கல்யாணத்துக்கு அம்மா ஒத்துக்கல.. வயசு வித்தியாசம்! “அன்பே வா” சீரியல் நடிகர் விராட் உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அன்பே வா" சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் விராட் இன்று அவர் காதலித்து வந்த "நவீனா" என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் "மகாபலிபுரத்தில்" நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விராட் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் தன்னுடைய திருமணத்திற்கு தன்னுடைய அம்மாவே சம்மதிக்கவில்லை என்றும் அதற்கு பிறகு வீட்டில் நடந்த பிரச்சனைகள் குறித்தும் விராட் மற்றும் அவருடைய மனைவி பேசியிருக்கிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வருணாக பலருக்கும் பரிச்சயமான நடிகர் விராட் இன்று அவர் காதலித்து வந்த நவீனா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். நவீனா பியூட்டிஷனாக இருந்து வரும் நிலையில் பல பிரபலங்களுக்கு பியூட்டிஷியன் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு ஆரம்பத்தில் விராட் வீட்டில் சம்மதிக்கவில்லையாம்.
விராட்டின் அம்மா இவர்களுடைய காதலுக்கு சம்மதிக்காததால் சில மாதங்கள் அவருடைய வீட்டிற்கே போகவில்லை என்றும் திருமணத்திற்கு பிறகு கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் மேலும் பேசுகையில் எனக்கு எங்க அம்மா தான் பொண்ணு பார்த்து கொண்டு இருந்தாங்க. எந்த பொண்ணும் சரியா அமையவில்லை. என்பதால் ஜோடி ஆப்பில் என்னுடைய பெயரை ரெஜிஸ்டர் பண்ணி வைத்திருந்தார்கள்.
எனக்கு அதில் பெரிய அளவில் விருப்பமில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் தான் நவீனா வீட்டிலும் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்திருக்கிறார்கள். ஒரு முறை அவருடைய அம்மா நீ யாரையாவது காதலிக்கிறாயா? இல்லன்னா உனக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேணும்னு சொல்லு என்று சொல்லி பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டில் அன்பே வா சீரியல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது.
என்னை பார்த்ததும் நவீனா இவரை போல மாப்பிள்ளை என்றால் எனக்கு ஓகே என்று சொல்லி இருக்கிறார். பிறகு நாங்கள் ஒரு முறை என்னுடைய தோழி ஒருவர் மூலமாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த நேரத்தில் நவீனாவின் வீட்டிற்கு நான் போகும் போது கூட அவருடைய அம்மா நீ அப்பவே சொன்னியே அதே பையன் தானே இது என்று என்னை பார்த்து கேட்டார்.
ஆனால் என்னுடைய அம்மாவிற்கு எங்களுடைய காதலில் நம்பிக்கை இல்லை. அதனால் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன். அவர் புரிந்து கொள்கிற மாதிரி தெரியவில்லை. அதனால் வீட்டிற்கு போனாலே சண்டை வரும் என்று நான் சில மாதங்கள் வீட்டிற்கு கூட போகாமல் இருந்தேன். அதற்கு பிறகு தான் அம்மா என்னுடைய காதலை புரிந்து கொண்டார்.
எங்க அம்மா என்னிடம் நீ உன் காதலில் உறுதியாய் இருக்கியா? இல்ல அந்த பொண்ணு மேல உனக்கு அபெக்க்ஷன் மட்டும் இருக்கிறதா? நீங்கள் எந்த மாதிரி காதலிக்கிறிங்க என்பதை புரிந்து கொள்வதற்காகத்தான் நான் உங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன் என்று அம்மா சொன்னாங்க. எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். நவீனா என்னோட வயதில் பெரிய பொண்ணு அதனாலயே எல்லோரும் இந்தக் கல்யாணம் அவசியமா? என்று கேட்கிறார்கள்.
அதிலும் நவீனாவின் அம்மா கூட எங்கள் இருவருடைய வயதை காரணம் சொல்லி திருமணம் வேண்டாம் என்று சொன்னார். ஆனால் இப்பொழுது எல்லாருடைய சம்மதத்தையும் பெற்று நாங்கள் திருமணம் செய்து இருக்கிறோம் என்று கண்ணீர் மல்க விராட் பேசி இருக்கிறார். அதோடு நான் நவீனாவை காதலித்து தான் திருமணம் செய்திருக்கிறேன்.
எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டு விலக மாட்டேன். அவள் பல ஏமாற்றங்களை பார்த்திருக்கிறார் என்று தன்னுடைய மனைவியை கட்டி அணைத்தபடி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications