நடிகை வரலட்சுமி சரத்குமாரை சீண்டிய 5, 6 பேர்.. திருந்த மாட்டீங்களா? வாச்சாத்தி நினைவிருக்கா: பிரபலம்
சென்னை: கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில் சமூக கட்டமைப்பு சரியாக இருக்கிறது. ஆனால், இங்கே சட்டவிரோத அமைப்பே, அரசியல் கட்சிகள்தான்.. போலீஸ் ஸ்டேஷனுக்கே வட்ட செயலாளரை கூட்டிட்டுதான் போக வேண்டிய நிலைமை வந்துவிட்டது. சட்டத்தின் தண்டனைகள் கடுமையாக இல்லை.. மக்களிடம் கல்வி போய் சேரவில்லை. கல்வி கொடுக்க உருவாக்கப்பட்டதுதான் அரசு.. ஆனாலும், கல்வி காஸ்ட்லியாகிவிட்டது" என்று காட்டமாக கூறியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
நடிகை வரலட்சுமி தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்மல்க பேசியிருந்தார். "என் அம்மா, அப்பா இருவருமே வேலையில் பிஸியாக இருந்ததால் சிறு வயதில் என்னை மத்தவங்க வீட்டில தான் என்னை விட்டுட்டு போவாங்க. அப்போது, 5, 6 பேர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். குழந்தையாக இருக்கும்போதே இந்த கொடுமையை எதிர்கொண்டேன்" என்று கூறியிருந்தார்.

நடிகை வரலட்சுமிக்கு பாலியல் சீண்டல்
தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்மல்க பேசியிருந்ததை கேட்டு பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.. சரத்குமாரின் மகளுக்கே பாலியல் துன்புறுத்தலா? என்றும் வியப்புற்றனர்.
இந்நிலையில், BBT யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், இங்கு சமூக கட்டமைப்பே தவறாக இருப்பதாக விமர்சித்தார். அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது:
"பெண்கள் சமூகத்துக்கு, பாலியல் சீண்டல்கள் என்பது கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.. அரசு அலுவலகங்களிலும் இது நடக்கிறது..1200 காவலர்களுக்கு கட்டளையிடும் பெண் எஸ்பி அவர்.. பயிற்சி பெற்ற ஆயுதங்களை கையாளக்கூடிய, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய பெண் எஸ்பி அவர்.. அப்படிப்பட்ட பெண் அதிகாரியையே தன்னுடைய காரில் ஏற்றிச் சென்று, பாலியல் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் குப்தா.. இதற்கு வழக்கும் பதிவாகிவிட்டது.
மாவட்ட கலெக்டரே இப்படியா
அதைவிட கொடுமை மாயவரத்தில், 4 வயது குழந்தையை 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான்.. மாடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லாத கலெக்டர், இதுக்கு ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், "அந்த 3 வயது குழந்தை மீதும் தவறு உள்ளது" என்கிறார். இப்படி ஒரு அறிக்கை வெளியானதுமே, மேலதிகாரிகள் உடனே அந்த கலெக்டரை வேறு இடத்துக்கு தூக்கிஎறிந்தார்கள்.
மாவட்ட பெண் எஸ்பிக்கு அப்படி நடக்கிறது, மாவட்ட கலெக்டர் இப்படியிருக்கிறார். இது எல்லாத்துக்கும் காரணம் சினிமாதான்.. அதுவும் ஆங்கில படமல்ல, தமிழ் படங்கள்தான் காரணம்.
வாச்சாத்தி கொடுமை
பெரிய இடங்களில் எல்லாம் மனிதாபிமானம் அற்ற மனிதர்களாகவே இருக்கிறார்கள்.. செல்வாக்கு, பணம் அத்தனையும் விலைபேசி,
தவறுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்கள்..
வாச்சாத்தியில் 12 வயது பெண், குடிசையிலிருந்து நிர்வாணமாக ஓடுகிறார்.. பின்னாடியே 55 வயது போலீஸ் அதிகாரியும் விரட்டிக்கொண்டு நிர்வாணமாக ஓடுகிறார். மான்குட்டியை சிங்கம் வேட்டையாடுகிற மாதிரி பெண்களை வேட்டையாடினார்கள்.. கடைசியில் எந்த ஆதாரமும் இல்லாமல், அந்த போலீஸ் அதிகாரிக்கு தண்டனை கிடைக்கவில்லை.
"சுப்ரீம் ஸ்டார்" போன மாதம் வந்ததுதான்
சரத்குமாரை பொறுத்தவரையில், பெங்களூரில் சாயாவை திருமணம் செய்தார்.. அப்போது, தினகரன் பத்திரிகையில் சாதாரண ரிப்போர்ட்டராக வேலை பார்த்தார்.. காலையில் சைக்கிளில் பேப்பரை எடுத்து கொண்டு செல்வார். அவர்தான் பேப்பர் பாய், அவர்தான் ரிப்போர்ட்டர்.. அவர்தான் கலெக்ஷன் ஏஜென்ட்.. "சுப்ரீம் ஸ்டார்" என்பதெல்லாம் போன மாதம் வந்ததுதான். ஆரம்பத்தில் சராசரி தகப்பன்தான்.. இங்கு வரலட்சுமிக்கு மட்டுமல்ல, குஷ்புவும் இப்படியான பாலியல் கொடுமையை எதிர்கொண்டதாக அவரே சொல்லி உள்ளார்.
இந்த சமூக அமைப்பே தப்பாக இருக்கிறது.. இந்த சமூக அமைப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.. கேரளாவில் அவ்வளவு விழிப்புணர்வு இருக்கிறது.. ஒரு சின்ன தவறு நடந்தாலும், 5 ஆயிரம் பேர் ஒன்று கூடி, எதிர்க்கிறார்கள்.
சரியில்லாத சமூக கட்டமைப்பு
அந்தவகையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில் சமூக கட்டமைப்பு சரியாக இருக்கிறது. ஆனால், இங்கே சட்டவிரோத அமைப்பே, அரசியல் கட்சிகள்தான்.. போலீஸ் ஸ்டேஷனுக்கே வட்ட செயலாளரை கூட்டிட்டுதான் போக வேண்டிய நிலைமை வந்துவிட்டது.
சட்டத்தின் தண்டனைகளும் கடுமையாக இல்லை.. மக்களிடம் கல்வி போய் சேரவில்லை. கல்வியை கொடுக்க, உருவாக்கப்பட்டதுதான் இந்த அரசு.. ஆனாலும், கல்வி இப்போது காஸ்ட்லியாகிவிட்டது. கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்கினால்தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications