என்கிட்டயும் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டாங்க.. நான் என்ன சொன்னேன் தெரியுமா.. நடிகை விஜயலட்சுமி பரபரப்பு
சென்னை: பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என நடிகை விஜயலட்சுமி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து அவர் அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்கள் அந்தளவுக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரான ஃபெரோஸ் முகமதுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் சன் டிவியில் நாயகி சீரியலில் அவர் நடித்திருந்தார். பின்னர் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயலட்சுமி 100 நாட்களை கடந்த 3ஆவது இடத்தை பிடித்தார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக வந்தார்.
டும் டும் டும் சீரியலில் நடித்திருந்தார். அது போல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற விஜயலட்சுமி ரூ 1 கோடி பரிசுத் தொகையை பெற்றார். இந்த நிகழ்ச்ச்சிக்கு பிறகும் விஜயலட்சுமி சில படங்களில் நடித்து வந்தார். மேலும் வெப் சீரிஸ்களிலும் நடித்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் ஒரு முறை அவருடைய மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை போட்டு விமர்சனத்திற்குள்ளானார். நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும்.
எல்லா இடங்களிலும் இப்படி இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால் பல இடங்களில் இதுதான் நடக்கிது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர் படுக்கைக்கு வருவார் என பலர் எதிர்பார்க்கிறார்கள். ஒரு முறை என்னிடமும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை. நடிப்பு என்பது எனக்கு விருப்பமான ஒன்று. இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications