எல்லாமே பொய்.. கணவருடன் போட்டோ.. நடிகை பிரியங்கா நல்கரியா இது? இதைக் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை பிரியங்கா நல்கிரி கடந்த வருடத்தில் திருமணம் செய்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்துவிட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் அவர் அவருடைய கணவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா நல்கரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெலிட் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே தன்னுடைய கணவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றிலும் டெலிட் செய்திருந்தார். இதனால் ரசிகர்கள் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

அதுபோல பிரியங்கா தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருந்தபோது ரசிகர் ஒருவர் நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்களா? உங்கள் கணவரை விட்டு பிரிந்து விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு கூட, "ஆமாம் ஐ அம் சிங்கிள்" என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் இப்போது மீண்டும் அவருடைய கணவரோடு சேர்ந்து இருப்பது குறித்து ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா நல்கரிக்கு முதல் சீரியலிலே அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அதற்குப் பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த நேரத்தில் பிரியங்காவிற்கு திருமணம் முடிந்தது. ராகுல் என்பவரை பிரியங்கா சில வருடங்களாகவே காதலித்து வந்து நிலையில் அவரை திருமணம் செய்திருந்தார்.
ஏற்கனவே ராகுலோடு பிரியங்காவிற்க்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்த பிறகு ராகுலும் பிரியங்காவும் பிரிந்து இருந்ததாக பிரியங்கா பேட்டிகளில் பேசியிருந்தார். ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் சேர்ந்திருந்தனர். இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பிறகு சீதாராமன் சீரியலில் பிரியங்கா நடித்து வந்தார்.
ஆனால் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து ஜீ தமிழில் நள தமயந்தி என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இது குறித்து அப்போது அவர் பேசுகையில் என்னுடைய கணவர் தான் எனக்கு மீண்டும் நடிக்க சம்மதம் சொன்னார். நான் நடிப்பை விட்டு விலகி வீட்டில் இருந்த போது நான் பட்ட கஷ்டத்தை என்னுடைய கணவர் பார்த்து தான் உன்னால் நடிக்காமல் இருக்க முடியாது நீ போய் நடி என்று சொல்லி அனுப்பி வைத்தார் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் நள தமயந்தி சீரியலில் பிரியங்கா நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் டெலிட் செய்திருந்தார். இதனால் இவர்கள் மீண்டும் பிரிந்து விட்டார்களா? என்ற கேள்விகள் அதிகமாக எழும்பி வந்தது. இந்த நிலையில் பிரியங்கா தன்னுடைய கணவரோடு சேர்ந்து தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications