நான் ரெடியாதான் இருக்கேன்.. பிக் பாஸ்.. பானுப்பிரியா தங்கச்சி அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை பானுப்பிரியாவின் தங்கச்சி சாந்திப் பிரியாவை ஞாபகம் இருக்கா.. அவரேதாங்க.. தமிழ்ப் படங்களில் கொஞ்சம் நடிச்சிருந்தாரே.. அவர்தான்.. அவர் இப்போ டிவிக்கு வரத் தயாராகி விட்டாராம். அதாவது பிக் பாஸ் ஷோவில் பங்கேற்க ரெடியாயிட்டாராம்.

வேறு யாருமில்லங்க.. நம்ம நிஷாந்தியைப் பத்திதான் பேசறோம். நிஷாந்திதான் இப்போ சாந்திப் பிரியாவா வலம் வர்றாங்க. அதாவது சாந்தி பிரியாதான் அவருடைய ஒரிஜினல் பெயர். சினிமாவுக்காக வைத்துக் கொண்ட பெயர்தான் நிஷாந்தி.

தமிழில் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். உதாரணத்துக்கு சொல்றதுன்னா டவுசர் என்றும் பசுநேசன் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜனுடன் இணைந்து நடித்த படம் எங்க ஊரு பாட்டுக்காரன் படம்தாங்க நிஷாந்தியோட முதல் படம்.

பாசக்கார தங்கச்சி

பாசக்கார தங்கச்சி

பானுப்பிரியாவின் தங்கச்சியாக இருந்தாலும் கூட சொந்தக் காலில் நின்று வாய்ப்பு தேடி உழைத்து முன்னேறியவர். தமிழில் பெரிய அளவில்இவர் நடிக்காவிட்டாலும் கூட பெயர் சொல்லும்படியான வேடங்களில் நடித்துள்ளார் என்பதே சாதனைதான். குறிப்பாக முதல் படத்திலேயே அழுத்தமான வேடம். நன்றாக நடிக்கக் கூடிய வேடம் அது. சிறப்பாகவே அதில் நடித்துப் பெயர் வாங்கி விட்டார் நிஷாந்தி.

எங்க ஊரு பாட்டுக்காரன்

எங்க ஊரு பாட்டுக்காரன்

அடுத்தடுத்து நேரம் நல்லா இருக்கு, சக்கரைப் பந்தல், ஒருவர் வாழு் ஆலயம், ரயிலுக்கு நேரமாச்சு, கைநாட்டு என நடித்து வந்த நிஷாந்தி, கடைசியாக தமிழில் நடித்த படம் உயர்ந்தவன் என்ற படம்தான். சரியா ஓடலை. அவரும் இந்திக்குப் போயிட்டார். பிறகு இந்தி சீரியல்களில் சிலவற்றிலும் நடித்தார். போஜ்பூரி படங்களில் கூட நடித்ததாக சொல்லப்பட்டது.

கணவர் மரணம்

கணவர் மரணம்

நிஷாந்திக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்குங்க. இப்போது அவருக்கு 50 வயதாகிறது. அதாவது அவருக்கு 40 வயது இருக்கும்போது துயரம் நடந்தது. அவரது கணவர் சித்தார்த் ரே திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது நிஷாந்தியின் இரு மகன்களுக்கும் 5 வயதுக்குள்தான் இருக்கும். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப காலம் பிடித்தது நிஷாந்திக்கு.

பிக் பாஸ் ஆசை

பிக் பாஸ் ஆசை

இப்போது நிஷாந்தி மீண்டும் டிவிக்கு வர முடிவெடுத்திருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறாராம். ஆமாங்க, சல்மான்கான் தொகுத்து நடத்தி வருகிறாரே அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கத்தான் ஆர்வமாக இருக்கிறாராம் நிஷாந்தி. இந்த ஆண்டுக்கான சீசனில் அவர கலந்து கொள்ளப் போவதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அதுதாங்க பிரபலம்

அதுதாங்க பிரபலம்

அது ஏன் பிக் பாஸ் மேல மோகம் என்றால், இந்திய டிவி நிகழ்ச்சிகளிலேயே பாப்புலர் இதுதாங். கண்டிப்பாக இதில் பங்கேற்க ஆசையாக இருக்கிறேன். வாய்ப்பு கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன். கிடைத்தால் விட மாட்டேன் என்று சொல்லியுள்ளார் நிஷாந்தி. பிறகென்ன நம்ம ஊர் ஷோவில் பாத்திமா பாபுவைப் பிடித்துப் போட்டது போல இவரையும் பிடித்துப் போட வேண்டியதுதான்.

அடுத்த ரவுண்டு ரெடியா

அடுத்த ரவுண்டு ரெடியா

நிஷாந்திக்கு இப்போதைக்கு தாய்மொழியான தெலுங்கு அல்லது தமிழில் சீரியல்களில் நடிக்க ஆர்வம் இல்லையாம். முழுசா மும்பைக்காரப் பெண்ணாக மாறி விட்டாராம். எனவே இந்தியைத் தவிர்த்து வேறு எங்கும் வரும் ஆசை இல்லை என்றும் சொல்கிறார்கள். இருப்பினும் பிக் பாஸ் மூலமாக ஹிட்டடித்து அதை வைத்து மீண்டும் டிவி, சினிமா என ஒரு ரவுண்டு வரும் திட்டமும் அவரது மனசுக்குள் இருப்பதாக சொல்கிறார்கள். யார் கண்டது என்ன வேண்டுமானாலும் நடக்குமுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+