நடிகர் அக்ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்ட நபர்.. கடைசியில் மறக்க முடியாத சம்பவம்! இது பலருக்கு பாடம்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மகள் சந்தித்த ஆன்லைன் துன்புறுத்தல் குறித்து பகிர்ந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து அனைவருக்கும் எச்சரிக்கை செய்தியாக மாற்றியுள்ளார்.

அக்ஷய் குமார் பேட்டி
அவர் கூறியதாவது, தனது மகள் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெரியாத நபர் ஒருவர் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு உரையாட ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த உரையாடல், பின்னர் தனிப்பட்ட தகவல்களை கேட்கும் வகையில் மாறியுள்ளது. "நீ எங்கே இருக்கிறாய்? ஆணா, பெண்ணா?" போன்ற கேள்விகளுக்குப் பிறகு, தனது மகள் பெண் என்று கூறியதும், அந்த நபர் நிர்வாண புகைப்படம் அனுப்புமாறு கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி கைது
இந்த சம்பவத்தை அவரது மகள் உடனடியாக அம்மா ட்விங்கிள் கண்ணாவிடம் பகிர்ந்தது பெரிய ஆபத்தை தவிர்க்க உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தகவலின் அடிப்படையில் மும்பை சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, தற்போது அந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளனர்.
அக்ஷய் குமார் வேண்டுகோள்
மேலும், அவர் இதேபோன்று வேறு பெண்களிடமும் தவறான கோரிக்கைகள் வைத்தாரா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுபோல இந்த கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று முதல்வர் தேவேந்திரபட்டின அபிஷேகம் அக்ஷய் குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அக்ஷய் குமார் மனைவி ட்விங்கிள் கண்ணா எழுத்தாளராகவும் முன்னாள் நடிகையாகவும் பிரபலமானவர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும் தந்தையாகவும் அக்ஷய் குமார் இருக்கிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆன்லைனில் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு அவசியம் என்ற கருத்து மீண்டும் வலுப்பெற்றுள்ளது. தெரியாத நபர்களுடன் உரையாடும்போது தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது, சந்தேகத்திற்கிடமான மெசேஜ்கள் வந்தால் உடனடியாக block செய்து report செய்ய வேண்டும், மற்றும் பெற்றோர் அல்லது நம்பகமானவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என்பதையும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மொத்தத்தில், அக்ஷய் குமார் பகிர்ந்த இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட அனுபவமாக மட்டும் இல்லாமல், சமூகத்திற்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக மாறியுள்ளது. டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், விழிப்புணர்வும், உடனடி நடவடிக்கையும் தான் இப்படிப்பட்ட அபாயங்களை தவிர்க்கும் ஒரே வழி என்பதும் இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications