வாவ்.. ஆலியாவை விட அவரோட பாப்பா செம க்யூட்.. வேற லெவல் எக்ஸ்பிரஷன்!
சென்னை: ஆலியா மானசாவை விடவும் அவரது குழந்தை செம எக்ஸ்பிரஷன் காட்டிக்கொண்டு இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
குழந்தைகள் என்றாலே அழகு தான். அதுவும் தனது பொக்கை வாய் தெரிய சிரிக்கும் அழகிற்கு ஈடு எதுவும் இல்லை. அதுபோலத்தான் தற்போது நட்சத்திர தம்பதிகளான ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதிகளின் குழந்தையின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் ஆலியா மானசா, சஞ்சீவ் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இன்னும் காதலர்கள் போலத்தான் வலம் வந்து கொண்டுள்ளனர்.

காதலின் சின்னம்
இவர்களின் பெரும் காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு தற்போது இருவரும் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தருணங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். பலர் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறோம் வேலையில் பிஸியாக இருக்கிறோம் என்று வீட்டில் இருப்பவர்களை கவனிப்பதே இல்லை என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

பாப்பாதான் உலகமே
ஆனால், நாங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் எங்களுக்கு குடும்பமும் ரொம்பவே முக்கியம். வெளியில் இருக்கும் வேலையை வீட்டிற்கு வெளியே விட்டு விட்டு வீட்டிற்குள் வந்து விட்டால் வீடு சிறப்பாக இருக்கும் நமது குடும்பமும் சந்தோசமாக இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில் இவர்கள் இருவரும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்கள். சினிமாவில் கூட நடிப்பவர்கள் எல்லாம் காதலிப்பது என்பது புதிதான ஒன்று அல்ல இருந்தாலும் திருமணம் வரை சென்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சிலர்தான்.

காதல் குறையாது
ஆனால் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் காதல் குறையாமல் எப்பவும் நம்மவர்களுக்கு நம்முடைய நேரத்தை கொஞ்சம் செலவழித்தால் போதும் என்பதுதான் காதலர்களுக்கும், காதலித்து மணந்தோருக்கும் ஆலியா சஞ்சீவ் தரும் சின்ன அட்வைஸ். அதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில் தற்போது கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள் ஆலிய தம்பதி. குழந்தை பிறப்பது என்பது எல்லோருக்கும் சாதாரணம் தான். ஆனால் அது எங்களுக்கு பொக்கிஷம் என்னுடைய குழந்தை தான் எங்களுக்கு வாழ்க்கையின் அடையாளம் என்று கொண்டாடி வருகிறார் ஆலியா.

அம்மா மாதிரியே பொண்ணு
அவளுடைய சிரிப்புக்காக நாங்கள் என்ன வேணாலும் செய்வோம் என்று அழகான குழந்தை பிறந்ததன் ஆறுமாதத்தை கொண்டாடி இருக்கிறார்கள். இதில் விதவிதமான போட்டோக்களாக எடுத்து அவரவர்களின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதவிட்டுள்ளனர். இதை பார்த்த பல ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள் . சில ரசிகர்கள் இந்த மாதிரி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள். குழந்தைக்கு கண் பட்டுவிடும் என்று கூறி வருகிறார்கள் .

குழந்தை மீது ரொம்ப பாசம்
அதுவும் குழந்தையின் மீது இருக்கும் பாசத்தில் தான் என்றும் ஆல்யாவும் கூறிவருகிறார். இதில் அம்மாவும் பொண்ணும் ஒரே கலரில் டிரஸ் போட்டு தேவதை போல இருக்கிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சஞ்சீவும் சேர்ந்து கமெண்ட் மழை பொழிந்துக் கொண்டிருக்கிறார். தற்போது சீரியல்களில் ஆல்யா மானசா பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், மாதத்தில் 15 நாட்கள் சூட்டிங்கில் நடித்துக் கொண்டு இருந்தாலும் தனது மகளுக்கும் உரிய நேரத்தை கொடுக்க ஆலியா தவறுவதில்லையாம். சூப்பர் அம்மாதான்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications