சுகன்யாவை விடாமல் விரட்டி.. கங்கை அமரன் நடிக்க கேட்டும் "நோ" சொல்லி.. இதுதான் நடிகையின் ஸ்பெஷாலிட்டி
சென்னை: தங்கள் மகள் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் சுகன்யாவின் பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது.. அதனால, சுகன்யாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, அவர்களது ஆஸ்தான ஜோதிடரிடம் கொண்டு போய் தந்து ஆலோசனை கேட்டுள்ளார்கள்.. அதற்கு ஜோதிடர், "சினிமாவே வேண்டாம் என்று உங்கள் மகள் சொன்னாலும், 10 வருட காலம் சினிமாவை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பார்" என்று சொன்னதாக பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "சுகன்யாவை பொறுத்தவரை, ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவர்.. சினிமாவில் நடிப்பதையே சுகன்யா விரும்பவில்லை..

கலாச்சேத்ரா போல உலகளாவிய இசைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்ற வேண்டும், உலகம் முழுவதும் பரதநாட்டியத்தை பரப்ப வேண்டும் என்பதுதான் சுகன்யாவின் ஆசையாக இருந்தது. எனவே, பலமுறை நடிக்க வாய்ப்பு வந்தும் அதை தவிர்த்து விட்டார்..
பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், விளம்பரங்கள், அரசு நிகழ்ச்சிகள், வெளிநாடுகளில் நடக்கக்கூடிய விழாக்களில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார் சுகன்யா.. ஜெர்மன் நாட்டில் கலாச்சார விழா போல, வெளிநாடு தூதரகங்களில் நடக்கக்கூடிய விழாக்களிலும் சுகன்யாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்படும்..
கங்கை அமரன் கோரிக்கை
ஒருமுறை இப்படித்தான் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடந்தபோது, அதில் கங்கை அமரன் கலந்து கொண்டு, சுகன்யாவின் நடனத்தையும் பார்த்து ரசித்தார்.. அப்போது சுகன்யாவிடம், தன்னுடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றும், தூதரகம் என்ன தொகையை தருகிறதோ, அதே தொகையை தானும் வருவதாக சொல்லியிருக்கிறார். உடனே சுகன்யா கங்கை அமரனிடம், எனக்கு விருப்பமில்லை, தொந்தரவு செய்யாதீங்க, என்று சொல்லிவிட்டார்.
அதேபோல கண்ணதாசன் மகனும், ஒரு படம் எடுத்து கொண்டிருந்ததால், அதில் சுகன்யாவை நடிக்க வைக்க நினைத்தார். இதற்காக சுகனயாவின் அனுமதியை பெற, அவரது பெற்றோரை சென்று சந்தித்து பேசினார்.. தங்கள் மகளுக்கு விருப்பமில்லை என்று அவரிடமும் பெற்றோர் சொல்லி உள்ளார்.
10 வருட காலம் ஆளுமை
தொடர்ந்து இப்படி வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்ததால், பெற்றோருக்கும் தங்கள் மகள் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மெல்ல வந்தது.. எனவே, சுகன்யாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, அவர்களது ஆஸ்தான ஜோதிடரிடம் கொண்டு போய் தந்து ஆலோசனை கேட்டுள்ளார்கள்.. அதற்கு ஜோதிடர், "சினிமாவே வேண்டாம் என்று உங்கள் மகள் சொன்னாலும், 10 வருட காலம் சினிமாவை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பார்" என்றாராம்.
இதற்கு பிறகு மற்றொரு தயாரிப்பாளரும் சுகன்யாவின் பெற்றோரிடம் அனுமதி கேட்க வந்துள்ளனர். அதற்கு பெற்றோர், "பள்ளி தலைமை ஆசிரியரை சென்று சந்தித்து பேசுங்கள், அவர் மீதுள்ள மரியாதையால் உங்கள் பேச்சுக்கு மகள் கட்டுப்படலாம்.. தலைமை ஆசிரியர் சொன்னால் சுகன்யா அவரது பேச்சை கேட்கலாம்" என்று சொல்லியுள்ளார்கள்.
சுகன்யா தலைமை ஆசிரியர்
இதற்கு பிறகு, சுகன்யாவின் பள்ளிக்கூடத்துக்கே சென்றிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.. பள்ளி தலைமை ஆசிரியரும், படத்தயாரிப்பாளரும், ஏற்கனவே கல்லூரி நண்பர்கள் என்பதால், சுகன்யாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பது பற்றி அனுமதி கேட்டுள்ளார்.. உடனே தலைமை ஆசிரியரும், சுகன்யவை அழைத்து பேசி, உனக்கு விருப்பமிருந்தால் நடிக்கலாமே என்று கூறியிருக்கிறார்.
"படிக்க சொல்வதற்கு பதிலாக நடிக்க சொல்றீங்களே சார்?" என்று சுகன்யா கேட்டுள்ளார். பிறகு யார் வற்புறுத்தியும் அதுவரை கேட்காத சுகன்யா, தலைமை ஆசிரியர் சொல்லவும், நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இத்தனை வாய்ப்புகள் சுகன்யாவுக்கு வந்ததற்கு ஒரே காரணம், முக பாவனைதான். நாட்டிய மங்கைகளுக்கு, முக பாவனைகளுக்கு தகுந்தாற்போல் உடல் நளினமாக மாறும்.. இந்த சூட்சுமம் தெரிந்த நடிகை பத்மினிக்கு பிறகு யாருமே இல்லை. அதனால்தான், சுகன்யாவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications