80"S ஒரு பொற்காலம்.. சுஜாதா படத்தில் சரிதா கண்ணை காட்டியதுமே, சுதாரிச்சிட்டேன்: நடிகை ராஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பதாக இருந்தால், எங்களை எல்லாம் கேட்காமலேயே எங்களுக்கான கேரக்டர்களை ஒதுக்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு எங்கள் மீதெல்லாம் மகள், சகோதரி என்று மதிப்பு, பாசம் வைத்திருந்தார்கள். ஆயிரம் சொன்னாலும், 80"கள் காலகட்டம் ஒரு பொற்காலம்தான்" என்று பெருமிதமாக சொல்கிறார் பிரபல நடிகை ராஜலட்சுமி.

chai with chitra யூடியூப் சேனலுக்கு நடிகை ராஜலட்சுமி தந்துள்ள பேட்டியில், "என்னை எல்லாரும் இப்போகூட சங்கராபரணம் ராஜலட்சுமின்னுதான் கூப்பிடறாங்க.. முதல் தமிழ்ப்பட வாய்ப்பு, சுஜாதா என்ற படத்தின் மூலமாகவே அமைந்தது.. இந்த படத்தை பார்த்துட்டு, தயாரிப்பாளர் பாலாஜி சார், தன்னுடைய ஆபீசுக்கு என்னை கூப்பிட்டார். உடனே நானும், என் அப்பா, அம்மா எல்லாரும், கிளம்பி போய் பார்த்தோம்.

television saritha rajalakshmi

சுஜாதா படம்: சுஜாதா என்ற படம் எடுக்க போவதாகவும், அது ஒரு மலையாளபட ரீமேக் என்றும் சொல்லி கதையை சொன்னார்.. ஆனால், எனக்கு தமிழ் தெரியாது என்றேன்.. அதுக்கு பாலாஜி, இதில் தமிழ் வசனங்கள் குறைவுதான்.. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தெலுங்குக்காரர்தான் அவர் உங்களுக்கு உதவுவார் என்று தைரியம் சொன்னார்..

ஆனால், அந்த கோ-டைரக்டர், தப்பு தப்பா தமிழ் வார்த்தைகளை எழுதி வைத்து, என்னை பேச சொன்னார்.. உடனே அந்த தமிழ் வார்த்தைகளை கேட்டுவிட்டு சரிதா, உடனே என்னை பார்த்து, அதை படிக்காதே என்று கண்ணை காட்டுவார்.. தமிழ் எனக்கு தெரியாது என்பதால் இப்படியெல்லாம் என்னை அந்த படத்தில் கிண்டல் செய்தார்கள். ஆனால், சரிதா எனக்கு அந்த படத்தில் நிறைய உதவினார்.. அவரது உதவியால்தான் சுஜாதா படத்தை என்னால் செய்ய முடிந்தது.. பாலாஜி சாரே நல்லா தெலுங்கு பேசுவார். அதனால் அந்த படம் இன்னும் எளிதாக என்னால் நடிக்க முடிந்தது

சந்திரமுகி: 1983-ல் மூன்று முடிச்சு படத்தில் நடித்தேன்.. தமிழ் தெரியாது என்பதால், நான் ரஜினி சாருக்கு, குட்மார்னிங் மட்டும் சொல்லிவிட்டு,, ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்வேன். ஆனால், சந்திரமுகி படத்தில் நடிக்கும்போது நல்லா பேசினார்..

விஜயகாந்த்துடன் புதிய தீர்ப்பு என்ற படத்தில் முதல்முதலாக இணைந்து நடித்தேன். என் திருமணத்துக்கு முன்பு கடைசியாக நான் படித்த படம் புதுப்பாடகன்.. இந்த படத்தில் சந்திரசேகர், ராதாரவி, விஜயகாந்த் இவர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்தாலே ஒரே அரட்டைதான்.. ஒருசீன் கூட உடனே எடுக்க முடியாது.. இவர்களில் யாராவது ஒருவர் கிண்டலாக பேசிவிடுவதால், ஒரு டேக்கை எடுக்கவே, தாணு சார் ரொம்ப கஷ்டப்பட்டார். அந்த அளவுக்கு ஜாலியாக செட் இருக்கும்.

பாசம், உரிமை: அப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், எங்களை எல்லாம் எங்க வீட்டு பொண்ணு, நம்ம வீட்டுக்கு வாம்மா என்றெல்லாம் பாசத்துடன், உரிமையுடன் பேசினார்கள்..

ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பதாக இருந்தால், எங்களை எல்லாம் கேட்காமலேயே எங்களுக்கான கேரக்டர்களை ஒதுக்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு எங்கள் மீதெல்லாம் மகள், சகோதரி என்று மதிப்பு, பாசம் வைத்திருந்தார்கள். இதனால் நாங்களும் பிஸியாகவே இருந்தோம். ஆயிரம் சொன்னாலும், 80"கள் காலகட்டம் ஒரு பொற்காலம்.. இப்போது எல்லாமே மாறிடுச்சு" என்றெல்லாம் தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+