ஹோட்டல் பில் நடிகருக்கு ரூ.50 லட்சமா? இது எப்போ.. ஹீரோவுக்கு 2வது திருமணம்? பச்சை கொடி காட்டியாச்சு
சென்னை: தனுஷ் - மிருணாள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் பரபரத்தபடியே உள்ளது. கடந்த வாரம் இதுகுறித்து மிருணாள் தாகூர் விளக்கமளித்திருந்தார்.. அதில், "தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரையும் இணைத்து சமீபமாக பரவி வரும் வதந்திகள் குறித்து எனக்கு தெரியும். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. சன் ஆஃப் சர்தார் 2 நிகழ்வில் தனுஷும் கலந்துகொண்டார். அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், தனுஷ் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "ஐஸ்வர்யா ரஜினியை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.. இந்த காதலில் ரஜினிகாந்த்துக்கு அந்த அளவுக்கு உடன்பாடு கிடையாது..

எனினும் மகள் விரும்பிய ஒரே நோக்கத்திற்காக, இந்த திருமணத்துக்கு பச்சை கொடி காட்டினார்.. இறுதியில் இரு குடும்பத்தினரின் சம்மதத்தின்பேரில்தான் திருமணம் நடந்தது.. தம்பதிகளின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே சென்றது.
ஓட்டல் பில் ரூ.50 லட்சம்?
ஐஸ்வர்யாவை திருமணம் செய்தபிறகுதான், தனுஷின் ரேஞ்சே ஏறியது.. கேரியரே உயர்ந்தது.. பாலிவுட் வரை சென்றார்.. குறுகிய காலத்தில் இப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.. ரஜினி என்ற நபரின் புகழ், தனுஷை பாலிவுட்டில் எளிதாக நுழைய வைத்தது.. தனுஷின் திறமை, உழைப்பும் இதில் இணைந்தது மற்றொரு காரணம்..
பிறகு சின்ன சின்ன சண்டைகள் தம்பதி இருவருக்குள்ளும் வெடித்தது.. இரு குடும்பத்திலும் பெரியவர்கள், தனுஷ்-ஐஸ்வர்யாவை அழைத்து சமாதானம் செய்து செய்து பேசினார்கள்.. ஆனால் விவகாரத்து வரை விவகாரம் சென்றுவிட்டது..
விவாகரத்துக்கு பிறகு தனுஷ் சுதந்திர பறவையானார்.. வெளிநாடுகளுக்கு தனியாகவே சென்று சுற்றி வருகிறார். லண்டனில் ஒரு வாரம் தங்கினால் அவரது ஓட்டல் பில்லே குறைந்தது ரூ.50 லட்சம் வருகிறதாம்.
திசைமாறிய வாழ்வு?
அன்று தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தை முன்னின்று பலமுயற்சிகளை எடுத்தது தனுஷின் சகோதரிகள்தான்.. இப்போது தனுஷின் வாழ்க்கை திசைமாறி சென்றுவிடக் கூடாது என்பதற்காக டைவர்ஸ் ஆனாலும், மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைத்து வைப்பது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. அது தோல்வியில் முடியவும், தனுஷூக்கு மறுமணம் செய்து வைக்கலாமா? என்றும் அக்கறையாக யோசித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை மிருணாள் தாக்கூருடன் தனுஷ் இணக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில பட நிகழ்வுகளில் இருவரும் சந்தித்து கொண்டு நட்பாகினர்.. பிறகு மிருணாளின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் சர்ப்ரைஸாக வந்திருந்தார் தனுஷ்.
இதுவரை மறுக்கவில்லை
இதையடுத்து, சர்தார் 2 பட நிகழ்ச்சியிலும் தனுஷ் கலந்துகொண்டது பலரது கவனத்தை திருப்பியிருந்தது.. இவைகள் எல்லாம் பாலிவுட்டை ஃபோகஸ் செய்தன.. தனுஷ்-மிருணாள் இருவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போட்டோக்கள், வீடியோக்களும் இணையத்திலும் வைரலாகின. ஆனால், தங்களுக்குள் காதல் இல்லை என்று ஸ்டிராங்காக தனுஷ் மறுக்கவில்லை.
மிருணாள் பிறந்தநாளுக்கு வேறு எந்த நடிகர்களும் செல்லாத நிலையில் தனுஷ் மட்டுமே சென்றிருக்கிறார்.. இத்தனைக்கும் இருவரும் சேர்ந்து எந்த படங்களிலும் நடிக்கவுமில்லை. இதற்கு நடுவில் மிருணாள் இன்ஸ்டாவை தனுஷின் சகோதரிகளும், சகோதரிகளின் இன்ஸ்டாவை மிருணாளினியும் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
குடும்பத்தினர் பச்சை கொடி?
தனுஷை திருமணம் செய்து கொள்வதற்கு மிருணாள் குடும்பத்தில் சம்மதமே சொல்லிவிட்டார்களாம். அதாவது திருமணம் வரை இரு குடும்பத்தில் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.. ஆனால், தனுஷின் செயல்பாடுகள் சரியில்லை என்று ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறாராம்.
எனினும், தனுஷின் இந்த தனிப்பட்ட விஷயங்களை யாரும் விமர்சிக்க முடியாது.. எனவே இந்த திருமணம் நடந்தாலும் நடக்கலாம், இதற்கான ஏற்பாடுகளை தனுஷ் குடும்பத்தில் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதில் தனுஷ் என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications