ஷபானாவின் தம்பி இவர்தானா? வெளியிட்ட புகைப்படம்.. ஆனால் கடைசியில் இப்படி சொல்லிவிட்டாரே..!?
சென்னை: நடிகை ஷபானா முதல்முறையாக தன்னுடைய சகோதரனோடு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
ஷபானாவின் திருமணத்திற்கு அவருடைய வீட்டில் சம்மதிக்காததால் யாருமே அவருடன் பேசவில்லை என்ற தகவல்கள் ஏற்கனவே பரவி வந்தது.
இந்த நிலையில் தன்னுடைய சகோதரன் உடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட வேண்டாம் என்று கூறியும் தான் பதிவிட்டு விட்டேன் என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார்.

குடும்ப புகைப்படம்
சின்னத்திரை நடிகையான ஷபானா முதல்முறையாக தன்னுடைய சகோதரனின் தோளில் சாய்ந்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகை ஷபானா சின்னத்திரை நடிகரான ஆரியனை காதலித்து திருமணம் செய்ததால் இருவரும் வெவ்வேறு மதத்தினர் என்ற நிலையில் இவருடைய திருமணத்திற்கு ஷபானாவின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது முதல் முறையாக தன்னுடைய சகோதரனோடு புகைப்படத்தை ஷபானா வெளியிட்டு இருக்கும் நிலையில் அதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மாடலிங் மூலம் அறிமுகம்
இவர் காலேஜ் படிக்கும்போதே மாடலாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். தன்னுடைய ஆசைக்காக மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தாலும் அதன் மூலம் இவருக்கு மலையாள சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவர் முதன்முதலில் மலையாள சீரியலான 'விஜயதசமி 'எனனும் சீரியலில் 2016இல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் .இந்த சீரியலில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வந்தவருக்கு ஒரு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.

சீரியல் வாய்ப்பு
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் 2017 இல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது . தான் எதிர்பார்த்த வரவேற்பு சீரியலிலே கிடைத்ததால் இவர் சினிமாக்களில் நடிக்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார் .செம்பருத்தி சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் சீரியலாக இருந்து வந்தது. செம்பருத்தி சீரியலுக்கு பிறகு சில மாதங்கள் கழித்து தற்போது சன் டிவியில் Mr. மனைவி என்கிற சீரியலில் மீண்டும் ஷபானா நடித்துக் கொண்டிருக்கிறார்.

வாலு பொண்ணு
செம்பருத்தி சீரியலின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் .இவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸனுக்கு பல ரசிகர்கள் அடிமையாக மாறி விட்டனர். ஆனால் கேமரா முன்பு மட்டும்தான் இவர் க்யூட்டாக நடிப்பாராம். மத்த நேரங்களில் அவருடைய பிரண்ட்ஸ் களான பூவே பூச்சூடவா ரேஷ்மா யாரடி நீ மோகினி ரக்ஷித் நட்சத்திரா சைத்ரா ரெட்டி ஸ்ரீநிதி இவர்களுடன் இருக்கும்போது செம சேட்டை செய்யும் வாலு இவர்தானாம் .இவர்களின் குரூப்பில் அதிகமான சேட்டை செய்து கொண்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல இருப்பாராம் .இவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications