சிவக்குமாரிடம் பேசாமல் 12 படம் நடித்த ஸ்ரீபிரியா.. "ஆடு"வால் அலமேலுவுக்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரபலம்
சென்னை: பிரபல நடிகை ஸ்ரீபிரியா திரையுலகில் நுழைந்தது எப்படி, முதல் பட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது, சிவக்குமாருடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் என்ன? என்பன குறித்தெல்லாம் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விரிவாக கூறியிருக்கிறார்.
Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "ஸ்ரீபிரியாவின் ஒரிஜினல் பெயர் அலமேலு.. இவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம்.. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீபிரியா, சர்ச் பார்க் கான்வெட்டில் படித்தார்.. இவரது அக்கா மீனாட்சிதான், பிக்பாஸில் கலந்துகொண்ட சிவக்குமாரின் அம்மா.

முதன்முதலில், மீனாட்சியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக, ஒரு பெரிய புகைப்பட கலைஞர் நாகார்ஜூன ராவ் என்பவர் போட்டோ எடுத்தார். இவர் அப்போது ராசியான போட்டோகிராபர். மீனாட்சியை போட்டோஷூட் எடுத்தபோது, பள்ளி செல்லும் ஸ்ரீபிரியாவையும் போட்டோக்களை எடுத்தார். இந்த போட்டோக்களை எல்லாம் சினிமா ஸ்டுடியோக்களில் வழங்கினார்.
மீனாட்சி: மீனாட்சிக்கு கதாநாயகி வாய்ப்பு வரும் என்று அனைவரும் காத்துகிடந்தபோது, ஸ்ரீபிரியாவை போட்டோவில் பார்த்ததுமே, இந்த பெண் சினிமாவில் நடிக்குமா? என்று தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளர்கள். அதற்கு பிறகுதான், மிகப்பெரிய டைரக்டர் பி.மாதவன் எடுத்த மாணிக்கம் தொட்டில் என்ற படத்தில் ஸ்ரீபிரியா என்ற பெயருடன் அறிமுகமாகிறார்.
ஆனால், தன்னை போலவே 5 பெண்களும் அந்த படத்தில் நடித்ததால், ஸ்ரீபிரியா துணிச்சலுடன் டைரக்டரிடம் சென்று, கும்பலோடு கும்பலாக என்னை காட்ட வேண்டாம். ஹீரோயின் வாய்ப்புதான் வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.
இதைக்கேட்டு மாதவன் அதிர்ச்சியடைந்து, ஸ்ரீபிரியா குடும்பத்துக்கு தகவல் சொல்லப்படுகிறது.. உடனே அப்பா, அம்மா கிளம்பி வந்து, ஸ்ரீபிரியாவை சத்தம் போட்டனர். அப்போது மாதவன் குறுக்கிட்டு துடுக்குத்தனமாக பேசினாலும், விரைவில் உங்க பொண்ணுதான் ஹீரோயின் என்றார்..
ஸ்ரீபிரியா: 6 மாதம் கழித்து, முருகன் காட்டிய வழி என்று மாதவன் படம் எடுத்தபோது, அதில் ஸ்ரீபிரியாவுக்கு, கதாநாயகியின் தங்கை வேடம் கிடைத்தது. 1974ம் ஆண்டு, அவள் ஒரு தொடர்கதை என்ற பாலச்சந்தர் எடுத்த படத்தில் ஸ்ரீபிரியாவுக்கு 2வது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒவ்வொரு கேரக்டராக நடித்தபிறகுதான், தேவரின் "ஆட்டுக்கார அலமேலு" படத்தில் ஹீரோயினாக நடித்து, அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
படப்பிடிப்பு தளத்தில் அகங்காரமாகவும், ஆணவமாகவும், திமிர்த்தனமாகவும் பேசக்கூடியவர். வளைந்து, குழைந்து நடுங்கி பேசும் சினிமா உலகில், யாரையுமே எடுத்தெறிந்து பேசுவாராம்..
சிவக்குமார்: அதுபோல சிவக்குமாரிடம் ஏதோ பேசப்போய், ஸ்ரீபிரியாவிடம் அவர் பேசவில்லையாம். இருவரும் ஒருவார்த்தைகூட பேசாமல் 12 படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இது திரையுலகில் மிகப்பெரிய அதிசயம், சாதனை என்றுகூட சொல்லலாம்.
நடிகை ராதிகா மற்றும் ஸ்ரீபிரியா இருவரும் மிக நெருங்கிய தோழிகள்.. ஒருமுறை ராதிகா குடும்பத்தில் ஏதோ துக்கம் விசாரிக்க சிவக்குமார் சென்றபோது, அங்கே ஸ்ரீபிரியா இருந்துள்ளார்.. அவரிடம், "ராதிகாவை பார்த்துக்கோ" என்று சொல்லி உள்ளார். இப்படித்தான் இவர்கள் மறுபடியும் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications