பிரபல வில்லன் நடிகரின் மகள்.. சிறு வயதில் கணவர் இறப்பு.. பிறகு பட்ட வேதனை..நடிகை சுமதி ஸ்ரீ எமோஷனல்
சென்னை: சினிமாவிலும் சீரியலிலும் அம்மா கேரக்டரில் நடித்து பலருடைய அனுதாபங்களை பெற்றுக் கொண்டிருக்கும் நடிகை சுமதி ஸ்ரீ தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
13 வயதிலேயே நடிக்க வந்த சுமதி ஸ்ரீ 3 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய கணவர் மரணத்திற்கு பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் அதில் பேசி இருக்கிறார்.

அதோடு தான் பிரபல வில்லன் நடிகரின் மகள் என்பது பற்றியும் பல தகவல்களை அந்த பேட்டியில் சுமதி ஸ்ரீ பகிர்ந்து இருக்கும் நிலையில் இவருக்குள் இத்தனை சோகங்களா? என்று ரசிகர்களை பீல் பண்ண வைத்திருக்கிறார்கள். அதை பற்றி பார்க்கலாம்.
சினிமா நடிகர்களின் வாரிசு என்று தெரியாமலேயே சினிமாவில் அடி எடுத்து வைத்தவர்களில் ஒருவர்தான் நடிகை சுமதி ஸ்ரீ. இவர் தன்னுடைய 13 வயசிலேயே சினிமாவிற்குள் வந்து விட்டாராம். இவருடைய அப்பா, அம்மா, பெரியப்பா எல்லாருமே சினிமா அனுபவம் உள்ளவர்கள் தானாம். அந்த காலகட்டத்தில் இவருடைய பெரியப்பா எம்ஜிஆர் திரைப்படங்களில் கணக்குப்பிள்ளை போன்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அவர் மூலம்தான் சுமதி ஸ்ரீயின் அப்பாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் சினிமாவில் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்த சுமதி ஸ்ரீயின் அப்பாவிற்கு ஆறு மாதங்களுக்கு பிறகு நடிகர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம். அந்த திரைப்படத்தில் சின்ன சின்ன வில்லன்களுக்கெல்லாம் தலைவராக இவருடைய அப்பா தான் நடித்து இருப்பாராம். அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி நூறாவது நாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது.
அப்போது அந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்குமே கேடயம் நடிகர் எம்ஜிஆரின் கையால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அப்போது அங்கு தங்கராஜ் என்கிற பெயரில் பல தங்கராஜ் இருந்திருக்கிறார்கள். அதில் சுமதி ஸ்ரீயின் அப்பாவின் பெயரும் தங்கராஜ். அதனால் எம்ஜிஆர் நீங்கள் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏவாக தானே நடிச்சீங்க, அதனால நீங்க எம்எல்ஏ தங்கராஜ் என்று சொல்ல அவருடைய பெயர் அந்த கேடயத்தில் எம்எல்ஏ தங்கராஜ் என்று எழுதப்பட்டதாம். அது போலவே கடைசி வரைக்கும் அவருடைய பெயர் எம் எல் ஏ தங்கராஜ் என்று விளங்கி விட்டதாம்.
அந்த வகையில் வீட்டில் எல்லாரும் சினிமா நடிகர்களாக இருக்கும் நிலையில் இவருக்கும் 13 வயதில் இருக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. அப்போது வாய்ப்புக்காக தன்னுடைய தந்தை உடன் ஒரு சில இடங்களுக்கு சென்றிருக்கிறார். பிறகு இவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகங்களிலும் சுமதி ஸ்ரீ நடித்துக் கொண்டிருந்தாராம். அப்படி நாடகம் நடிக்கப் போன இடத்தில்தான் இவருக்கு இவருடைய கணவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறார்கள். ஆனால் இருவரும் பெரிய அளவில் அந்த காதலை வெளியே சொல்லாமலே மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சுமதி ஸ்ரீயின் வீட்டில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவிக்க அதற்கு அவருடைய கணவரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லையாம்.
ஆனாலும் இவர்களின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சுமதி ஸ்ரீ நடிக்க கூடாது என்று அவருடைய கணவரின் குடும்பத்தினரும் கணவரும் சொல்லியதால் இவர் நடிப்பை விட்டு விலகி இருந்தாராம். அதற்குப் பிறகு அதிகமாக பண கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் திடீரென்று மாரடைப்பு காரணமாக அவருடைய கணவர் இறந்து போன பிறகு தன்னுடைய ஒரே மகளை வளர்ப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன் என்று அந்த பேட்டியில் கண்கலங்க சுமதி ஸ்ரீ பேசி இருக்கிறார்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications