சன் டிவி டாப் சீரியலில் இருந்து விலகிய நடிகை.. திடீர் முடிவுக்கு காரணம் இதுதானா? வேதனையோடு போஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் அபி கேரக்டரில் நடித்து வந்த நடிகை, தான் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது வாடிக்கை தான். பொதுவாக சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு சில நடிகர்களால் தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சிலர் வேறு சில சீரியல்களில் கமிட் ஆகி விடுவதால் ஆரம்பத்தில் நடித்த சீரியலில் இருந்து விலகுகிறார்கள்.

சிலர் உடல் நிலை பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனைகளால் கூட சீரியலில் இருந்து விலகுவதை பார்க்க முடியும். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து நடிகை ஸ்வேதா விலகி இருக்கிறார்.
சன் டிவியில் ஆனந்த ராகம் சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் அதிகமான முறை டிஆர்பியில் முதல் மூன்று இடங்களில் வந்தது. பிறகு அந்த சீரியலுக்கான நேரம் மாற்றம் நடைபெற்ற பிறகு டிஆர்பி குறைய தொடங்கியது. ஆனாலும் ஓரளவு சராசரியான டிஆர்பி பெற்று வருகிறது.
இந்த சீரியலில் கதையே அக்கா தங்கை கதையை மையப்படுத்தியது தான். கதாநாயகி அக்கா தன்னுடைய தங்கைக்காக என்ன வேணாலும் செய்வார். எவ்வளவு ரிஸ்க்கும் எடுக்கும் கேரக்டரில் தான் இருக்கிறார். அதில் தங்கை கேரக்டரில் ஸ்வேதா நடித்து வருகிறார். அவர் இந்த சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்வேதா தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "என்னுடைய இன்ஸ்டா ஃபேமிலிக்கு நான் சொல்ல விரும்புவது என்னன்னா இனிமே நான் ஆனந்த ராகம் சீரியலில் பார்ட்டா இல்லை. நான் 750 எபிசோடு உடன் என்னுடைய சாப்டர் முடிகிறது.
அபி கேரக்டர் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், க்ளோஸ் மை ஹார்ட். ரொம்பவே என்ஜாய் பண்ணி பண்ணுனேன். ரொம்பவும் கிரியேட்டிவிட்டியாக கேரக்டர். இதில் ஒவ்வொரு எபிசோடும் நான் ரொம்ப என்ஜாய் பண்ணுனுன கேரக்டர். இந்த நேரத்தில் நான் எல்லாருக்கும் ரொம்ப நன்றி சொல்ல விரும்புகிறேன். அளவில்லாமல் அபிக்கு அன்பு தந்தீங்க" சொல்லி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய மேஜர் சப்போட்டாக இருந்த எல்லோருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் இனி வரப்போகிறது அதற்காக நான் எந்த சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்பதுபோல அந்த பதிவில் பதிவிட்டு இருக்கிறார்.

அதனால் இவர் திருமணம் செய்யப் போகிறாரா? அதனால் தான் இந்த முடிவெடுத்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகிறது. ஆனால் அது குறித்து எந்த விளக்கமும் அந்த பதிவில் ஸ்வேதா கொடுக்கவில்லை. அதே நேரத்தில் தற்போது ரோஜா 2 சீரியல் youtube சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த சீரியலிலும் இப்போதுதான் சில நாட்களாக இவருடைய காட்சிகள் வரத் தொடங்கியது.
அதற்குள் இவர் மொத்தமாக சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பது போல பதிவு வெளியிட்டிருப்பதால் அந்த சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்று கமெண்டுகள் வருகிறது. ஆனால் இவர் தன்னுடைய முதல் பதிவில் எளிமையாக முடித்திருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து ரசிகர்களின் கமாண்டுகளுக்கு விளக்கம் கொடுத்து அடுத்த பதிவு போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications