விஜய் அப்படி பேசுவாருன்னு எதிர்பார்க்கல.. அவரை என்னால “சார்”னு சொல்ல முடியாது.. ஷகிலா ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மலையாளம் போன்ற பலமொழிகளில் நடித்து பிரபலம் அடைந்த ஷகிலாவிற்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுவாக சுவற்றில் ஷகிலாவின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தால் கூட அதை நின்று மணி கணக்கில் பார்த்த ரசிகர்கள் ஏராளம். இந்த நிலையில் இதுவரைக்கும் ஷகிலா வாங்கி வைத்திருந்த பெயரை குக் வித் கோமாளி மாற்றி அமைத்து இருந்தது

இந்த நிலையில் ஷகிலா பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்தும் அவரோடு அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பேசி இருக்கிறார். அதில் விஜய் பல பேர் முன்னாடி என்னை பெயர் சொல்லி அழைத்ததை என்னால் மறக்கவே முடியாது என்று ஷகிலா கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Actress Shakila spoke about actor Vijay Azhaya Tamil Magan film experience

90ஸ்களில் மலையாள திரைப்படத்தில் கொடி கட்டி பறந்த ஷகீலா நடித்த படங்கள் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களோடு கூட சகிலாவின் படங்கள் மோதி இருக்கிறது ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஷகிலாவிற்கு மலையாளம் திரையுலகம் தடை விதித்திருந்தது.

அதனால் மலையாளத்தை விட்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருந்தார். அதற்கு பிறகு கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா ஒரு சில தமிழ் படங்களில் நகைச்சுவையான கேரக்டரில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் ஷகிலாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஷகிலா தன்னுடைய சமையல் திறமையால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இறுதி கட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்று இருந்தார். அதுவரைக்கும் ஷகிலா வாங்கி வைத்திருந்த பெயரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மொத்தமாக மாற்றி இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு youtube சேனலில் பல பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து ஷகிலா பேசியிருக்கிறார். அதில் நான் விஜய்யோடு ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருக்கிறேன். அதுபோல என்னுடைய தங்கச்சியும் விஜய்யோடு டான்ஸ் ஆடி இருக்கிறார். அப்போ எங்களுக்குள் பழக்கம் இருந்தது. ஆனால் பிறகு எங்களுக்குள் ஒரு கேப் விழுந்திருந்தது. அந்த நேரத்தில் தான் அழகிய தமிழ் மகன் திரைப்பட வாய்ப்பு எனக்கு வந்தது.

அந்த வாய்ப்பு வரும்போது நான் எனக்கு விஜய்யோடு காட்சிகள் வேண்டாம் என்று நான் சொல்லியிருந்தேன். அவர்களும் உங்களுக்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் வேறு ஒரு காமெடியான காட்சியில் தான் நடிக்க போகிறீர்கள் என்று சொல்லி இருந்தார்கள் நானும் நம்பி சூட்டிங் போயிருந்தேன். அப்போ முதல் நாளில் எனக்கும் விஜய்க்கும்தான் காட்சிகள் இருந்திருக்கிறது.

அதனால் நான் விஜய்யிடம் எப்படி பேசுவது அவர் நம்மை ஞாபகம் வைத்திருப்பாரா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது விஜய் அங்கு வந்தார், ஷூட்டிங் ஸ்பாட்டில் பல பேர் இருக்கிறார்கள் ஆனால் விஜய் வாசலில் வரும்போது "ஹாய் ஷகி" என்று சொல்லிக் கொண்டே வந்தார். நான் அதை பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன். விஜய் இவ்வளவு பழகுவாரா என்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது. இத்தனை வருடம் கழித்து நம்மை மறக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

மொத்த யூனிட்டும் எங்கள் இருவரையும் தான் பார்த்தது பொதுவாக விஜய் ரொம்ப பேச மாட்டார் என்று எல்லாரும் சொல்லுவாங்க. ஆனால் விஜய் என்கிட்ட எல்லாம் நல்லாவே பேசுவார். அதுபோல இப்போது அவர் திறமையால் முன்னணி இடத்தில் வந்திருக்கிறார். அரசியல் கட்சியும் தொடங்கி இருக்கிறார். ஆனால் என்னால் அவரை சார் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அப்படியே பழகிவிட்டோம், அதுதான் என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+