அழகா இருந்தா தப்பா? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மோசமான செயல்.. நடிகை லாவண்யா எமோஷனல்
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமான லாவண்யா பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் துணை கேரக்டரில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் தான் பல வருடங்களாக சினிமா மற்றும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை லாவண்யா. இவர் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் அருவியின் கணவனின் மூத்த அண்ணனுக்கு மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதோடு இவர் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியின் தோழியாகவும், ஹீரோவுக்கு தங்கையாகவும் நடித்திருப்பார். படையப்பா படத்தில் நாசருக்கு மனைவியாக நடித்திருப்பார். பார்ப்பதற்கு பவ்யமாக இருக்கும் லாவண்யா வெளிர் நிறத்தோடு கதாநாயகியை போலத்தான் இருப்பார். இவருக்கு 43 வயதில் கடந்த வருடத்தில் தான் திருமணம் முடிவடைந்தது.
சமீபத்தில் தான் இவருடைய முதல் திருமண நாளை இவரும் இவருடைய கணவரும் கொண்டாடி இருந்தனர். தனக்கு 43 வயதில் திருமணம் நடந்தது குறித்து எல்லோரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தன்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் வருமானத்தின் காரணமாகத்தான் 43 வயதில் திருமணம் செய்து கொண்டதாக பேட்டியில் லாவண்யா தெரிவித்து இருந்தார்.
என்னுடைய நண்பர் மூலமாக அறிமுகமான நபரை தான் லாவண்யா காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து இருந்தார். ஆனால் பார்ப்பதற்கு லாவண்யா 43 வயது உடையவர் போல இருக்க மாட்டார். இப்போதும் இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கிற மாதிரி தான் இருக்கிறார். இந்த நிலையில் லாவண்யா சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன்.
ஆனால் படையப்பா திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு சில திரைப்படங்களில் நான் நடிக்கும் போது கதாநாயகிகளை விட அழகாக இருக்கிறேன் என்று சொல்லி முகத்தில் மேக்கப் போட்டு கதாநாயகியை விட அழகில் குறைவாக காட்டி இருக்கிறார்கள். நானும் அதையெல்லாம் கண்டு கொள்கிறது கிடையாது.
நடிப்பு என்று வந்துவிட்டால் நம்முடைய திறமையை தான் கட்ட வேண்டுமே தவிர அழகு அல்ல என்று நான் என்னுடைய மனதை திடப்படுத்தி வைத்திருக்கிறேன். ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படங்கள் வெளிவராமலே போய்விட்டது என்று லாவண்யா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications