இரண்டு முறை அபார்ஷன்..நண்பர்கள் கேட்ட வார்த்தை..நடிகை சங்கவி வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?
சென்னை: விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை சங்கவி பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வந்த சங்கவி திருமணத்திற்கு பிறகு குழந்தை இல்லாமல் தான் பட்ட வேதனையை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதை பார்க்கலாம்.

கர்நாடகாவை சேர்ந்த சங்கவி முதல் முதலாக தமிழில் அறிமுகமானது அமராவதி திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் கதாநாயகியாக நடித்திருப்பார். முதல் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஜயுடன் ரசிகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோவை மாப்பிள்ளை என்ன அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதோடு கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவா என சில சீரியல்களிலும் நடித்திருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததாலேயே இவருக்கு திருமணம் செய்வதற்கு லேட்டாகி விட்டதாம்.

சங்கவி 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் ஐடி நிபுணரான வெங்கடேஷை திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு குழந்தைக்காக ரொம்பவே ஆசையாக சங்கவி காத்திருந்தாராம். ஆனால் முதல் முறை சங்கவி கர்ப்பம் ஆனதும் ஏழாவது வாரத்தில் இதயத்துடிப்பு நல்லா இருக்கு என்று சொன்ன மருத்துவர்கள் எட்டாவது வாரத்தில் இதயத்துடிப்பு இல்லை என்று அபார்ஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிட்டாங்களாம்.
அப்போவே சங்கவி ரொம்பவே உடைஞ்சு போயிட்டாராம். ரொம்ப ஆசையா எதிர்பார்த்தது இப்படி ஆயிட்டேன்னு கஷ்டப்பட்டு இருந்து இருக்காரு. அதோடு இதற்கு காரணம் நாம்மலாக தான் இருக்குமோ? நம்ம செஞ்ச செயலால்தான் இருக்குமோ? அப்படி செஞ்சிருக்க கூடாது, இப்படி செஞ்சிருக்க கூடாது என்று பெரிய குழப்பத்தில் இருந்து இருக்கார். அந்த நேரத்தில் கூட இருப்பவர்கள் கூட நீ அதை செஞ்சது தப்பு இது செஞ்சது தப்பு என்று இவரைத்தான் குறை கூறினார்கள்.
முதல் குழந்தை கருவில் இருந்த நேரத்தில் சங்கவி இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கலந்து கொண்டாராம் .அதனால் தான் இப்படி ஆகிவிட்டதோ, இந்த நேரத்தில் நாம வேலையை தவிர்த்து இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாராம். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்.

ஆனால் அப்போதும் ஏழு வாரம் வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த நிலையில் எட்டாவது மாதம் முதல் தடவை போலவே பிரச்சனை வந்திருக்கிறது. ஆனால் இரண்டாவது முறை கருவுற்று இருந்த நிலையில் சங்கவி வீட்டில் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க கூட இல்லையாம். ஒரு வேலை செய்யாமல் அப்படியே இருந்திருக்கிறார். ஆனால் அதுவும் தனக்கு தங்கவில்லை என்று ரொம்பவே மனது உடைந்து போயிருந்தாராம். அப்போது அவருடைய கணவர் தான் சங்கவிக்கு அதிகமான ஆறுதல் கொடுத்து கொண்டிருந்தாராம்.
அதைத்தொடர்ந்து தான் சங்கவிக்கு 2020ல் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. தற்போது அந்த குழந்தையை அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சங்கவி instagramல் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தனக்கு ஆரம்பத்தில் நடந்த கசப்பான நினைவுகளும் அந்த நேரத்தில் கை கொடுக்காத உறவுகளும் பலருடைய வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று தன்னுடைய அனுபவத்தை உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications