Soundarya: சவுந்தர்யாவின் ரூ.100 கோடி சொத்து.. 6 ஏக்கர் நிலம்.. மோகன் பாபுவிடம் விசாரணையா?: பிரபலம்
சென்னை: சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டது உண்மைதானா? நிலத்தை தரமுடியாது என்று சவுந்தர்யா சொன்னது உண்மைதானா? அப்படியானால் இப்போது அந்த சொத்து மோகன் பாபு கையில் எப்படி சென்றது? அந்த இடத்தில் கெஸ்ட் அவுஸ் கட்டி மோகன் பாபு எப்படி குடியிருக்கிறார்? இவைகளை எல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று சிட்டிமல்லு புகாரில் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும் இதில், மோகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்படுமா? புகாரில் தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது போகப்போகதான் தெரியும்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "சவுந்தர்யா ஒரு கட்சியில் சேர்ந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அதன்படியே கட்சியில் இணைந்தார்.. முதல்தடவையாக பிரச்சாரத்துக்கும் செல்கிறார்.. பெங்களூரிலிருந்து கரீம் நகர் என்ற இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்..

ஹெலிகாப்டரில் ஏறும் முன்பு, ஆர்வி உதயகுமாருக்கு ஏர்போர்ட்டிலிருந்து ஒரு போன் செய்தார்.. "சார், நான் அரசியலில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னை இவ்வளவு பெரிய உயரத்துக்கு நடிகையாக்கி, மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது நீங்கள்தான்.. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததும் நீங்கள்தான்.. உங்களுக்கு என்னுடைய நன்றிகள் சார்" என்று சொல்லி உள்ளார்.
இதை ஏன் திடீர்னு சொல்றீங்க? என்று ஆர்வி உதயகுமார் கேட்டதற்கு, "என்னமோ தெரியல, உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சார் என்று கூறியிருக்கிறார் சவுந்தர்யா.
2 மாத சிசு சவுந்தர்யாவின் வயிற்றில்
பிறகு, உடனே ஹெலிகாப்டரில் ஏறினார்.. கொஞ்ச தூரம்தான் ஹெலிகாப்டர் பறந்தது.. உடனே பல்டி அடித்து, தீப்பற்றி எரிந்தது.. சவுந்தர்யா, அவரது சகோதரர், சகோதரருக்கு நெருக்கமான 2 பேர், சவுந்தர்யாவின் உதவியாளர்கள் என அத்தனை பேரும் ஹெலிகாப்டரில் இறந்துவிட்டார்கள.. அப்போது 2 மாத சிசு சவுந்தர்யாவின் வயிற்றில் இருந்ததாக கூறப்பட்டது.
சவுந்தர்யா இறந்துவிட்டதாக, இரவு 10.30 மணிக்கு தகவல் வந்தது.. ஆனால், யாருமே அதை நம்பல.. எனவே, மீண்டும் மீண்டும் மீடியாவில் உண்மைத்தன்மை ஆராயப்பட்டது. மறுநாள்தான், அவரது மரண செய்தி உறுதிப்படுத்தப்பட்டது... மொத்த தமிழக மக்களும் அதிர்ச்சியானார்கள்.. எந்த கிசுகிசுவிலும் சவுந்தர்யா சிக்கியதில்லை.. ஆடம்பரத்தில் சிக்கியதில்லை.. எந்த திமிரான செயலும் செய்ததில்லை.
சவுந்தர்யாவின் பிளஸ் பாயிண்ட்ஸ்
சில நடிகைகள் அழகாக இருப்பார்கள், ஆனால் நடிப்பு பிரம்மாதமாக இருக்காது. சிலர் திறமையாக நடித்தாலும், அழகாக என்று எனறு சொல்ல முடியாது. ஆனால், சவுந்தர்யா நடிக்கவும் செய்தார், அழகாகவும் இருப்பார். இரண்டுமே சவுந்தர்யாவுக்கு பிளஸ் பாயிண்ட்... சவுந்தர்யா இறந்த தினத்தை தமிழக மக்கள், துக்க நாளாகவே அன்று கருதினார்கள்..
சிட்டிமல்லு என்ற சமூக ஆர்வலர், புகார் ஒன்றை தந்துள்ளார்.. சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலம், இப்போது நடிகர் மோகன் பாபுவிடம் உள்ளதாக கூறியிருக்கிறார்.. மோகன் பாபு தெலுங்கில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.. சீனியர் நடிகர்.. ரஜினியின் நெருங்கிய நண்பரும்கூட.. மோகன்பாபு குடும்ப விழாக்களில் ரஜினியும், ரஜினியின் குடும்ப விழாக்களில் மோகன்பாபுவும் கலந்து கொள்வார்கள்.
6 ஏக்கர் நிலம் - தகராறு
ஆனால், சமீபகாலமாகவே, மோகன்பாபு மீது பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. குடும்பத்தில் சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக தகராறு நடந்து, அவை எல்லாம் மீடியாவிலும் வெளியானது. ஆனால், இயல்பாகவே மோகன் பாபு முரட்டுத்தன்மை கொண்டவர் என்பதை கேள்விப்பட்டுள்ளேன்.
சவுந்தர்யாவின் 6 ஏக்கர் நிலத்தை மோகன் பாபு கேட்டிருக்கிறார்.. ஆனால், சவுந்தர்யா தன்னுடைய நிலத்தை தர மறுத்துவிட்டார்... இந்நிலையில்தான், சவுந்தர்யாவின் ஹெலிகாப்டர் விபத்தே சதிதான் என்று சிட்டிமல்லு புகாரில் கூறியிருக்கிறார்..
சொத்து கேட்டும் தரவில்லையா
முதலில் இது கொலையல்ல விபத்து என்றார்கள், ஆனால், இப்போது கொலை என்றும், கொலைக்கும், மோகன்பாபுக்கும் சம்பந்தம் உள்ளதாகவும் சிட்டிமல்லு கூறுவதுடன், இது தொடர்பாகவும் புகார் தந்திருக்கிறார். அன்று சொத்து கேட்டும் சவுந்தர்யா தரவில்லை, அந்த சொத்து இப்போது மோகன்பாபு கையில் உள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 100 கோடி என்கிறார்கள்.. எனவே, இதை தீர விசாரிக்க வேண்டும்.. உண்மை வெளிவரவேண்டும்.
எத்தனையோ கோடிகள் தங்களுக்கு இருந்தாலும், ஒருசில சொத்து மீது விருப்பம் சிலருக்கு இருக்கும்.. இயல்பாகவே மனிதருக்கு உள்ள பலவீனம்தான் இது.. பெரிய பெரிய இடத்திலிருப்பவர்களும், சின்ன சின்ன வீக்னஸ்களில் சிக்கிவிடுவார்கள்.. அதுபோல, 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டிருக்கலாம்.
நிலத்தை கேட்டது உண்மையா?
சவுந்தர்யா நிலத்தை மோகன்பாபு கேட்டது உண்மைதானா? நிலத்தை தரமுடியாது என்று சவுந்தர்யா சொன்னது உண்மைதானா? அப்படியானால் இப்போது அந்த சொத்து மோகன் பாபு கையில் எப்படி சென்றது? அந்த இடத்தில் கெஸ்ட் அவுஸ் கட்டி மோகன் பாபு எப்படி குடியிருக்கிறார்? இவைகளை எல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று சிட்டிமல்லு புகாரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இவ்வளவு பெரிய ஆளுமையான மோகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்படுமா? புகாரில் தரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது போகப்போகதான் தெரியும்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications