்லை. அனைவருக்கும் அன்றைய தினம் தருவதற்கு பணம் எடுத்து வைத்திருப்பார்கள். அதையும் நான் பார்த்திருக்கிறேன்,
துப்பாக்கி சூடு: துப்பாக்கி சூடு இந்த ராமாவரம் வீட்டில்தான் நடந்தது. துப்பாக்கி சூடு நடந்ததுமே, முதலில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குதான் கூட்டிட்டு போனாங்க. அங்கே முடியாது என்ற பிறகுதான், ஜி.எச்-சுக்கு எம்ஜிஆர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், எதுக்காக சுட்டுக்கிட்டாங்க என்று இன்னைக்கு வரைக்கும் தெரியல. எம்ஆர் ராதா ஒன்று சொன்னார், எம்ஜிஆர் வேறு சொன்னார்.. ஆளுக்கொரு ஸ்டேட்மென்ட்.. இதுவரையில் இதில் மர்மம் நீடிக்கிறது..
ஜெயலலிதா மரணம் இப்போது வரை மர்மமாகவே உள்ளது. கென்னடியை யார் சுட்டுக் கொன்றார்கள் என்று இன்று வரைக்கும் தெரியல. இப்படி பல அரசியல் ரகசியங்கள் காலம் காலமாக இருந்துவருகின்றன. எம்ஜிஆர், எம்ஆர் ராதா துப்பாக்கி சூட்டில் உண்மையான விஷயம் என்னன்னு பலருக்கும் தெரியும் என்றாலும் யாரும் வெளியே சொல்ல மாட்டாங்க..
ராமாபுரம் தோட்டம் : ராமாபுரம் தோட்டத்தில் ரஜினியை எம்ஜிஆர் தரப்பு தாக்கியதாக சொல்வார்கள். ஆனால், ராமாபுரம் தோட்டத்துக்கு ரஜினி போகவே இல்லை.
அந்த சம்பவம் நடந்தது கோவை குரு ஓட்டலில்தான், அதற்கு பிறகு மனரீதியான பாதிப்புக்கும் ரஜினி ஆளானார்.. ஒரு விழாவில் லதா ரஜினிகாந்த், ரஜினியிடம் பேட்டி எடுத்தபோது, "உங்களுக்கு ஒரு காதல் இருந்ததே? அது யார்? அவரை பற்றி சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு ரஜினி, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் உங்களுக்கே தெரியுமே?" என்று பதிலளித்திருந்தார்..
அதனால் காதல் இருந்தது உண்மைதான்.. ஆயிரம் ஜென்மங்கள் படத்துக்கு பிறகுதான், அந்த நடிகையுடன் காதல் வந்தது. பிறகு 2 பேரும் பழனியில் கல்யாணம் செய்தும் கொள்ளும் அளவுக்கு போயிட்டாங்க.. அந்த நடிகைக்கு எம்ஜிஆர்தான் கார்டியனாக இருந்தார்.. எம்ஜிஆர் பொறுப்பில்தான் அந்த நடிகையை அவரது குடும்பத்தினர் விட்டிருந்தனர். தன்னிடம் சொல்லாமல் இப்படியெல்லாம் அந்த பெண் நடந்து கொள்வதால்தான் எம்ஜிஆருக்கு கோபம் வந்தது.
பயந்த ரஜினி: கடைசியில் பாலச்சந்தர், மேஜர் சுந்தராஜன், மென்டல் மாதிரி நடிக்க சொன்னார்கள். ரஜினி பயந்துவிட்டார் என்பதே தெரிந்தது. பிறகு இந்த விவகாரத்தை எம்ஜிஆர் விட்டுவிட்டார்.
கலைஞரும், எம்ஜிஆரும் மிகச்சிறந்த நண்பர்கள். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, "இதுபோல செய்தால் திமுகவையே ஒழித்துவிடலாம்? என்று ஒருவர் ஏதோ பேசியிருக்கிறார். உடனே எம்ஜிஆர் டக்கென திரும்பி அவரை கோபத்துடன் முறைத்து, "என்ன சொன்னீங்க? திமுக நான் வளர்த்த கட்சி.. அதை நீ ஒழிக்க நினைப்பியா?" என்று சத்தம் போட்டார்.
கலைஞர் நட்பு: அந்த அளவுக்கு கலைஞரும், எம்ஜிஆரும் நெருங்கிய நண்பர்கள்.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் அரசியல் செய்ததில்லை. ஏதாவது ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டுமானாலும், இருவரும் விவாதித்தே முடிவு செய்வார்கள். இருவரும் வேறு வேறு மாதிரி, நாடகம் நடித்தார்களே தவிர, உண்மையிலேயே இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள்.
எம்ஜிஆர் நன்றாக சமைப்பார்.. நன்றாக சாப்பிடுவார்.. ஆனால், ஆரோக்கியமான உணவாக சாப்பிடுவார். குண்டடிப்பட்டு ஓய்வு எடுப்பதற்காக, யாருக்கும் தெரியாமல் சேலத்தில் துவாரகா ஓட்டலில்தான் ஜானகி அம்மாளுடன் 1 மாதம் வந்து தங்கியிருந்தார்..
கறந்த பால்: அந்த ஒரு மாசமும் தினமும் ராத்திரி 8 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துருவார். எங்க வீட்டில்தான் அவருக்கு ராத்திரி சாப்பாடு. அப்போது எங்கள் வீட்டில் மாடுகள் நிறைய இருந்தன.. அதனால் கறந்த பாலை, ஒரு வெள்ளி பிளாஸ்க் நிறைய வாங்கிட்டு போய், நாள் முழுவதும் வைத்து குடிப்பார் எம்ஜிஆர்.
ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர் இவர்கள் 3 பேருமே அசைவம் இல்லாமல் சாப்பிட மாட்டாங்க.. ஆனால், ஜெமினி கணேசன் அவரது வீட்டில் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டார். மிகவும் ஆச்சாரமாக இருப்பார்"என்றெல்லாம் கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications