விஜய்யை நான் தூக்கி வளர்த்தேன்.. ஆனா இப்போ பார்க்கவே முடியல.. கண்கலங்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
சென்னை: பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் பற்றி அவரை தூக்கி வளர்த்த அவருடைய சித்தி நடிகை ஷீலா சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை ஷீலா நடிகர் விஜய்யின் அம்மாவுடன் பிறந்த சகோதரி தான் இந்த நிலையில் விஜய்யை தன்னால் இப்போது பார்க்க முடியவில்லை என்று ஷீலா பேட்டியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதோடு நடிகர் விஜய்யின் குழந்தை பருவம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் விரைவில் களத்தில் இறங்குவாரா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்குரிய ஏற்பாடுகளை விஜய் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். இளம்தலைமுறையினரையும் கவரும் வகையில் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு அதிகமான மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக ரசிகர்களோடு நெருங்கிய தொடர்பில் விஜய் இருந்தாலும் அவரை பார்க்க முடியாத வருத்தத்தை அவருடைய சொந்த சித்தி பேட்டியில் தன்னுடைய வருத்தத்தை கொட்டி இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்திருந்தாலும் இப்போது திடீரென்று வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் சித்தியான ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக நடித்திருந்தார். அதுபோல இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அதுமட்டுமல்லாமல் நடிகர் விக்ராந்தின் அம்மாவும் இவர்தான். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது விஜய் பிறந்தாராம்.
அப்போது பெரும்பாலும் விஜய்யை ஷீலா தான் குளிப்பாட்டி தூங்க வைக்க செய்வாராம். அந்த அளவிற்கு எப்போதும் விஜய்யை தூக்கி வைத்து கொண்டு இருப்பது தான் ஷீலாவின் வேலையும்.விஜய் அப்போவெல்லாம் அவருடைய அம்மாவிடம் கூட அதிகமாக இருக்க மாட்டாராம். ஆனால் அதற்கு பிறகு காலங்கள் மாற மாற எல்லாம் மாறிவிட்டது.
எங்களுடைய பசங்களுக்கு திருமணமாகி அவர்கள் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் நான் கைக்குழந்தையாக பார்த்த விஜய் இன்று எவ்வளவு வளர்ந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது என்று ஷீலா பேசியிருக்கிறார். அதோடு விஜயை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் இப்போது விஜயை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்றும் ஷீலா கூறி இருக்கிறார்.

அதோடு நான் விக்ராந்த் படமானாலும் சரி விஜய் படமானாலும் சரி படத்தைப் பார்த்து உடனே என்னுடைய கருத்தை சொல்லி விடுவேன். விஜய் இவ்வளவு அழகாக டான்ஸ் ஆடுவான் என்றெல்லாம் எங்களுக்கு ஆரம்பத்தில் தெரியாது. விஜய் படிக்கும் போது நாங்க தான் பக்கத்தில் எங்கேயாவது சூட்டிங் நடந்தால் பார்ப்பதற்காக கூட்டிட்டு போவோம். அப்போ எல்லாம் அவ்வளவு பவ்யமாக அதை பார்த்துக் கொண்டே இருப்பார் என்று அந்த பேட்டியில் விஜய் பற்றி மேலும் பல தகவல்களையும் ஷீலா பகிர்ந்திருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications