இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல?புருஷன் கேட்ட வார்த்தை..கோபத்தை காட்டிய விதம்.. மனம் திறந்த நடிகை ரேவதி
சென்னை: நடிகை ரேவதி தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சுஹாசினி இடம் பேசி இருக்கிறார்.
தான் புதுமைப்பெண்கள் திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கூறியிருக்கிறார்.
புதுமை பெண்கள் திரைப்படத்தில் கணவர் சந்தேகப்பட்டு கேட்ட கேள்விக்கு ரேவதி அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது கிடைத்த பாராட்டு பற்றி மனம் திறந்து இருக்கிறார்.

80ஸ்,90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகர்களில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் நடிகை ரேவதி நடித்த பல திரைப்படங்கள் இப்பவரைக்கும் பலருடைய ஃபேவரைட் வரிசையில் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து தன்னுடைய மனம் கவர்ந்த திரைப்பட வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள் குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
ரேவதி பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஆறு விருதுகள் உட்பட பல பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பூத காலம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநிலம் விருதையும் பெற்றிருக்கிறார். ஆனாலும் எந்த ஈகோவும் பாராட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் என்று அவருடைய நண்பர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ஆனால் ரேவதி சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த கதையை கேட்டால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். இவர் ஸ்கூல் படிக்கும்போது பேஷன் ஷோவில் கலந்து இருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் குரூப் போட்டோ எடுத்து இருக்கிறார்கள். அந்த போட்டோ ஒரு செய்தி புத்தகத்தில் அட்டை படமாக இடம் பிடித்திருக்கிறது. அது இயக்குனர் பாரதிராஜாவின் கண்ணில் பட்டு இருக்கிறது.
இந்த போட்டோவை பார்த்து தான் பாரதிராஜா ரேவதியை மண்வாசனை திரைப்படத்திற்காக செலக்ட் பண்ணுனாராம். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத வகையில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கேரக்டருக்கும் இவருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது. அதில் வலித்து தலைவாரி, பாவாடை தாவணியில் இருக்கும் ரேவதி நிஜ வாழ்க்கையில் ஒரு முறை கூட இதை முயற்சி செய்ததே கிடையாது என்று கூறியிருக்கிறார்.
ரேவதி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்திருந்தாலும் இவருடைய நிஜ பெயர் ஆஷா கெலுன்னி ராயர் தானாம். ஆனால் திரை வாழ்க்கைக்காக இவர் ரேவதி என்று பெயரை மாற்றி இருக்கிறார். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பராக ஹிட் அடித்திருக்கிறது. அந்த வகையில் இவர் புதுமை பெண்கள் திரைப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாது என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.
புதுமைப் பெண்கள் திரைப்படம் 1984 ஆம் ஆண்டு தான் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை பாரதிராஜா தான் இயக்கியிருக்கிறார். இதில் ரேவதி கதாநாயகியாகவும் அவருக்கு ஜோடியாக பாண்டியன் நடித்திருக்கிறார். பாண்டியன் இந்த திரைப்படத்தில் ராமர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ரேவதி இந்த திரைப்படத்தில் சீதா கேரக்டரில் நடிக்க இருப்பார். இந்த திரைப்படத்தில் ரேவதி நடிக்கும் போது அவருடைய வயது 17 தான். இந்த திரைப்பட கதையில் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் சீதா( ரேவதி) தன்னுடைய தந்தைக்கு பிடித்த ராமரை காதலித்து திருமணம் செய்து கொள்வார்.
திருமணத்திற்கு பிறகு வரதட்சனை கொடுமையால் ராமர் குடும்பத்திடம் பல கஷ்டங்களை அனுபவிக்கும் சீதா அத்தனையும் தன்னுடைய கணவருக்காக ஏற்றுக் கொள்வார். பிறகு ராமர் மீது ஒரு கொலை குற்றம் சுமத்தப்பட்டு அவர் ஜெயிலில் இருக்கும் போது பல்வேறு கஷ்டங்களை தாண்டி ராமரை ஜெயிலிலிருந்து விடுதலை செய்ய வைப்பார். ஆனாலும் வெளியே வந்த ராமர் தன்னுடைய அம்மாவின் பேச்சைக் கேட்டு சீதா வயிற்றில் வளரும் குழந்தைக்கு யாரு அப்பா என்று கேட்டிருப்பார்.

கோபத்தில் முதலில் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தவிக்கும் சீதா பிறகு பாரதியின் மேற்கோள்களை நினைத்து மனம் மாறுவார். அந்த காட்சிகளில் நடித்தது இப்ப வரைக்கும் என்னால் மறக்க முடியாது என்று சீதா கூறி இருக்கிறார். அந்த காட்சிகளில் தன்னுடைய புருஷன் கேட்ட கேள்வியால் கொதித்து எழுந்து போன மனைவி அறைக்குள் சென்று இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து மெத்தை எல்லாம் கிழித்து தன்னுடைய கோபம், ஆற்றாமை, ஏமாற்றம் அத்தனை வெளிப்பாடுகளையும் காட்டுவார்.
நான் 17 வயதில் அப்போது அப்படி நடித்திருந்தேன். பிறகு எனக்கு அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பலர் பலர் பாராட்டி அனுப்பிய கடிதம் பார்த்து நான் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் ஒரு கடிதத்தில் இதே போல என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது நானும் இப்படித்தான் என்னுடைய மோசமான கணவரை தூக்கி எறிந்தேன் என்று எழுதி இருந்தார். அதற்கு பிறகு தான் நான் புரிந்து கொண்டேன். நாம நடிக்கிறது அது சமுதாயத்துக்கு கருத்துள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று என அந்த பேட்டியில் ரேவதி கூறி இருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications