Actress Sanjana Singh: இப்ப வேண்டாம்.. அப்புறமா பாத்துக்கலாம்.. சஞ்சனா சிங் பலே பலே!
சென்னை: நடிகை சஞ்சனா சிங் சென்னையில் பிறந்தாலும் ஆக்ராவில் வளர்ந்தவர். அப்பா ராணுவ அதிகாரி என்பதால், வடநாட்டில்தான் படிப்பு. பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் சென்னைக்கு வந்துள்ளார்.
விளம்பரங்கள், ரேணிகுண்டா படம் என்று நடிக்க ஆரம்பித்தவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆருத்ரா படத்தில் நடிகர் பாக்கியராஜோடு நடித்ததோடு சரி.
வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சனா சிங், பிரபல ஆடை வடிவமைப்பாளரை வைத்து ஆடைகள் வடிவமைத்து அணிந்துக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர். இவரிடம் பேசியபோது...

ஆக்ரா வாழ்க்கை
அம்மா சென்னைதான் தமிழ் பொண்ணு. அப்பா சிங்.அவர் டெல்லியில் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்ததால், ஆக்ராவில்தான் வசித்தோம். நடிக்கும் ஆசை வந்து சென்னை வந்தேன்,விளம்பர படங்கள், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைச்சது. இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லை.

ரியாலிட்டி ஷோ
எனக்கு சின்னத் திரையில் நடிப்பதை விட ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கறது ரொம்ப இஷ்டம். சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என்று பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். டான்ஸ் ஆடுவது, செல்ஃபி எடுத்து அப்லோட் செய்துகொண்டே இருப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

கிராமத்தில் ஓர் நாள்
சன் டிவியின் கிராமத்தில் ஒரு நாள் ரியாலிட்டி ஷோ நடந்துச்சு.அதில் எல்லாரும் ஒரு வழிமுறையை ஃபாலோ செய்தால், நான் வேறு மாதிரி அந்த டாஸ்கை செய்து ஜெயிச்சுருவேன்.அதே சமயம் எனக்கு ஸ்ட்ரென்த்,போராட்ட குணம் அதிகம்.

ஆசை இல்லையா?
சீரியலில் எப்போது வேணும்னாலும் நடிக்கலாம். டஃப் கொடுக்கும் ரியாலிட்டி ஷோ இந்த வயதில் கலந்துகொண்டால்தான் உண்டு. வயசானவுடன் சீரியலில் நடிப்பேன்.அல்லது கல்யாணம் செய்துகிட்டு செட்டிலாகிடுவேன்.இந்த சமுதாயத்துக்கு நல்ல குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டியது ஒரு தாயின் கடமை என்று நினைக்கிறேன். ஓ நீங்க அப்படி வர்றீங்களா? அந்த காலம் மாறிப்போச்சு தெரியாதா உங்களுக்கு?
எனக்கு குழந்தை வளர்ப்பு ரொம்ப பிடிக்கும். அதை நான் நல்லா செய்யணும்னு சொல்கிறார்.

ஆசை என்ன?
உங்கள் அம்மாவின் ஆசை என்ன? அதை நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறீர்களா என்று கேட்டால், அம்மாவுக்கு நான் கல்யாணம் செய்துக்கணும். அதுதான் ஆசை, கனவு எல்லாமே. நிச்சயம் அவங்களை ஆக்ராவிலிருந்து அழைச்சுட்டு வந்து என் கூட வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்குவேன் என்று கூறுகிறார் சஞ்சனா சிங்.
இவரை மனீஷா கொய்ராலா சாயலில் இருப்பதாக பலரும் சொல்கிறார்களாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications